Translation credits: Priya Darshini C N
மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து தர்ம விவகாரங்களின் நிலையை பார்ப்போம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. வாராவாரம் திருப்பதி கோவில் அர்ச்சகர் சர்சையைப் பற்றி கேள்விப்படுகிறோம். இதற்கு பல கோணங்கள் உள்ளது – மந்திரம் ஓதத் தடை போல பல பிரச்சனைகள். கோவில்களை வணிகமயமாக்குதல் அதாவது பல்வேறு சேவைகள், பூஜைகளுக்கு விதவிதமான கட்டணம் வசூலிப்பது. இது மக்களை ஒரு சில சேவைகளை மட்டுமே பெற தூண்டுவதோடு மேலும் தவறுதலாகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இப்பழக்கம் தென் இந்திவாயில் அதிகம் இருக்கறது. ஏனெனில் இங்கே பல கோவில்கள் மாநில கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய மற்றும் மிகமுக்கியமான பக்க விளைவாகும். இதுபோன்ற சட்டங்களின் முக்கிய விளைவு என்று கூட கூறலாம்.
ஒரு கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்பது நமக்கு தெரியாது ஆனால் அது தெரியும் முன்பே அது பறிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் விசித்திரமாக உள்ளது. பாரத தேசத்தின் வரலாற்றில் அரசர்கள் நிலங்களை தானமாக கொடுத்தார்கள், நிலங்களை கோவில்களுக்காக கொடுத்துத்தார்கள். கடந்த எழுபது ஆண்டுகளாக இதற்கு நேர்மாறாகத்தான் நடந்து கொண்டு வருகிறது. அதாவது கோவில் நிலங்கள் காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
இதைத்தவிரு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. சுருக்கமாக சொன்னால் பராமரிப்பு மிகவும் மோசமமாக உள்ளது. கோவில்களில் உள்ள நிர்வாக பிரச்னையை ஒழிப்பதற்கு பதிலாக அதை மேலும் பெரிதாக்குகிறது அரசாங்கம்.
இவை எல்லாவற்றையும் விட மோசமான பயங்கரமான ஒரு செயலை அரசாங்கம் செய்து வருகிறது. அது இந்துக்கள் அல்லாதவர்களை கோவில் மன்றப் பணியில் அமர்த்துவது. இதற்கு திருப்பதி தேவஸ்தானம் போன்ற மாபெரும் கோவில்கள் கூட விதிவிலக்கில்லை.