புதன்கிழமை, அக்டோபர் 20, 2021
Home > அயோத்தி ராமர் கோயில் > அயோத்யா ராம் ஜென்ம பூமி — ஒரு ஆழமான நம்பிக்கையின் அழிவும் அதை மீண்டும் புதியதாக ஆக்க வேண்டிய தேவையும்—ஒரு உளவியல் ஆய்வு.

அயோத்யா ராம் ஜென்ம பூமி — ஒரு ஆழமான நம்பிக்கையின் அழிவும் அதை மீண்டும் புதியதாக ஆக்க வேண்டிய தேவையும்—ஒரு உளவியல் ஆய்வு.

Translation Credits: Geetha Muralidharan.

நம் எல்லோருக்கும் அடால்ப் ஐய்க்மான் பற்றி தெரியும்.அது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற வழக்காகும். அது கிடியன் ஹஸ்னெர் என்ற உலக புகழ் பெற்ற வழக்கறிஞரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கை தவிர நாஜிக்கள் மீது நடத்தப்பட்ட நூறன்புர்க் வழக்கே மிகப்பெரிய வழக்காக காணப்பட்டது. ஆனால், வழக்கில் இருந்த நிகழ்வுகளால் இந்த வழக்கே மிகப்பெரிய வழக்காக அறியப்பட்டது. வழக்கில் ஐக்மனின் குற்றத்தை நிலை நிறுத்துவது கடினமானது இல்லை என்று அவர்களுக்கு புரிந்தது. போதுமான அளவு நிரூபணங்களும்,சாட்சிகளும், புள்ளிவிவரங்களும் இருந்தன. ஆனால் யூத மக்கள் மிகவும்கவலைப்பட்டனர். சாட்சி, எண்ணிக்கை, ஆவணங்கள் கொண்டு நடத்தப்பட்டால் வழக்கு இறந்து விடும் என்று அவர்கள் எண்ணினார்கள்.அது மனித இனத்திற்கு விரோதமாக அமையும் என்று எண்ணினர்.இந்த வழக்கு எண்ணிக்கை, புள்ளிவிவரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். இந்த வழக்கு யூதர்களுக்கு வாழ உரிமையில்லை, அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டும் என்ற குறிக்கோளை பற்றியதாகும். எனவே வழக்கு எண்ணிக்கை, புள்ளிவிவரம் ஆகியவை பற்றியது அல்ல, முற்றிலும் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் பற்றியது.

யூதர்கள் தங்கள் அடையாளத்தை மீண்டும் பெற இந்த வழக்கு அவசியமாகும். மன அதிர்ச்சி பற்றிய என் ஆராய்ச்சி  மற்றும் புரிதல்  காரணமாக நான் இந்த வழக்கை பற்றி படிக்கும் போது இதை பலமுறைகள் படித்தேன். நான் பாபரி மஸ்ஜித்-ராம் ஜென்ம பூமி வழக்கையும்  படித்தேன். இவை இரண்டிலும் இணைகள் பலவற்றை கண்டேன்.ராமஜென்ம பூமியில், ராமன் அங்கு பிறந்தாரா இல்லையா என்பது வழக்காக ஆகிவிட்டது மன்னிக்கவும், நான் ஸ்ரீ ராம் என்று சொல்லி இருக்கவேண்டும், ஸ்ரீ ராமனின் பிறந்த இடம், ராமனின் பிறந்த இடம் என்று சொல்லி இருக்க கூடாது. அது ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தை திரும்ப பெறுவது பற்றி அல்ல, ராமனின் பிறந்த இடம்,மற்றும்  கோவில்  பற்றியது.இந்த வழக்கு, ஸ்ரீ ராமனின் பிறந்த இடம் பற்றியதோ அல்லது அவர் கோவில் பற்றியதோ அல்ல, அந்த கோவிலை அழித்தததால் தொலைந்து போன ஹிந்துக்களின் அடையாளம் பற்றியது.அது ஒரு புனிதமான இடம். ஹிந்துக்களின் அடையாளத்துடன் தொடர்பு உடையது. அவர்கள் அதற்காகத்தான் போராடுகிறார்கள். எனவே, இந்த வழக்கில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்திக்காக போராடுகிறார்கள், ராமனின் பிறந்த இடத்திக்காகவோ அல்லது அவன் கோவிலுக்காகவோ அல்ல என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

மற்ற கோவில்களும் இந்த கோவிலும் அழிக்கப்பட்டது  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட நம்பிக்கைகைகள், வாழ்க்கைமுறை, நாகரிகம் ஆகியவற்றின் மீது நடந்த தாக்குதலாகும்.சரியா? இப்போது அங்கே   கீழ் தளத்தில்  ஒரு கோவில், மேலும் பல கோவில்கள் கட்டப்பட்டுஇருந்ததற்கான போதுமான  அடையாளங்கள் உள்ளன. ஒரு கோவில் அழிக்கப்பட்டது என்பது குறிக்கோள் அல்ல. இல்லை. ஆம், ஒரு கோவில்அழிக்கப்பட்டது. கோவிலின்கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனால்அது ஒரு நாகரிகத்தின், வாழ்க்கை முறையின், அழிவும்  ஆகும் புனித தலங்களில் ஆழமான நினைவுகள் உள்ளன. அவை மீண்டும் கட்டப்பட்டால் அந்த பழைய நினைவுகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  வழக்கு முடிவு பெறுகிறது.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: