வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6, 2019
Home > இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் > 1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை

1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை

தனது லண்டன் வருகையின் பொழுது தரம்பால் அவர்கள் அறிய ஆவணப் பொருட்களான 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செய்யப்பட்டஆய்வுகளை காண நேர்ந்தார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் திகைப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.அவர்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. பீகார் மற்றும் வங்காளத்தில் மட்டுமே 1,00,000 பாடசாலைகள் இருந்தன. இந்த பாடசாலைகள் படிக்கவும் எழுதவும் கற்பித்தன. எனவே கல்வியறிவு  மிகவும் அதிகமாக இருந்தது. மற்றப்பாடங்களுக்கிடையே மொழிகளையும் இங்கே கற்பித்தார்கள். ராமாயண-மஹாபாரதம்  மற்றும் கணிதம் கட்டாயப்பாடங்களாக இருந்தது. ஆசிரியர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கல்வி கற்பிக்க தலைசிறந்த வழிகளை பயன்படுத்தினார்கள். ஆகையால் அதிக மாணவர் வருகை இருந்தது.

இதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு யாதெனில் பெரும்பாலான பாடசாலைகளில் சூத்திரர்களே ப்ராஹ்மண வைஷ்யர்களைவிட அதிகமாக இருந்தார்கள். 70திலிருந்து 50து சதவிகிதம்வறை சூத்திரர்கள் பாடசாலையில் பயின்றதாக ஆய்வுகள் கூறுகின்றன.இது பல காலங்களாக இந்தியாவை சாதிய ரீதியில் பிரித்த கட்டுக்கதையை தகர்கிறது. அதேபோல் இப்பாடசாலைகளில் அதிக அளவில் பெண்களும் இருந்தார்கள்.

முக்கியப் பல்கலைக்கழகங்கள் இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டப் போதிலும், கிராமங்களில் பாடசாலைகளின் அளவில் இந்தியக் கல்விமுறை முழுமையாக தழைத்தோங்கியது என நிரூபணமாகிறது.

1800 களின் பிரிட்டிஷ் அறிக்கையில் காணப்படும் அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களை சஹானா சிங்க் அவர்கள் “பண்டைய இந்தியாவின் கல்வி பாரம்பரியம்” எனும் தலைப்பில் ஸ்ரீஜன்டாக்-இல் மேலும் விவரிக்கிறார்.

அவரின் முழுமையான உரையாடல் இங்கே:  https://srijantalks.org/2018/06/18/educational-heritage-of-ancient-india-a-talk-by-sahana-singh/

Leave a Reply

%d bloggers like this: