ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19, 2021
Home > அயோத்தி ராமர் கோயில் > தொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன?

தொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன?

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின்  ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் “அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு” என்ற தலைப்பில் உரையாடினார்.

டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி – பாபர் மசூதி அகழ்வாராய்ச்சியிலிருந்து இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான தொல்பொருளியல் கண்டுபிடிப்புகளை விவரிக்கும் டாக்டர் ஜெயின்ஸ் ஸ்ரீஜான் டாக்ஸின் ஒரு பகுதியை இங்கே காணலாம்

பாபர் மசூதி அடியில் மிகவும் பழமைவாய்ந்த கோவில் இருப்பதைப் பற்றி  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் பல சான்றுகள் வழங்கியும் இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் அதை ஏற்கமறுத்தனர். இந்த விவாதம் எந்தவித தீர்வுக்கும்  வராத நிலையில் அலகாபாத் உயர்நீதி மன்றம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை பாபர் மசூதிக்கு கீழ் கோவில் உள்ளதா என்று அகழ்வாராச்சி செய்யுமாறு உத்தரவிட்டது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு மிகக் கடுமையான அறிவுரைகளை  அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியது. அதன்படி  தினசரி கண்டுபிடிப்புகளை பதிவேட்டில் பதிவுசெய்து ஒரு பிரதிநிதி ராம ஜென்ம பூமியிலிருந்தும் ஒருவர் பாபர் மசூதியிலிருந்தும் அதில் கையெழுத்திட  வேண்டும்.

அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் அறிவுரைப்படி இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. இவ்வாராய்ச்சிகளிலிருந்து ராம ஜென்ம பூமி கி.மு. இரண்டாம் மில்லினியமிலிருந்து தொடர்ந்து ஆக்ரமிக்கப்பட்டு வந்துள்ளது என்றும் அது புனித ஸ்தலமாக இருந்துள்ளது எனவும் ஒரு பொழுதும் உறைவிடத்திற்காக பயன்பட்டதில்லை என்றும் தெரியவந்தது.

கி.மு.  முதலாம் மில்லினியம் (millenium), கி.மு. 2 ஆம் முதல் 1 ஆம் நூற்றாண்டு ஷுங்க காலம், கி.பி. 1 ஆம் முதல் 3 ஆம் நூற்றாண்டு குஷன் காலம், கி.பி. 4 ஆம் முதல் 6 ஆம் நூற்றாண்டு குப்தா காலம் ஆகிய காலங்களில்  ஆக்கிரமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. குப்தர்களின் காலத்திற்கு பிறகு இங்கு வட்ட செங்கல் கோவில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோவில் சிவலிங்க வடிவத்தில் இருந்தது  மற்றும் இங்கிருந்த நீர் வெளி செல்லும் துவாரம் அழியாமல் இருந்தது.

10 ஆம் நூற்றாண்டு  முதல் 11 ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலான  காலப்பகுதியில், ஒரு பெரிய கட்டிடத்தின், வட-தென் நோக்குநிலையில் சுமார் 50 மீட்டர் கோயில், எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோவில் அதிககாலம் நிலைக்கவில்லை என்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது. சோம்நாத் கோவில் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டது போலவே இக்கோவில் அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என தெரிகிறது.  இந்த 10 -11 ஆம் நூற்றாண்டு கோவில் அழிக்கப்பட்டதா? இந்த நேரத்தில் துருக்கியர்கள் இந்த பிராந்தியத்தில் தீவிரமாக இருந்ததால் இது மிகவும் சாத்தியம்.

பின்னர், இந்த 10 – 11 ஆம் நூற்றாண்டின் கோவிலின்  சிதிலிங்கள் மீது, மூன்று  நிலை  உடைய பெரிய கோவில்  12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இது மூன்று மாடிகள், ஐம்பது தூண்கள் மற்றும்  வட-தென் மற்றும் கிழக்கு-மேற்கு திசைகளில் குறைந்தபட்சம் 50 x 30 மீட்டர் அளவுகொண்டது.

இந்த மாபெரும் கட்டிடம் 16 ஆம் நூற்றாண்டில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு இதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது. பாபர் மசூதிக்கு எவ்வித அஸ்திவாரமுமின்றி இந்த மாபெரும் கோவிலின் சுவர்களின் மீது கட்டப்பட்டுள்ளது என்றும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.