ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2020
Home > உங்களுக்குத் தெரியுமா > அறிவு பரிமாற்றம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு

அறிவு பரிமாற்றம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு

நான் இப்பொழுது இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு ஏற்ப்பட்ட அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறேன். ஏராளமான ஸம்ஸ்க்ருத ஒலைச்சுவடிகள் இந்தியாவிலிருந்து சீன அறிஞர்கள் மூலமாகவோ அல்லது சீன அரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிஞர்களாலோ எடுத்துச் செல்லப்பட்டது. அதனால், நாம் முன்பு ஹுவான்-ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் பற்றி பேசினோம், அவர்கள் ஏல்லோரும் சீன அறிஞர்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். ஆனால், உண்மையில் இந்தியாவிலிருந்தும் ஏராளமான அறிஞர்கள், ஸமஸ்க்ருத பண்டிதர்கள் சீனாவிற்குச் சென்று அங்கேயே பல ஆண்டுகள் வாழ்ந்து மொழிபெயர்த்து ஏனென்றால் சீனர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மற்றும் எவ்வளவு அதிகம் முடியுமோ அவ்வளவு அதிகம் ஸமஸ்க்ருத நூல்களை சீன மொழியில் மொழிபெயர்ப்பது மிக மிக முக்கியமான காரியம். அதனால் நீ அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை மட்டும் கொண்டு உண்மையில் ஒரு முழு புத்தகத்தையே நிரப்பலாம்.

காஸ்யப மாதங்கா மற்றும் தர்மரத்னா ஆகியோர் முதலாவதாக சீனாவிற்க்குச் சென்ற இந்திய அறிஞர்கள், அவர்கள் சீனாவிற்க்குக் கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது, அவர்கள் முதலில் சீன துர்க்மேனிஸ்தான் மற்றும் கோபி பாலைவனம் வழியாகச் சென்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் சீன மொழியை கற்க வேண்டியிருந்தது அது ஸமஸ்க்ருத மொழிக்கு மிகவும் வேறுபாடானது. ஆனாலும் அவர்கள் அதை கற்றார்கள், அவர்கள் அதை கற்று முடித்த போது, பெரும் ப்ரளயம் தோன்றிய மாதிரி இருந்தது. ஓ! மேலும் பல அறிஞர்கள் அவர்களை பின் தொடர்ந்தார்கள் சங்க வர்மா, தர்ம காலா, மஹாமல்லா, விஞ்ஞா, தர்மபாலா – மற்றும் பலர், எல்லோருடைய பெயர்களையும் இங்கு நிரப்ப முடியவில்லை, அவர்கள் வடஇந்தியாவை மட்டும் சார்ந்தவர்களில்லை. உதாரணமாக, தர்ம ருசி என்பவர் தென் இந்தியாவை சேர்ந்த அறிஞர் அவர் சீனாவிற்க்குச் சென்று 20 ஆண்டுகள் வாழ்ந்து 53 நூல்களை சீன மொழியில் மொழிபெயர்த்தார். இதை அறிந்த பல மனிதர்கள் இருந்தார்கள் அவர்களுக்கு சீனாவில் நிறைய தேவை இருந்தது. அவர்கள் தங்களுக்கு இந்தியாவில் கிடைத்ததில் திருப்தி இல்லையெனில், அவர்கள் சீனாவிற்க்கு செல்ல விரும்பினார்கள்.. இது எப்பொழுதும் மகிழ்ச்சி தருவதில்லை ஏனெனில் தர்மக்ஷேமா என்ற ஏழ்மையான மனிதர் இரண்டு சீன அரசர்களால் விரும்பப்பட்டார், அதனாலேற்ப்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டார். இது வேறு பல அறிஞர்களுக்கும் நேரிட்டது.

ம்ற்றொரு அறிஞர் அமோகவஜ்ரா, இவர் இந்தியாவிலிருந்து 500 நூல்களை திரட்டிக்கொண்டு சீனாவிற்க்குச்சென்று அங்கு அதை மொழிபெயர்த்து சீன அரசர்களிடமிருந்து பல விருதுகளைப் பெற்றார் மேலும் அவர் புத்த மதத்தின் தந்த்ர மார்க்கத்தை தோற்றுவித்தார். அவரைப்பற்றிய மற்றொரு சம்பவம், அவர் மொழிபெயர்ப்பதில் பல ஆண்டுகளை செலவிட்டபின், அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு இந்தியாவிற்க்கு திரும்பும்பொழுது, இந்தியாவில் காலடியெடுத்து வைத்தவுடன் அவருக்கு மீண்டும் திரும்ப வேண்டுமென்று தகவல் வந்தது ஏனெனில் சீன் அரசர் அவரை திரும்ப வேண்டினார் அதனால் அவர் தன் குடும்பத்தை பார்க்காமல் மீண்டும் சீனாவிக்கு திரும்ப நேர்ந்தது.

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகத்திலிருந்த வானவியலாளர்களும், கணித மேதைகளும் சீன அறிவியல் துறைகளில் உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். பெரிய உதாரணம், கவுதம ஸித்தா, அவருடய சீனப்பெயர் குடன் ஸித்தா. உனக்கு சீனாவில் யார் யார் இந்திய அறிஞர்கள் / பேராசிரியர்கள் இருந்தார்கள் என்று தெரிந்திருக்க முடியாது, ஏனெனில் அவர்களுடைய பெயர் மாற்றப்பட்டிருக்கும், அவர்களுக்கு சீனப்பெயர் இருக்கும் அதன் காரணமாக நமக்கு சீனாவுக்குச் சென்ற அனைத்து இந்தியர்களின் பெயரும் தெரியாது. குடன் ஸித்தா, 8வது நூற்றாண்டில் சீன அரசின் வான்வியல் துறையின் தலைவர் ஆனார். அவர் இந்திய நவக்க்ரஹ நாட்காட்டியை சீன மொழியில் மொழிபெயர்த்தார். அவர் இந்திய எண்களை சீனாவிற்க்கு அறிமுகப்படுத்தினார் மற்றும் சீனர்களுடைய கண்டுபிடிப்பான அச்சகம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்குச் சென்ற பெளத்த அறிஞர்களை சார்ந்தது இன்று அச்சகம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதென்று நமக்கு தெரியும்ஆனால் அதற்கு காரணம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்குச் சென்ற பெளத்த அறிஞர்கள். அச்சுப்பதிப்பானது பெளத்த ஸித்தாந்தத்தை பரப்புவதற்க்கு கருவியாக பயன்பட்டது.

இது குமாரஜீவா என்பவருடைய சிலை, நம்மில் பலருக்கு அவரை பற்றி தெரியாது. ஆனால் சீனாவில் அவர் மிகவும் பிரபலம். அவர் வள்ர்ந்தது காஷ்மீர கலாச்சாரத்தில் மேலும் அவர் 100க்கும் மேற்ப்பட்ட ஸமஸ்க்ருத நூல்களை மொழிபெயர்த்துள்ளார் அவையெல்லாம் சீன இலக்கியங்களில் தலைசிறந்த நூல்களாக கருதப்படுகின்றன. “வைர சூத்ரம்” என்ற உயர்ந்த பெளத்த நூல் அவரால் மொழிபெயர்க்கப்பட்டது சீனாவில் சென்-ஜியாங்கில் இந்த பச்சைகுத்துதல், அவர் சீனர்களால் மிகச்சிறநத புத்திமானாக கருதப்பட்டார் மேலும் சீனர்கள் அவரை கெளரவப்ப்டுத்தினார்கள். ஆனால் நமக்கு அவரைப்பற்றி ஒன்றும் தெரியாது.

Leave a Reply

%d bloggers like this: