சிவ ஆகமங்கள் பரமசிவனாராலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஆகமங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டன என அவற்றுள் முக்கியமான ஆகமமான, காமிக ஆகமம் விவரிக்கிறது. அதில் சிவனுக்கு ஐந்து முகங்கள் இருப்பதாக கூறுகிறது. இவை சத்யஜோத, வாமதேவ, அகோர, தத்புருஷ மற்றும் ஈசான முகங்கள் ஆகும். இந்த முகங்கள் மேலும் ஐந்து முகங்கள் கொண்டவை. ஆக மொத்தம் 25 முகங்கள். இம்முகங்களிலிருந்து லௌகீக, வைதீக, அத்யாத்மீக, அதிமார்க மற்றும் மந்திர ஆகமங்கள் வெளிப்படுத்தப்பட்டன. இவை வெறும் பெயர்கள் அல்ல ஆகம வகைகளாகும்.
சத்தியோஜாத முகம் 24 வேறுபாடுகளுடன் பூத தந்திரத்தை வெளிப்படுத்தியது. வாமதேவ முகம் 24 வேறுபாடுகளுடன் வாம தந்திரத்தை வெளிப்படுத்தியது. தத்புருஷ முகம் 24 வேறுபாடுகளுடன் கருட தந்திரத்தை வெளிப்படுத்தியது. மிக முக்கியமான விழிப்பூட்டும் முகமான ஈசான முகம் ருத்ர பேதம் மற்றும் சிவ பேதம் எனும் இரண்டு வகையான ஆகமங்களை வெளிப்படுத்தியது. ருத்ர பேதம் 18 மற்றும் ஷிவா பேதம் 10 ஆகும். யோகம், சிந்த்யம், கரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், ஷாசரம், அம்ஷுமம் மற்றும் காமிகம் ஆகிவை ஷிவா பேதங்களின் பெயரகள் ஆகும். இவைகளுள் காமிகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. இவ்வாகமம் மொத்தம் 25 ஆகமங்கள் என கூறுகிறது. எனினும் இவைகளை தவிர கூடுதலான ஆகமங்கள் மற்ற முகங்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆகமங்களின் ஆழத்தை உணர்த்துகிறது.
Translation credits: Priya Darshini C N.