Translation credits: Priya Darshini C N.
இப்பொழுது, ராஜ ராஜ சோழர் தனது குரு கருவூராருடன் இருக்கும் ஓவியம். இந்திய ஓவியத்தில் தொடர்ந்து உயிர்த்து இருந்த ஆரம்பகால உருவப்படம் இதுவாகும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தைச் சேர்ந்தது. இந்திய கலையைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், 1500 ஆண்டுகளாக, இந்த கலை உங்கள் முன் கொண்டு வந்தது , ஆயிரக்கணக்கான உருவங்கள், தெய்வங்கள் உருவாக்கப்பட்டன, விலங்குகள் உருவாக்கப்பட்டன. அழகான பூக்கள், பழங்கள் மற்றும் மரங்கள் உருவாக்கப்பட்டன, மேலும் சாதாரண மனிதர்கள் உருவாக்கப்பட்டனர். ஆனால் உருவப்படங்கள் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை. யாருடைய ஆட்சியின் கீழ் கலை உருவாக்கப்பட்டதோ அவரின் உருவப்படம் கூட கிடையாது. கலையின் நோக்கம் நான் என்ற அகங்காரத்தை தாண்டி வேறு நிலைக்கு அழைத்துச் செல்வதும், நம் கவலைகளிலிருந்து நம்மை தூரம் கொண்டுபோவதும், சொந்த முக்கியத்துவத்தின் எந்தவொரு உணர்விலிருந்தும் விலகிச் செல்வதும் ஆகும். எனவே, ஒரு உருவப்படம் முற்றிலும் தேவையற்றது, மற்றும் கலையின் நோக்கத்திற்கு எதிரானது.
சித்திர சூத்திரம் மிகத் தெளிவாகக் கூறுவது யாதெனில் இக்கலை எந்த ஒரு தனி நபரின் உருவப்படத்தை வரைவவதை விட மேலான முக்கியதுவம் உடையது. இது காலவரையற்ற மதிப்புகளையும் சித்தாந்தங்களையும் உணர்த்துவதற்குரியது. ஆனால் இதற்கு ஒரு விதிவிலக்கு உள்ளது.
குஷன ஆட்சியாளர்கள் மத்திய ஆசியாவிலிருந்து முதலாம் நூற்றாண்டில் இங்கு வந்தவர்கள். இவர்கள் காலத்தில் தங்களுடைய உருவப்படங்களை இவர்கள் கோவில்களில் வரைந்திருந்தார்கள். ஆனால் இவர்களுள்க்குப் பின்னர் இந்திய பாரம்பரியம் மீண்டும் தலையெடுத்தது. இதற்குப்பின் நாம் காணக்கூடிய முதல் உருவப்படங்கள் மாமல்லபுரத்தில் உள்ள 7 – 8 ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் ஆகும். முன்பு கூறியது போல அது ராஜராஜனின் ஓவியமாகும். இந்த ஓவியத்தில் கவனிக்க வேண்டிய சுவாரசியமான ஒன்று, ராஜராஜன் தன்னை வழக்கத்திற்கு அப்பாற்பட்டு உருவப்படம் வரைந்து கொள்வதால், சிறிது தயக்கத்துடனே தன் குருவின் பின்னால் நிற்கிறார்.
இது 13 ஆம் நூற்றாண்டு வரை, நாட்டின் பல்வேறு தளங்களிலும், பல்வேறு கோவில்களிலும் தொடர்கிறது. ராஜாவின் சில உருவப்படங்கள் தோன்றத் தொடங்குகின்றன, ஆனால் வழக்கமாக, அவை மிகச் சிறியதாக உருவாக்கப்படுகின்றன, அல்லது அவை சிவலிங்கத்திற்கு முன்பாக மன்னர் பிரார்த்திப்பது போல் உருவாக்கப்படுகின்றன, அல்லது ராஜா தனது குருவின் முன் மண்டியிடுவது போல் உருவாக்கப்படுகின்றன. எனவே அரசர் தன்னை கலையில் முன்வைக்கத் தொடங்கினார், ஆனால் அவர் பணிவுடன் செய்கிறார். நாளடைவில் இது மண்டியிடுவது, படிப்படியாக அரசர்கள் தங்களை மிகுந்த ஆடம்பரத்தோடும், சுய முக்கியத்துவத்தோடும் காண்பித்தன. ஆனால் இது உண்மையில் இந்தியக் கலை பாரம்பரியத்தில் மிகப் பெரிய ஒன்று.