ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19, 2021
Home > பேச்சு துணுக்குகள் > ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆங்கிலத்தை திணித்தது ஏன்?

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆங்கிலத்தை திணித்தது ஏன்?

ஆங்கிலேயர்கள் ஏன் ஆங்கிலக் கல்வியை இந்தியாவின் மீது திணித்தார்கள்? இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக ஆங்கிலேயர்களின் வசதிக்காக, ஏனெனில் அவர்களுக்கு இந்திய மொழிகள் பயிலக்   கடினமாக இருந்தது. ஆங்கிலம் பேசும் அடிமைகள், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் லக்ட்சக்கணக்கான மக்களை ஆளப் பேருதவியாய் இருக்கும்.

ஆங்கில மொழியையும் ஆங்கில வழிக் கல்வியையும் திணிக்க மற்றொரு  வஞ்சகமான நோக்கமும் இருந்தது. அது இந்தியர்களை குறிப்பாக இந்திய சிப்பாய்களை தங்கள் தாய் மொழிக்கும் பண்பாட்டிற்கும் துரோகம் இழைப்பதற்கு. பிராந்தியக் கல்வியால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை ஆங்கிலேயர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். பிரிட்டிஷ் இராணுவத்தின் இந்திய சிப்பாய்கள் தங்கள் மொழியிலேயே தொடர்ந்து பயின்று வந்தால் என்றாவது ஆங்கிலேயர்களை எதிர்க்கக்கூடும் என்பதை நன்கு உணர்ந்தார்கள். இஸ்லாமிய சிப்பாய்கள், மற்றவர்கள் இஸ்லாமிய நூல்களைப்  படித்தால் அவரை அவிசுவாசி என்றும் ஹிந்து சிப்பாய்கள் மற்றவர்கள் சமஸ்க்ருத நூலை வாசித்தால் அதார்மீகர்களாகவும் எண்ணினார்கள்.

இந்நிலையில் ஆங்கிலேயர்கள் இதற்கெதிரான சூழ்ச்சியாக இந்திய பிரமுகர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து ‘கற்றறிந்த பூர்வீகர்கள்’ ஐ (learned natives)  உருவாக்கினார்கள். ஆங்கிலேயரின் கல்விக் கொள்கையை முறைப்படுத்துவதில் பங்களித்த சார்லஸ் டிரெவெல்யன் இந்த சூழ்சியைப் பற்றி கூறியதாவது “ஆங்கிலேயர்களைப் போலவே ஆங்கில இலக்கியம் கற்ற இந்தியர்களும் உயர்ந்தோரான ஆங்கிலேயர்களைப் பற்றி பேசுவார்கள், ப்ராஹ்மணர்களின் போதனைகளை நிராகரிப்பார்கள், பூர்வீகர்கள் நம்மை எதிர்க்க மாட்டார்கள், ஏனெனில் நாம் அவர்களை உயர்த்துவோம்”. தாமஸ் பைப்பிங்க்டோன் மெக்காலே வின் மைத்துனன் சார்லஸ் டிரெவெல்யன் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் அங்கிலிசிஸ்ட்ஸ் மற்றும் ஓரியண்டலிஸ்ட்ஸ் இடையே கிட்டத்தட்ட 15ஆண்டு ஆழ்ந்தாராய்வுக்குப்பின் எவ்விதமான கல்வி நிறுவனத்திற்கு நிதி உதவி செய்யவேண்டும்  என்று  தீர்மானிப்பதற்காக ‘தி மினிட் ஆப் மெக்காலே’ விநியோகிக்கப்பட்டது. “நமக்கும் நாம் ஆளும் லட்சக்கணக்கானோர்க்கும் இடையே பொழிபெயர்பாளர்களாக ஒரு வகுப்பினரை உருவாக்க நம்மால் இயன்றதை தற்போது செய்ய வேண்டும். இவ்வகுப்பினர் இரத்தத்திலும் நிறத்திலும் இந்தியர்களாகவும் கருத்துக்கள், அறநெறி மற்றும் அறிவாற்றலில் ஆங்கிலேயர்களாகவும் இருக்க வேண்டும். இந்த வகுப்பிற்கு, நாட்டினுடைய வட்டார மொழிகளையே புதுப்பிப்பதற்கோ, மேற்கத்திய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்ட விஞ்ஞான விதிமுறைகளை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு அறிவுரைகளை வழங்குவதற்காகவும் பட்டம் பொருத்திய வாகனங்களாக  இவர்கள் பணிபுரிவார்கள்.” என்கிறது மிக வஞ்சகமான மெக்காலே’ஸ் மினிட்ஸ்.

இவ்வாறாக ஆங்கில கல்வி சட்டம் 1835ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.பண்டையக் இந்தியக் கல்வி முறையை சீர்கெடச்செய்த இந்த நயவஞ்சக,  ஆங்கிலக் கல்வி கொள்கையின் அடிப்படைக் கோட்பாட்டை சஹானா சிங்க் அவர்கள் “பண்டைய இந்தியாவின் கல்வி பாரம்பரியம்” எனும் தலைப்பில் ஸ்ரீஜன் டாக்-இல் மேலும் விவரிக்கிறார்.

அவரின் முழுமையான உரையாடல் இங்கே:  https://srijantalks.org/2018/06/18/educational-heritage-of-ancient-india-a-talk-by-sahana-singh/

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.