ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2019
Home > அயோத்தி ராமர் கோயில் > அயோத்யாவில் நிஹங் சீக்கியர்கள்

அயோத்யாவில் நிஹங் சீக்கியர்கள்

1858 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, 25 நிஹங் சீக்கியர்கள் பாபர் மசூதிக்குள் நுழைந்து ஹோமம் மற்றும் பிற பூஜைகளை நடத்தி வருகின்றனர் என்று ஒரு எஃப்.ஐ.ஆர் அவதின் காவல்துறை அதிகாரியால் பதிவாகியுள்ளது. இதையடுத்து, 25 நிஹங் சீக்கியர்கள் மசூதியில் ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தி சுவர்களில் கரித்துண்டுகளால் “ராம்! ராம்!” என்று பொரித்ததாக அதே மாதம் 30 ஆம் தேதி பாபர் மசூதியின் கண்காணிப்பாளர் முறையீடு செய்துள்ளார். அதில் அவர், இந்துக்கள் பொதுவாக வழிபடும் ராம ஜென்மஸ்தானம் மசூதிக்கு வெளிப்புறத்தில் இருந்ததென்றும் ஆனால் தற்பொழுது இந்துக்கள் மசூதிக்கு உள்ளேயே வந்து வழிபடுவதாகவும் கூறியுள்ளார்.

இதை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன் வழங்கப்பட்டபோது, ​​அப்புகார் ஆவணத்தில் இன்னமும் இருப்பதால் அது மிகமுக்கியமான ஆதாரம் எனக் கருதப்பட்டது. மேலும் இந்துக்கள் மசூதி வளாகத்திற்குள் இருந்ததற்கும் மசூதிக்கு உள்ளே பிரவேசித்ததற்கும் இதுவே முதல் தனிப்பட்ட சான்றாகும். பொதுவாக ஹிந்துக்களுக்கு மசூதி வளாகத்தில் அனுமதியே இல்லை என்ற கூற்றே நிலவியது. இந்துக்கள் ஒரு காலத்தில் மசூதியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப இருந்தார்கள் என இந்த ஆவணம் தெளிவாக கூறுகிறது.

Leave a Reply

%d bloggers like this: