வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021
Home > மாநிலங்களிலிருந்து வரும் கதைகள் > காஷ்மீரம் > புத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன

புத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன

Translation credits: Priya Darshini C N

சுமார் 11 ஆம் நூற்றாண்டு. இது அல்ச்சி விஹார வளாகம். 108 விஹார மையங்களுள் ஒன்றாக அல்ச்சி அறியப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற எண், ஆனால் அது உண்மையாக இருந்திருக்கலாம். 108 மடங்கள், விஹாரங்களின் தொடர், இமாலய பிராந்தியத்தின் ஆரம்ப விஹாரங்களாக இருந்தன. மேற்கு திபெத், லடாக், லஹௌல்-ஸ்பிட்டி மற்றும் கிந்நௌர் ஆகிய இடங்களைக்கொண்ட குஜே மன்னர் யேசே-இன் ஆட்சியில் இவை கட்டப்பட்டன. இந்த அற்புதமான விகாரங்கள் அனைத்தும் காஷ்மீர் கலைஞர்களால் வரையப்பட்டவை மற்றும் செதுக்கப்பட்டவை, காஷ்மீர் அக்காலத்தின் சிறந்த புத்த மையங்களுள் ஒன்றாகும். லடாக் அல்லது மேற்கு திபெத்தில் இருந்தாலும் இந்த மடங்களுக்குள் காணப்படும் கலையும் முக்கியமானது, ஏனென்றால் பண்டைய காலத்தின் காஷ்மீர் கலாச்சாரத்தின் எஞ்சியிருக்கும் காட்சி பிரதிநிதித்துவம் இதுவாகும். காஷ்மீர் பள்ளத்தாக்கினுள் ஓவியங்கள் அழிக்கப்பட்டதால், லடாக் முதல் மேற்கு திபெத் வரையிலான இந்த ஓவியங்களில் மட்டுமே, அந்தக் காலத்தில் காஷ்மீரில் இருந்திருக்கும் கலை, கட்டிடக்கலை, ஜவுளி, ஆய்வுப்பொருள் ஆகியவற்றைக் காண்கிறோம்.

இது ஒரு பச்சைத் தாரா. அஜந்தா ஓவியங்களில் தொடங்கி நீங்கள் காணும் அந்த நேர்த்தியான நிறத்திண்மை, வடிவத்தின் நேர்த்தியான செய்முறை போல் இருப்பதை நீங்கள் காணலாம். இந்தியக் கலையின் இடைக்கால பாரம்பரியத்தில் இருக்கும் மேலும் கண்ணை நீட்டுவதை போல் உள்ள சித்தரிப்பை நீங்கள் காணலாம். ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் ‘சில்க் ரூட்’-டின் மீது இவ்வகையான ஏராளமான ஜவுளி இருந்தது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்ற விதமாக இருக்கும்.

இந்த வழி காஷ்மீர் மற்றும் லடாக்கிலிருந்து, நலா சோபாரா வழியாக தென்னிந்தியாவில் கேரளா வரை இருந்தத0BC1. பக்கத்தில் உள்ள வடிவங்களை நீங்கள் கவனித்தால்; தெய்வங்கள் மையத்தில் வடிக்கப்படும்போது, பக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிவங்கள் ஒரு சிறந்த உயிரோட்டத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன. உண்மையில் இந்த மகிழ்ச்சியின் உணர்வு காஷ்மீர் கலையின் ஒரு குறிப்பிட்ட குணம். இந்திய பாரம்பரியத்தின் அழகியலின் மிகப் பெரிய தத்துவஞானிகளுள்  ஒருவரான அபிநவகுப்தா, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த கலைஞர்களின் காலத்திற்கு சற்று முன்பு வாழ்ந்தவர்.

மீண்டும் காஷ்மீர் ஓவியர்கள் உருவாக்கிய அல்ச்சி  ஓவியங்களிலிருந்து ஒரு விவரம். இது பலராமருக்கான ஒரு கோயில், அதில் பச்சை தாராவுக்கு ஒரு கோபுரம் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இது ஒரு அம்சமாகும், இந்து மதம் மற்றும் பௌத்த மதங்களின் தெய்வங்களை ஒன்றாக இருக்கும் இந்த அம்சம் நீங்கள் இங்கே மட்டுமல்ல, சீனாவின் குகைகளிலும், ஜப்பானிலும் இன்னும் பல இடங்களிலும் நீங்கள் காணும் ஒரு அம்சமாகும்.  ஓவியத்தின் கீழ் பகுதியில் உள்ள இசைக்கலைஞர்களை மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளதை  நீங்கள் காண முடியும்.

Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: