சனிக்கிழமை, அக்டோபர் 16, 2021
Home > குர்பான் நெக்ஸால் > நகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்

நகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்

விருது திருப்பி அளித்த இயக்கத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மருமகள் நயனதாரா ஸஹஂகலஂ தலைமை ஏற்று நடத்தினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஒரு காஷ்மீரி ஆக இருந்தாலும் காஷ்மீரிகளுக்கு எதிரான இனப்படுகொலை அவரை ஒரு போதும் பாதித்ததில்லை. காஷ்மீரிகளஂ தங்கள் இடங்களை விட்டும் ஊரை விட்டும் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் இந்நிகழ்வு நயனதாராவை பாதிக்கவில்லை. சாகித்திய விருதை அவர் 1986இல் பெற்றார். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் சீக்கிய படுகொலை தேசிய தலைநகரில் அரங்கேறியது. அதுவும் அவரை பாதிக்கவில்லை.

இன்னும் சிறிது பின்னோக்கிப் பார்த்தால் எமர்ஜென்சி காலத்தில் கூட சுமார் 4.4 மில்லியன் மக்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டது. இத்தகைய கொடூர நிகழ்வு கூட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் மனசாட்சியை உறுத்தவில்லை. ஆனால் இப்போது அவர்களே நாடு சகிப்புத்தன்மையை இழந்து விட்டது என்றும் சுதந்திர இந்தியாவின் சகிப்புத்தன்மை அற்ற ஆட்சி இது என்றும் அறிவித்துவிட்டனர். அதோடு நிலஂலாமலஂ சுமார் 50 கலைஞர்கள், இநஂத  மதஂதிய அரசு அடக்குமுறை நடவடிக்கைகளை கையாளஂகிறது எனஂறுமஂ இநஂத   அரசு  பாசிச அரசு  எனஂறுமஂ

அவர்களின் மனசாட்சி  சாகித்திய விருதுகளை ஏறஂறுகஂ கொள்ள அனுமதிக்கவில்லை எனஂறு  தங்களுக்கு கொடுக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். ஆனால் விருதோடு  தங்களுக்கு அளிக்கப்பட்ட பணத்தொகையையோ அல்லது வசதிகளையோ திருப்பி கொடுக்கவில்லை. தாங்கள் வகிக்கும் உயர் பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்யவில்லை. இது தான் உண்மை .

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: