வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2021
Home > அயோத்தி ராமர் கோயில் > ராம ஜென்ம பூமியின் முதல் ஆயுதச்சண்டை

ராம ஜென்ம பூமியின் முதல் ஆயுதச்சண்டை

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின்  ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் “அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு” என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்தக் கட்டுரையில், அவர் அயோத்தியின்  முதல் ஆயுத மோதலைப் பற்றி விவரிக்கிறார்.

அயோத்தி வழக்கில், இந்த மோதலின் விவரங்கள் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் 1822 ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் அனுகூலமான ஒன்று. ஹபீஸுலல்லாஹ் என்ற நீதிமன்ற அதிகாரியின் மூலம் ஒரு குறிப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலை இடித்தபின் பாபர் மசூதி சீதையின் சமையலறையை (Sita ki Rasoi) அடுத்து கட்டப்பட்டதாக இக்குறிப்பில் கூறுகிறது. ராமர் கோவில் மற்றும் சீதையின் சமையலறை இரண்டும் இருப்பதை இந்தக்குறிப்பு  உறுதிப்படுத்துகிறது.

1855ஆம் ஆண்டில், 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கு முன்னதாக, பிரிட்டிஷ்  குடியிருப்பாளர் அவதின் நவாபிற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், குலாம் ஹுசைன் என்ற சுன்னி தலைவர், படைகளைச் சேர்த்துள்ளார் என்றும்  ஹனுமான் கடி (Hanuman Garhi) மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்றும் அந்தக் குடியிருப்பாளர் குறிப்பிட்டுள்ளார். ஹனுமான் கடி உள்ளே ஒரு மசூதி இருப்பதாகவும்  எனவே அதன் கட்டுப்பாட்டை அவர்கள் விரும்பியதாகவும் குலாம் ஹுசைனும் அவரது குழூவும் கோரினர். குலாம் ஹுசைன் தாக்குதலை நிறுத்துவதற்கு சில வலுவூட்டல்களை அனுப்புமாறு அந்த பிரிட்டிஷ் குடியிருப்பாளர் நவாபை கேட்டுக் கொண்டார். ஆனால் நவாப் எதுவும் செய்யவில்லை, பின்னர் அங்கே ஒரு சிறிய சண்டை மூண்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் குலாம் ஹுசைன் மற்றும் அவரது படையும் ஹனுமான் கடி மீது தாக்குதல் நடத்தியதால் ஹிந்துக்கள் அதற்கு பதிலடி கொடுக்க 70வது இஸ்லாமியர்கள் இறந்தனர்.

அதன்பிறகு, பிரிட்டிஷ் குடியிருப்பாளர் இரண்டு பத்திரங்களை, அவதின் நவாபிற்கு அனுப்பிவைத்தார். இப்பத்திரங்கள் ஹனுமான் கடியை கட்டுப்படுத்தும்  பைராகிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. முதலாவது பத்திரத்தில் பைராக்கியர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தவொரு பகைமையும் இல்லை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியபோதும், அவர்கள் கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே அதே விதமாக நடந்துகொள்வார்கள் என கூறுகிறது. இரண்டாவது பத்திரத்தில் அவர்கள் ஹனுமான் கடியில் உள்ளே மசூதி இருந்ததற்கான ஒரு தனிபட்ட  விசாரணைக்கு  விருப்பம் தெரிவித்திருந்தார்கள். ஹனுமான் கடி உள்ளே ஒரு மசூதி இருந்தது என்று இந்த விசாரணையில் தெரியவந்தால், எந்த சண்டையும் இல்லாமல், முழு வளாகத்தையும் ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்த நிலம் அவர்களுக்கு அவத் நவாபின் மூதாதையர்களலால் கொடுக்கப்பட்டது என்றும் அங்கு ஒரு மசூதி இருந்திருந்தால் அது அப்படி கொடுக்கப்பட்டிருக்காது என்றும்  அவர்கள் தங்களது வாதத்தை முன் வைத்தனர். முந்தைய நவாப்களிட்ட அணைகளின் நகல்களையும் அவர்கள் இணைத்து இருந்தார்கள்.

இது அவதின் நவாபிற்கு ஒரு தடுமாற்றத்தை தந்தது. அதனால் அவர் ஒரு சமரச முயற்சியாக ஹனுமான் கடிக்கு அருகில் ஒரு மசூதி கட்ட எண்ணினார். எனினும் பைராகிகள் இதை ஒப்புக்கொள்ளவில்லை.  இதற்கு ஒரு தனி குழு அமைத்தனர்.  அவர்களும் ஹனுமான் கடியில் ஒரு மசூதி இருந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கே வந்தனர்.  இந்த புதிய அறிக்கையினால் ஜிகாதிகள் கோபமடைந்தனர், அவர்களுடைய புதிய தலைவன் அமீர் அலி தலைமையில் ஜிகாதி படைகள் முன்னணிக்கு வந்தனர்.  அவன் ஹனுமான் கடியை தாக்குவதற்காக ஒரு பெரிய படையை திரட்டினான். பிரிட்டிஷ்காரர்கள் அவனை தடுத்து சமாதானம் செய்ய முற்பட்டதற்கு அவன் சம்மதிக்கவில்லை. அதனால் அவன் அயோத்தியை தாக்குவதற்கு முன் பிரிட்டிஷ்காரர்களால் கொல்லப்பட்டான்.  ஆகையினால் இதுவே அயோத்தியின் முதல் ஆயுத சண்டையாக 1855 ஆம் ஆண்டு  பதிவிடப்பட்டது.

Translation Credits: Priya Darshini C N.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.