புதன்கிழமை, ஜனவரி 22, 2020
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை அவமதித்தல் > ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே? இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த இடத்தின் மூலைமுடுக்கெல்லாம் அத்துப்படி.

எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் ஒரு மேல்நாட்டு வெள்ளைக்கார தம்பதியினர் அவர்களின் வழிகாட்டியிடம் விவாதித்துக் கொண்டிருந்தனர். வழிகாட்டி அவர்களிடம்,  “இதுதான் இங்கே இருக்கும் கோவில்களிலேயே பெரியதும் அழகானதும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே அவர்கள் தங்கள் கையிலிருந்த புத்தகத்தைப் படித்துவிட்டு,  “இது புதிய கோவிலாகும் . 1939இல் கட்டப்பட்டது” என்று பதிலளித்தனர். வழிகாட்டியிடம் தங்களை தென்னிந்தியாவில் உள்ளது போல பழமையான அழகான கோவில்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரினர். வழிகாட்டி, “அந்த மாதிரி கோவில் இங்கு ஒன்றும் இல்லை; வேண்டுமானால் யோக மாயா என்னும் சிறிய கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார். அவர்களும் விடாமல், “டெல்லி இந்துக்கள் நகரம். இங்கே நாங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையான  மசூதிகளை பார்த்தோம்;  ஆனால் அது மாதிரி பழமையான கோவில்கள் இல்லையே” என்றனர். அதற்கு வழிகாட்டி, “ஆமாம் பல நூற்றாண்டுகளாக நாங்கள் பெரிய கோவில் ஒன்று கூட கட்டவில்லை தான். கோவில்கள் சிறியதாக இருப்பதற்கு காரணம் கோவில் கோபுரம் என்ற விதிமுறை தான்.”  எனக்கு இன்றும் நினைவில் உள்ளது, அவர்களஂ விடாமல் கேட்ட கேள்விகளஂ, “அதாவது உங்கள் நாட்டிலேயே நீங்கள் இரண்டாம் தர குடிமக்களாக இருந்தீர்களா? அதை எபஂபடி ஏறஂறுகஂகொணஂடீரஂகளஂ? மற்ற பெரிய கோவில்களை பார்க்கிறபோது என்ன உணர்ச்சிகள் தோன்றும்?” வழிகாட்டி “என்னால் அதற்கு பதில் அளிக்க முடியாது” என்றார். சுற்றுலா தம்பதியினரும் அங்கே இருந்து நகர்ந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு நான் என் தந்தையிடம் இதைப்பற்றி விவாதித்தேன். என் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். அவர் என்னிடம், “நாம் இதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது” என்றார். உடனே நான் சொன்னேன், “அப்பா நாம் 800 900 ஆண்டுகளாக பெரிய கோவில் கட்டவில்லை என்பது உண்மையா? அப்படி கட்டினால் அவர்கள் அதை இடித்துவிடுவார்கள்  என்ற பயமா?” என இழுத்தேன். அவர் மறுபடியும், “இதைப்பற்றியெல்லாம் யாரிடமும் பேசக்கூடாது” என்றார்.

நானும் விடாமல், “ஏனப்பா நாம் இப்போதும் பயப்பட வேண்டும்?” என்றேன். நான் வளர வளர இந்தக் கேள்வி என்னை விட்டு அகலவில்லை. என் நண்பனாகிய கல்லூரி பேராசிரியரிடம், ”1939இல் கட்டப்பட்ட இநஂத கோவிலைபஂபறஂறி நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டேன். அவர் அதற்கு “தேசியவாதம் தந்த தைரியத்தினால் தான் இந்துக்கள் இந்தக் கோவிலை கட்டியிருக்கிறார்கள். இந்தக் கோவிலை வடிவமைத்தவர் இவ்வளவு காலம் கழித்து இவ்வளவு பெரிய கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்ற உணர்ந்தபோது ஆனந்தக் கண்ணீர் வடித்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

%d bloggers like this: