Translation credits: Priya Darshini C N
இந்தியச் சுதந்திரத்திற்கு இணையான போராட்டத்தின் இந்த முழு ஓட்டத்தையும், விவரிப்பையும் நாம் புரட்டினால், புரட்சிகர அல்லது ஆயுத மோதலின் நிலையிலிருந்து பார்த்தால், முற்றிலும் மாறுபட்ட படம் வெளிவருகிறது. கதாநாயகர்கள் வேறுபடுவார்கள், நீங்கள் யாரை மிதவாதிகள் என்று அழைக்கிறார்களோ அவர்கள் பற்றுறுதியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள், நீங்கள் தீவிரவாதிகளை தேசியவாதி என்று அழைக்கலாம்.
எனவே, வரலாறு மிகவும் வித்தியாசமான சாயலில் தெரிகிறது. இந்த விஷயத்தில், 1857 முதல் 1946 வரை நான் பேசிய இணையான போராட்டத்தின் நடுவே பால கங்காதர திலக்கின் சீடராக உள்ளார் சாவர்க்கர்.
சாவர்க்கர் சித்பவன் பிராமண குடும்பத்தில் பிறந்தார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான பாகூரில் உள்ள இந்த வீட்டில், 1883 மே 28 அன்று பிறந்தார். அவர் மூன்று சகோதரர்களுள் இரண்டாவதாக இருந்தார் – மூன்று சிறுவர்கள், மூத்த சகோதரர் கணேஷ் ராவ், தம்பி நாராயண் ராவ் மற்றும் ஒரு சகோதரி மெய்னா . பம்பாயின் ஆளுநரான சர் ரிச்சர்ட் டெம்பிள் அப்போதைய இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் லிட்டனுக்கு எழுதுகின்ற ஒரு சுவாரஸ்யமான கடிதம் உள்ளது, அவர் கூறுகிறார், மொகலாயர்களிடமிருந்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் கையகப்படுத்தியதாக பொதுவாக கருதப்படுகிறது, ஆனால் உண்மையில் நாம் நாட்டை மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றியதாகத் தெரிகிறது, ஏனென்றால் மராத்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நாட்டின் பெரும்பகுதி 1818 ஆம் ஆண்டு போரில் கைப்பற்றினோம். மராட்டியர்கள், பேஷ்வாக்கள், சிட்பவன் பிராமண சமூகத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். லார்ட் டெம்பிள் கூறியதாவது: “நாம் எதைச் செய்தாலும், அவர்களுக்கு எவ்வளவு கல்வி அளிக்கிறோம், அவர்களுக்கு எவ்வளவு வசதிகளை நாம் தருகிறோம். அவர்கள் அரசு சேவை, மற்றும் வெவ்வேறு அரசாங்க அமைப்புகளின் ஒரு அங்கம் வகித்தாலும் அவர்களுக்கு நம் மீது உள்ள பேதம் போகாது. அவர்கள் இந்த குணமிக்கவர்கள் அவர்கள் நம்மீது உள்ள வெறுப்பை விட்டுவிட மாட்டார்கள்.
இந்தக் கூற்று சரியாகவே இருந்தது. மகாராஷ்டிராவில் இருந்த சிறந்த சீர்திருத்தவாதிகள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சிந்தனையாளர்கள், கோபால் கிருஷ்ணா கோகலே முதல் பால் கங்காதர் திலக் வரை விஷ்ணு சாஸ்த்ரி முதல் கணேஷ் ராவ் மற்றும் சாவர்க்கர் வரை அனைவரும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர் இந்த சிறிய வீட்டில் இருந்தார். சாவர்க்கர் உண்மையில் சாதி முறையை வெறுத்தார், மேலும் “உயர் சாதி” என கூறப்படும் பிராமண சமூகச் சிறுவன் என்று அழைக்கப்பட்டாலும், அவர் எப்பொழுதும் தனது நண்பர்களுடன் நேரம் நிறைய செலவிடுவார்.அவர்கள் அனைவரும் “தாழ்த்தப்பட்டவர்களாக” இருந்தனர், அவர் அவர்களுடன் சாப்பிட்டார், அவர்களுடன் விளையாடினார், மேலும் அவர் மிகவும் ஆர்வமுள்ள வாசகராகவும் இருந்தார். அவரது வயதைத் தாண்டி, இந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் அவர்களுடன் படித்து அவர் நண்பர்களுடன் கலந்துரையாடுவர்.
