செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை அவமதித்தல் > சபரிமலை – ஒரு உளவியல் கண்ணோட்டம்

சபரிமலை – ஒரு உளவியல் கண்ணோட்டம்

நான் இப்போது  சபரிமலை  விஷயத்தில் ஹிந்து எதிர்ப்பு பற்றி  பேசப் போகிறேன். ஒரு மனோதத்துவ  நிபுணரான எனக்கு இதில் சுவாரஸ்யமாக இருப்பது என்ன  என்றாலஂ  வரலாற்றிலேயே முதல்முறையாக  பெருவாரியான இந்துக்கள் ஒன்றுபட்டு கோவில்களை பாதுகாக்க திரண்டு இருப்பதுதான். ஹிந்துக்கள் உள்ளே   புகைந்து கொண்டிருந்த கோபம் ஒரு பேரியக்கமாக  உருவெடுத்துள்ளது. இந்தப் பேரியக்கம் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் தருணத்தில் நாம் இருக்கிறோம்  என்று நினைக்கிறேன். சபரிமலை விஷயத்தை புரிந்துகொள்ள  உளவியல்   ரீதியாக  அணுகி இருக்கிறேன். எதனால் எதிர்ப்பு வருகிறது ?  நாம் தனிமைப்படுத்தப்படும் போது. தனிப்பட்ட கோணத்தில் பார்த்தால் நமக்கு  பிரிவு ஏற்புடையதாக இல்லை. ஆனால் சமூகம் எப்படி ஒன்று கூடுகிறது  தன்னை எவ்வாறு அடையாளப் படுத்திக் கொள்கிறது  எனஂறு பாரஂதஂதாலஂ தனிப்பட்ட நபர்கள் ஆகிய நாம் அருகிலேயே வசிப்பதால்  ஒரு சமூகம் ஆகிறோம். அவ்வாறு ஆகும்போது ஒரு பிணைப்பு உருவாகிறது.   பெனிடிகடஂ ஆணஂடரஂசனஂ எழுத்துக்களை  படித்தாலஂ  நாம் எவ்வாறு ஒன்று சேர்கிறோம் என்பது விளங்கும் .  பிணைப்பு உருவான  சில காலம் கழித்து பிரிவுக் காலம் வருகிறது. உலகில்   எங்கெல்லாம் பிரிவுகள் வருகிறதோ அது ஏதோ ஒரு கட்டாயத்தினால் உருவாகிறது. அப்படிப்பட்ட பிரிவு நமக்கு ஏற்புடையதாக இல்லை. பிரிவும்  எதிர்பாரா விதமாக உருவாகிறது. இதை நமது வாழ்க்கையில் பார்க்கலாம். ஒரு  முன்னறிவிப்பும் இல்லாமலே தான் வருகிறது. இதுதான் சபரிமலையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஹிந்துக்கள்   500   ஆண்டுகள் கட்டிக்காத்த பாரம்பரியத்திலிருந்து  பிரிவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த   பிரிவு  அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இது சரியா தவறா என்று பார்ப்பதற்கு முன் இந்தப் பிரிவு என்பது எதிர்பாராத ஒன்று  என்று தான்  நான் சொல்லுவேன். இது திணிக்கப்பட்ட ஒன்றாகும். ஒருபுறம் மக்கள் இந்தப் பிரிவை ஏற்க மறுக்கின்றனர்.  மறுபுறம், “ இந்தப் பிரிவு நல்லது;  ஏனென்றால் இந்தப்   பிரிவினால்  யாருக்கும் பாதிப்பு இல்லை” என்று கூறுவதும்  தவறு. இதை உளவியல் ரீதியாக பார்த்தோமேயானால்  துக்கத்திற்கு வழி வகுக்கிறது.
பிரிவு என்பது   துக்கத்தை  ஏற்படுத்தும் ஒரு கருவியாகும். எப்பொழுதெல்லாம் பிரிவு உருவாகிறதோ  அப்போது துக்கம் வருகிறது. இதேதான்  இப்போது நமது சமூகத்திலும்  நடந்து கொண்டிருக்கிறது. நாம் ஒரு பிரிவை  எதிர்நோக்கி  சென்று கொண்டிருக்கிறோம்.  நாம் நமது  கோவில்களில்    இருந்து  தனிமைபடுத்தப் பட்டு இருக்கிறோம். நமது  புனித  இடங்களும்   நம்மிடமிருந்து  பிரிக்கப்பட்டிருக்கின்றன.   நமது     கலாச்சாரம்  நம்மிடமிருந்து  பிரிக்கப்பட்டிருக்கிறது.  இது  நமது பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆங்கிலேயர்கள்  நம்மை ஆண்டபோது நமது  பாரம்பரிய   பள்ளிகளுக்கு  தடை போட்டார்கள்.  அதைத் தொடர்ந்து  அவர்கள்  பள்ளிக்கூடங்களிலே தான்  நாம்  படிக்க வேண்டும் என்றார்கள் .  இதே மாதிரி   நாம் பல வகையான  பிரிவுகளை தொடர்ந்து சந்தித்துக்கொண்டே  வந்திருக்கிறோம். ஆனால்  ஒரு போதும் துக்கப் படவில்லை. துக்கத்தை உள்ளேயே   அடக்கி வந்துள்ளோம் . அந்த துக்கம் தான் இப்போது தேசிய உணர்வினால்  வெளியே வந்திருக்கிறது.

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது துக்கத்தின் பல நிலைகளை.  முதல் நிலை மறுப்பு ஆகும். நமக்கு இது என்ன என்று தெரியும்.  ஒரு கெட்ட  செய்தி அல்லது துயரமான  சம்பவத்தை கேட்க  நேரிடும்போது நாம் என்ன செய்கிறோம் ?
“ இல்லை , இது உண்மை இல்லை , இது நடக்கவே நடக்காது “  என்று நமக்கு நாமே  சொல்லிக் கொள்கிறோம் .இந்த மறுப்பை வைத்து  நம்மை  நாம் காத்துக் கொள்கிறோம்.   அதன்பின்  கோபம்,  மற்றும்  துக்க  நிலைக்கு  போகிறோம். நமது சமூகம், ஹிந்து சமூகம் , தன் கோவில்கள்  அழிக்கப்படுவதை கண்ட   போது  தன் கோபத்தை  அதனால்  வெளிக்காட்ட முடியாமல் துக்க நிலைப்பாட்டை எடுத்தது. உதாரணத்திற்கு ஔரங்கசீப் ஆட்சிக்காலத்தில் சமூகத்தால் தன் கோபத்தை காட்ட முடியவில்லை. அதனால்  துக்கம் உள்ளுக்குள்ளேயே  புதைந்து இருந்தது.  அதனால்  ஒருவிதமான  உள்நோக்கிய பார்வையை  மேற்கொண்டோம். நமது நடவடிக்கைகளை   ஒரு எல்லை அமைத்து  நமது  வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டோம். இதனால் நாம் கோபம்,  துக்கம்,  பயம்  ஆகிய  உணர்வுகளை  ஒரு சமூகமாக வெளிக்கொணர  தவறிவிட்டோம்.  இத்தகைய  பிரிவு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது ,  நாளையும்  நடக்கும். அவ்வாறு நடக்கும் போது நாம் கோபம் கொள்வோம் ,  போராடவும்  செய்வோம் ;   இப்போது சபரிமலையில் நடப்பது போல!

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: