ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19, 2021
Home > இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் > வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

 

ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார்.

வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம் இருந்துள்ளது. குரூ, கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்துள்ளது. இதற்கு கிழக்கே கங்கையின் மறுகரையில் பாஞ்சாலம் அமைந்திருந்தது. மற்றும் வடக்கே சிரிஞ்சயமும் தெற்க்கே மத்ஸ்யமும் அமைந்துள்ளது.  காந்தாரம், கைகேயம், மத்ரதேசம் வட ஜனபதாக்கள் மற்றும்  கோசலை, விதேகம், காசி கிழக்கு ஜனபதாக்கள் ஆகும்.

வெவ்வேறு பிராந்தியங்களுக்குச் செல்வதற்கான சில நெறிமுறைகளை விவரிக்கும் போது சிந்து, சௌவிர, சௌராஷ்டிர, அநார்த்த, அவந்தி, விதர்ப, மகத மற்றும் அங்க தேசங்களை கிருஷ்ண யஜுர்வேதத்தின் பௌதாயன சூத்திரம் குறிப்பிடுகிறது. இப்பகுதிகளை ‘சங்கீர்ணயோனையா’ அதாவது எல்லை ஜனபதாக்கள் என  பௌதாயனதர்ம சூத்திரம் கூறுகிறது.

வேதங்கள் ஆர்யவர்த்ததை தாண்டி இருக்கும் ஜனபதாக்களையும் விவரிக்கின்றன. தொலைதூரப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதற்கான நெறிமுறைகளை விவரிக்கும் போது, ​​ஆராட்ட, காரஷ்கர, புண்டரம், சௌவீரம், பங்கா மற்றும் கலிங்கத்தையும் பௌதாயனதர்ம சூத்திரம் கூறுகிறது. இவற்றில் ஆரட்டம் பற்றி பொதுவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆரட்டம் என்பது என்ன, எங்கேஇருக்கிறது? ஆரட்டம் என்பது நவீன ஈரானின் தென்மேற்குப் பகுதி. இது கி.மு. 3000-இல் சுமேரியன் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தில் இது ஜனபத்  என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், காரஷ்கரா, நவீன காஷ்கரை குறிக்கிறது, இது ஜனபதாவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் வேதங்களில் ஆர்யவர்த்தத்தின் ஜனபதாக்களையும், எல்லை ஜனபதாக்களையும் மற்றும் வெளியே உள்ள ஜனபதாக்களையும் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் வேதத்தில் பண்டைய இந்தியாவில் ஜனபதாக்கள் இருந்ததை ஸ்ரீஜன்டாக்-இல் “ஆரியவர்த்தின் புவியியல் (சிந்து சரஸ்வதி நாகரிகம்)” என்ற தலைப்பில் உறுதிப்படுத்தும்  உரையாடல் இங்கே: Link here

Translation credits: Priya Darshini C N

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.