எனவே, சமூகத்துடன் வாழும் இந்த உணர்வு, யாருடனும் போட்டியிடுவதை விட சமூகம் செழிப்பது என்பது குழந்தை பருவ பண்பாகும். கவிதை எழுதும் பழக்கம் அவருக்கு துவங்கியபொழுது அவருக்கு எட்டு வயது. ஆறு வயதாக இருந்தபோது, அவர் தனது தாயார் ராதா பாயை காலராவால் இழந்தார். அதன்பிறகு அவரது தந்தை தாமோதர் பந்த் மேல் நான்கு குழந்தைகளையும் தனியே கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இருந்தது.
இந்த சமயத்தில் மகாராஷ்டிராவில், தொற்றுநோய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளையும் பரவி அப்பகுதிகளை அழைத்திருந்தது. இதை கட்டுப்படுத்துவதற்கான முழு வைராக்கியத்தில் , பிரிட்டிஷ் அரசாங்கம் தொற்றுநோயால் கண்டறியப்பட்ட அந்த குடும்பங்கள் மீது மிகவும் மோசமான நடவடிக்கை எடுத்தது. காவல்துறையினர் உண்மையில் அந்த வீடுகளுக்குள் புகுந்து அவர்களை வெளியேற்றுவர், பெண்கள் துன்புறுத்தப்படுவார்கள், பூஜை அறை சேதப்படுத்தப்படும், பின்னர் இந்த மக்கள் ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள முகாம்களில் வெளியேற்றப்பட வேண்டும். எனவே, அவர்களில் பெரும்பாலோர், வீட்டில் ஒரு இறந்த எலி இருந்தால் கூட, அது உண்மையில் பல இறப்புகளைச் செய்யும் வரை ரகசியமாக வைக்கப்படும். எனவே இந்த தொற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் மிகவும் அடக்குமுறையாக இருந்தன. அது மகாராஷ்டிராவில் இருந்த மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்களின் இந்தச் செயலுக்கு பழிவாங்க முடிவு செய்த மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் சப்பேகர் சகோதரர்கள் – தாமோதர் ஹரி சபேகர், பாலா கிருஷ்ணாஹரி சபேகர் மற்றும் அவர்களின் தம்பி வாசுதேவ் ஹரி சபேகர். இவர்கள் துப்பாக்கியை எடுத்து புனேவின் தொற்றுநோய் அதிகாரியை உண்மையில் படுகொலை செய்ய முடிவு செய்தனர், அவர்களின் பெயர் வால்டர் மற்றும் அவரது லெப்டினன்ட் சார்லஸ்.
இந்த படுகொலை பம்பாயில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லார்ட் டெம்பிளின் கடிதம் உண்மையானது. அவர்களும் சித்பவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போர்க்குணமிக்கவர்கள், அவர்கள் அனைவரும் உண்மையில் ஆங்கிலம் படித்தவர்கள். இருந்தாலும் அவர்கள் ஆயுதங்களை எடுத்து பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஒருவரைக் கொல்லத் தயாராக இருந்தனர். எனவே இது மகாராஷ்டிர சமுதாயத்தில் இரு வகையான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியது – ஒருபுறம், பிரிட்டிஷ், மற்றொருபுறம் மகாராஷ்டிரா செய்தித்தாள்கள், கேசரி உட்பட இது ஒரு முட்டாள்தனமான முயற்சி என்று கண்டிக்கின்றனர்.
இளம் சாவர்க்கருக்கு அப்பொழுது சுமார் 14 வயது, அவர் சப்பேக்கரைப் பற்றிய வீர கதைகள் கேட்டு உத்வேகம் அடைந்தார். அவர்கள் புன்னகையுடனும், உதடுகளில் கீதையின் வசனங்களுடனும் பகவத் கீதையுடனும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், என்றறிந்தார். அவர் தனது குடும்ப தெய்வமான அஷ்ட பூஜ பவானியின் முன் சென்றார். அது அவர்களின் குடும்ப குலதனம். இது இன்னும் பாகூரில் உள்ள கண்டோபா கோவிலில் உள்ளது. மராத்தியில் அவர் முன் சபதம் செய்தார். “நான் என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு என் இறுதிவரை போராடுவேன், கடைசி எதிரி இருக்கும் வரை என் எதிரியைக் கொல்வேன்”. இது யாரோ ஒரு 14 வயது சிறுவன் செய்த சபதம், மிகவும் குழந்தைத்தனமாகத் தெரிகிறது.
ஆனால் அவர் எடுத்த இந்த ஒரு சபதத்தின் விளைவுகளை முழு தலைமுறையினரும் எதிர்கொள்ளப் போகிறார்கள்.