Translation credits: Priya Darshini C N
இவை எல்லாவற்றின் விளைவாக சாசனத்தின் ஒரு பகுதியாக நாம் கோருவது யாதெனில் சட்டப் பிரிவு 26-ஐ திருத்துவது. இதில் எந்த ஒரு மதசார்பற்ற செயலுக்கும் அரசாங்கம் தலையிடலாம் என்று உள்ளது. நாம் கோரும் மாற்றும், எந்த ஒரு மத நிறுவனத்தையும், அரசாங்கம் நடத்தவோ நிறுவகிக்கவோ கூடாது என்பதுதான்.
வரிகளுக்கான சட்டம், குற்றவியல் சட்டம் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. நிர்வாகப் பிரச்னைகளின் பேரில் இச்சட்டங்களை பயன்படுத்தி சரியான திருத்தங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வணிக நிறுவனங்களுக்கும் இது போல் சிறப்பான சட்டங்கள் கிடையாது அதேபோல் இதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். அரசாங்கம் முழுவதாக விலகுவதை உறுதி செய்ய இந்திய தேசத்தில் செயலாக்குவிக்கப்பட்ட எந்த சட்டமும் இந்நிலையில் செல்லாது. உதாரணத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் செல்லுமா என கேள்வி எழும். இதை தவிர்க்கவே இதற்கு முன் கூறிய பிரிவை சேர்க்க விழைகிறோம். இதனால் எதிர்காலத்தில் நம் கோவில்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ள முடியாது. அதுவே இந்த கோரிக்கையின் சுருக்கும். அரசாங்க உரிமையைத் திரும்பப் பெறுங்கள், இருக்கும் எல்லா சட்டங்களையும் ரத்து செய்யுங்கள், எதிர்காலத்தில் எந்தவொரு சட்டத்தையும் உருவாக்க உங்களுக்கு உரிமை இருக்கக்கூடாது.