வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2019
Home > இந்திய ஞானம் > நாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி

நாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி

நானும் இந்த இடத்திற்குச் சென்று இருக்கிறேன்,  இது எப்படி இருந்தது என்று அறிந்து கொள்வதற்கு ஓரே வழி ஹுவான் ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் எழுதிய வரலாறுகளைப் படிப்பதுதான். அதனால் ஹுவான் ஸுவாங் என்ன கூறுகிறார் என்றால் இது அவர் பார்த்ததிலேயே மிக அழகான பல்கலைக்கழகம். இதன் கட்டிடத்தைச் சுற்றி மிக உயர்ந்த கதவுகள் இருந்தன். நாம் உள்ளே நுழையும்போது அப்பகுதி முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறைந்திருந்தன, குளங்களில் தாமரை மலர்ந்திருந்தது என்றும் பல உயர்ந்த கட்டிடங்கள் நிறைந்திருந்தன என்றும் அவர் கூறுகிறார். உதாரணமாக நூலகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டிருந்தது. அவர் முக்கிய கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் சென்றார் எனில், வெளியே பார்க்கும் போது அழகான சூரியன் மறையும் காட்சியையும் மற்றும் நிலாவால் ஒளிமயமான இரவுக் காட்சியையும் காணலாம் என்று அவர் கூறுகிறார். இவ்விடத்தில் படிப்பதை நினைத்து பெருமை கொள்வதை நீ காணலாம் என்று அவர் கூறுகிறார். பிறகு நுழைவாயிலில் பெரிய புத்தர் சிலை இருந்ததாகவும் மேலும் எட்டு அரங்கங்கள் அப்பல்கலைக்கழகத்தில் இருந்ததாகவும், தினமும் நூறு விரிவுரைகளாவது நடைபெறும் என்றும் விரிவுரைகள் நடைபெறும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருக்கும் என்றும் மாணவர்கள் ஒரு விரிவுரை கூட தவற விட மாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். நாலந்தா அந்த நாட்களில் பல துறைகளில் கல்வி புகட்டியது அதனால் அங்கு கற்பதற்கு என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு துறை இருந்தது.

அங்கு நிறைய மாணவர்கள் இருந்தார்கள் அதாவது 8500 லிருந்து 10000 மாணவர்களும் மற்றும் 1500 ஆசிரியர்களும் இருந்தார்கள். அதனால் மாணவர்-ஆசிரியர் விகிதாசாரம் மிக நன்றாக இருந்தது என்று கருதலாம் மேலும் நுழைவுத்தேர்வை நாம் மறக்கக்கூடாது. அது மிகவும் கடினம். அதிகபட்சமாக 20% மாணவர்களே தகுதி பெற முடியும், 80% மாணவர்கள் தகுதி பெற முடியாது. இதன் காரணமாக நாலந்தாவைச் சுற்றி நிறைய பல்கலைக்கழகங்கள் இருந்தன. விக்ரமசிலா, இந்த  பல்கலைக்கழகங்கள் ஓன்றுக்கொன்று குறைந்த தூரத்தில் இருந்தன ஏனென்றால் அவை நாலந்தாவிற்குத் தகுதி பெறாத மற்ற அதிக மாணவர்களை கவர்வதற்கு. அதோடு நாலந்தா இருக்கும் கிராமத்தைச் சுற்றிலும், கிராமத்திற்கு வெளியேயும் பல பயிலகங்களும் இருந்தன. ஆசிரியர்களைப் பற்றிய பல குறிப்புகளில் யாரெல்லாம் மாணவர்களை  நாலந்தா நுழைவுத்தேர்வுக்கு தயார் படுத்தினார்கள் என்றும் உள்ளது.

Leave a Reply

%d bloggers like this: