செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021
Home > பேச்சு துணுக்குகள் > கிறிஸ்துவ-இஸ்லாமியத்தை விட சனாதனதர்மத்தில் கடவுள் ஒருமைப்பாடு என்ற உயர்ந்த எண்ணம் இருப்பது ஏன்? – மரியாவர்த்தின் உரையாடல்

கிறிஸ்துவ-இஸ்லாமியத்தை விட சனாதனதர்மத்தில் கடவுள் ஒருமைப்பாடு என்ற உயர்ந்த எண்ணம் இருப்பது ஏன்? – மரியாவர்த்தின் உரையாடல்

சனாதன தர்மம் ஏன் சிறந்தது, மற்றவைகள் ஏன் தாழ்ந்தது? ஏனெனில் மற்றவர்கள் ஒரு கதையின்மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவர்கள். இக்கதைகளுக்கான தக்க சான்றுகள் எதுவுமே இல்லை.  இவ்வித கண்மூடித்தனமான நம்பைக்கையின் விளைவுகள் தீங்கானவையாகவும் இருக்கும். நாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள், நாங்கள் மேம்பட்டவர்கள், உண்மையான கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே இந்தக்கொடுமையான குடியேற்றகோட்பாட்டிற்கு காரணம். இல்லையென்றால் இந்தக்குடியேற்றக் கோட்பாடு சாத்தியமாயிருக்காது என நம்புகிறேன். அதேபோல் இஸ்லாமியத்தை நம்பாதவர்கள் தரக்குறைவானவர்கள், அவர்கள் மனிதர்களே அல்ல என்று இஸ்லாமியர்கள் நம்பவில்லை என்றால் இஸ்லாமிய படையெடுப்புகள் நடந்திருக்கவே வாய்ப்பில்லை. இதனைத்தும் மிகவும் காட்டுமிராண்டித்தனமானாக இருந்துள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்தகாலத்தில், லட்சக்கணக்கானவர்கள் எந்த ஒரு சரியான காரணமுமின்றிக் கொல்லப்பட்டார்கள்.

கிறிஸ்துவமும் இஸ்லாமியமும் தங்கள் அனைவருக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறார் என்றும் மற்றவர்களுக்கு கடவுளே இல்லை என்றும் கூறுவார்கள். ஆனால் இறுதியில் இவர்கள் “ஒரே கடவுள்” கொள்கையை மழுப்புவது போல் தோன்றுகிறது. ஏனெனில் சனாதனதர்மத்தில் அனைத்தும் ஒன்றே, அனைத்தும் ப்ரஹ்மம். கிறிஸ்துவமும் இஸ்லாமியமும் கடவுள் என்பது ஒன்று என்றாலும், யாருக்கும் இதனுடன் ஒருமை கோரிக்கொள்ள முடியாது. கடவுளை தவிர தேவதைகள், சாத்தான்கள் மற்றும் மனிதர்கள் உள்ளது.

மதநல்லிணக்கத்தை பற்றி விவாதிப்போம், உணமையாக விவாதிப்போம். இதுவரை நடந்த மதநல்லிணக்க விவாதங்கள் மிகவும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. நான் இரு விவாதங்களுக்குச்  சென்றிருக்கிறேன். அங்கு கிறிஸ்துவத்தையும் இஸ்லாமியத்தையும் பரப்ப மட்டுமே செய்கிறார்கள். நான் ஒரு கட்டுரை எழுதினேன், அதில் நான் குறிப்பிட்டதுயாதெனில், “கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவத்தை போற்றுகிறார்கள், இஸ்லாமியர்கள் இஸ்லாமியத்தைபோற்றுகிறார்கள், இந்துக்கள் கிறிஸ்துவத்தையும் இஸ்லாமியத்தையும் போற்றுகிறார்கள்”.

தேஹ்ராடூனில் நான் ஒரு மதநல்லிணக்க விவாதத்தில் இருந்தேன். டெல்லியில் நடந்த விவாதத்தில் கேள்விகள் கேட்க அனுமதி இல்லை.   இங்கே கேள்விகள் கேட்க முடிந்தது. நான் கேட்ட கேள்விக்கு கிறிஸ்துவப் பாதிரியார் பதில் கூறாமல் அவரது சொந்த அனுபவத்தை கூற ஆரம்பித்துவிட்டார்: “இயேசுவுடன் என் அனுபவம் இப்படி இருந்தது”. இதைத்தான் அவர்கள் பொதுவாகவே கூறுவார்கள். உடனே நான் உங்கள் தனிபட்ட அனுபவமோ அல்லது உங்களது உணர்வையோ கேட்கவில்லை, உங்கள் கோட்பாடுகளை பற்றியே கேட்கிறேன் என்று கூறினேன். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. இதனால் அவர்களின் “ஒரே கடவுள்” கூற்று பொய்யானது. ஏனெனில் உண்மையான ஒருமைப்பாடு இங்கே பாரதத்தில் பண்டைக்காலம் தொட்டு இருந்து வருகிறது.

Translation credits: Priya Darshini C N

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: