ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2021
Home > இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் > காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும்.

இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும் அறிகுறிகளை  எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.   பெரும்பான்மையானவர்களுக்கு  தூக்கமே வருவதில்லை.   பலருக்கு  கொடும் கனவுகள் வந்தன.  இதைப்பற்றி அவர்களுடன் பேசியும்  ஆறுதல் கூறியும் வந்தோம்.  என்னென்ன பயிற்சிகள் இத்தகைய அறிகுறிகளை குறைக்க உதவும்  என்பதையும் சொல்லிக்கொடுத்தோம்.

ஒரு நாள் முகாமிற்கு வெளியே   காஷ்மீரி உடை அணிந்த  ஒரு வயதானவரை  பார்த்தோம். பார்ப்பதற்கு கண்ணியமாக  தெரிந்தார். அவர் எங்களை அணுகி  “நீங்கள் ஏன் இங்கு  வருகிறீர்கள்?”  என்று வினவினார்.   நான்  சொன்னேன் “நாங்கள் இங்கு வருவது   இங்குள்ள  காஷ்மீரிகளின் மன உளைச்சலுக்கு முடிந்த உதவியை செய்வதற்குத்தான்” என்று . அவர் சிரித்தார்.  பின்  என்னை  கூர்ந்து நோக்கி ” உங்களுக்கு  நாங்கள் படும் மனத் துயரம் என்ன என்று புரியுமா?”  என்று கேட்டார்.  நான் எனக்குள்ளேயே நினைத்துக்கொண்டேன் “ இவர் என்ன சொல்ல வருகிறார்?  இவர் இந்த உரையாடலை எத்திசையில் கொண்டு செல்ல  நினைக்கிறாரோ  அது எனக்கு ஏற்புடையதாக இல்லை “. அதனால் அவரிடம் “ எங்களால் ஆன அளவு புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்  என்று சொன்னேன். அவர் பதில் கேள்வி கேட்டார் “நீங்கள் நடத்தும் பயிற்சி  முகாம்களை   காஷ்மீரிகள்  விரும்புகிறார்களா? ” .  நான் சொன்னேன்  “ ஓரளவு மக்கள் வருகிறார்கள். நாங்கள் சொல்வதை கேட்கிறார்கள்.”  அவர் திரும்பவும் அதே கேள்வியை கேட்டார்  “ உங்களுக்கு நாங்கள் படும் மனத் துயரம் என்ன என்று நிஜமாகவே புரியுமா?”     “ நாங்கள் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் நீங்கள் வேறொரு யோசனை கூறினாலஂ அதையுமஂ செய்து பார்க்கிறோம்” என்று நான்   பதில் அளித்தேன்.

நாங்கள் ஒரு மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தோம் . அங்கே இருந்து ஒரு முகாமை எனக்கு காட்டி, ” இந்த முகாமிற்கு என்ன பெயர் தெரியுமா?. என்றார் .  நான் சொன்னேன், “முட்டி”. அவர் அதை மறுத்து, “நாங்கள் அதை எவ்வாறு அழைக்கிறோம் தெரியுமா?” என்றார். தெரியாது எனஂறேனஂ.
அவர் பதிலளித்தார்,  “நாங்கள் இதை அவுரங்கசீப்பின் கனவு என்று அழைக்கிறோம்”. நான் அதிர்ச்சி அடைந்தேன்,” என்ன அவுரங்கசீப்பின் கனவா!?” . அவர் மறுபடியும் வலியுறுத்தினார்,  “ஆம் நாங்கள் இதை அவுரங்கசீப்பின் கனவு என்று தான் சொல்கிறோம் அது ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா?” என்றார். நான் இல்லை என்றேன். உடனே அவர்,” அப்படி என்றால் இதைப் பற்றி முதலில் ஆராய்ச்சி செய்யுங்கள் உங்களுக்கு நாங்கள் ஏன் அப்படி ஏன் அழைக்கிறோம் என்று புரிந்து விட்டால் உங்கள் வகுப்புகளுக் கு ஒருவேளை நல்ல வரவேற்பு கிடைக்கலாம்” என்று சொன்னார்.

மேலைநாட்டில் பயின்ற என்னிடம் அவர் அப்படி சொன்னதை அவமானமாக எடுத்துக் கொண்டேன். இவர் இப்படி சொல்லிவிட்டாரே சரி இவர் சொன்ன கோணத்தையும் ஆராய்ந்து பார்க்கலாம் என்று முடிவெடுத் து அவுரங்கசீப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். எனக்கு ஒரு மாதிரியாக தெரியும் அவுரங்கசீப் இந்து மதம் மீது துவேஷம் கொண்டவர் என்று. ஆனால் இந்த ஆசிரியர் வலியுறுத்தியதால் அவுரங்கசீப்பை பற்றி தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் கண்டுபிடித்தேன் அவுரங்கசீபிடமஂ  சொல்லி இருக்கிறார்கள் காஷ்மீரி பண்டிதர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றினால் இந்தியாவை மதமாற வைத்துவிடலாம் என்று. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது . இதைக் கேட்ட அவுரங்கசீப் தனது அதிகாரியிடம் எந்த உத்தியை வேண்டுமானாலும் கையாண்டு காஷ்மீரி பண்டிதர்களை மதமஂ மாறஂறுஙஂகளஂ என்று ஆணையிட்டான்.

இதைக் கேள்விப்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் பண்டிதரஂ கிருபா ராமஂ  தலைமையில் ஒன்பதாவது சீக்கிய குருவான தேக் பகதூரிடமஂ சென்று உதவி கோரினர்.  அவரும் காஷ்மீரி அகதிகளின் சார்பாக அவுரங்கசீப்பை சந்தித்தார். இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. குருவை மதம் மாற்றும் முயற்சி தோல்வி அடைந்ததால் அவுரங்கசீப் அவரை ஆணையிட்டான். குருவின் இந்த உயிர் தியாகத்தால் அந்த சம்பவத்தினால் தாங்கள் பிழைத்ததாக கூறுகின்றனர்.

இதை படித்த பொழுது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. திரும்ப முகாமிற்கு போனபோது அகதிகளிடம் அவுரங்கசீப் பற்றி படித்ததை நான் விவரித்தேன். நான் என்ன புரிந்து கொண்டேன் என்று சொன்னவுடன் அவர்களிடையே ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்தது போல் தோன்றினார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு ஏற்பட்டதை அவர்கள் உணர்ந்தார்கள். “இப்பொழுதுதான் நீங்கள் எங்களை புரிநஂது  கொண்டிருக்கிறீர்கள்!” என்று ஒருவர் காஷ்மீரியில் சொன்னார். உடனே எல்லோரும் தம் மன கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர் .
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினர். சில பெண்களும் தாங்கள் எவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்பதை விவரித்தனர்.

ஒரு பெரிய மாற்றம் வந்தது. இந்த நிகழ்ச்சி எனகஂகு ஒரு பாடமாக அமைந்தது. உளவியல் அறிகுறிகளால் மட்டுமே பிரச்சினையை பார்த்து வந்த நான்  இதற்குப் பிறகு வரலாறஂறிறஂகுமஂ கணிசமான பஙஂகு  உணஂடு என்பதை புரிந்து கொண்டேன். இதற்குப் பிறகு நான் எங்கு வேலை செய்தாலும் மன அதிர்ச்சி ஏற்படுத்தும் தாக்கத்தை போக்க வரலாறு அறிந்திருப்பதும் முக்கியம் என உணர்ந்தேன்.

பல வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சீக்கிய குடும்பத்தை நேர்காணல் செய்ய நேர்ந்தது. அவர்களைப் பற்றி அறிய அக்குடும்பத்தின் மூத்தவரிடம் “எனக்கு உங்கள் குடும்ப வரலாறு வேண்டும்” என்று  சொன்னேன். அவர் என்னை பார்த்துவிட்டு கேட்டார், “என்ன எழுதப் போகிறாய்?! பேசாமல் நாட்டுப் பிரிவினையால் அவதிப்படும் குடும்பம் என்று எழுது”.  நானஂ  என்ன நடந்தது என்பதை எழு தியே ஆக வேண்டும் என வலியுறுத்தினேன். அவர் திரும்பவும் சொன்னார், “பிரிவினையால் அவதிப்படும் குடும்பம் என் றே எழுது” . அவருக்கு தன் குடும்பத்தைப் பற்றிய அடையாளம் அதுதான். நாம் எப்பொழுதும் நமக்குள்ளேயே தாங்கிக் கொண்டிருக்கும் மனதஂதுயரதஂதினஂ மூலம் வரலாறு தான்.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: