Translation Credits: Geetha Muralidharan.
குருதேவர் சொல்ல தொடங்கினார்,”முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்”. ”எதற்காக குருதேவா” ”ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான் ஆளும் இந்திய நாடு ஏன் மாறக்கூடாது என்று நினைத்தான். அவன், ஹிந்துக்கள் தங்கள் மதத்தை விட்டு மாற, அவர்கள் மீது ஜெசியா என்ற வரியையும், மற்றும் பல அவமானகரமான நிபந்தனைகளையும் விதித்தான்.
தன் அதிகாரிகளிடம் அவர்கள் தினமும் ஒரு குன்று அளவு பூணூலை கொண்டுவந்து அதன் எடைக்கு சமமான இந்துக்களை மதம் மாற்றியோ அல்லது கொன்றோ காட்ட வேண்டும் என்று ஆணை இட்டான்.பல பேர்கள் கொல்லப்பட்டனர், பல பேர்கள் பயத்தினால் மதம் மாறினார்கள்”. ”அவன் வெற்றி பெற்றானா?” ஆதித்தியா கேட்டான்.”இல்லை, இந்தியாமுழுவதும் பல ஆலயங்கள் இருந்ததால் அவன் கொடூரம் அவர்களை மிகவும் பயமுறுத்தியது. எங்கு அவன் படைகள் போனாலும் அங்கு அவர்கள் கோவில்களின் மீது மசூதிகளை கட்டினார்கள். அவன் படை வீரர்கள் இந்து தெய்வங்களின் விக்கிரஹங்களை எல்லாம் படி ஏறி வருபவர்களின் கால் பட்டு வரும்படி மசூதி படிக்கட்டுகளின் கீழே புதைப்பார்கள்”.
”அது இந்துக்களின் மன உறுதியை உடைத்ததா?”
”இல்லை, ஏராளமான ஹிந்துக்கள் மதமாற்றத்திற்கு பதிலாக மரணத்தை தழுவினார்கள், எனவே அவுரங்கஸிப்பிற்கு குழப்பம் ஏற்பட்டது. ஹிந்துக்கள் மரணத்தை ஏற்றால் அவன் யாரை ஆள்வது? அவன் முதலில் மதம் மாற்ற, காஷ்மீரபண்டிட்களை தேர்வு செய்தான். ஏன் காஷ்மீரம்? ஏன் என்றால் காஷ்மீரம் இந்து மதத்தின் தலைமை இடமாக கருத பட்டதால், அதை மாற்றிவிட்டால் இந்தியா முழுவதும் மாறிவிடும் என்று அவன் நம்பினான். அவன் தன் கவர்னர்களுக்கு எல்லா காஷ்மீர பண்டிட்களையும் மதம் மாற்றவும் இல்லாவிட்டால் கொன்று விடவும் ஆணை இட்டான். இதை கேட்ட, மரணம் தங்களை சூழ்ந்து இருந்த, பண்டிட் க்ருபாராம் என்ற புகழ் பெற்ற பண்டிதர், ஐந்நூறு பண்டிதர்களுடன் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேஜபஹதூரை ஆனந்தபூர் சாஹிப்பில் சென்று சந்தித்தார்”.
”அவர்கள் ஏன் குரு தேஜபகதூரிடம் சென்றார்கள்?” ”ஏனென்றால் அவர் எளியவர்களை காப்பவர் என்று அறியப்பட்டவர்”.
அவர்களின் துன்பத்தை பற்றி அறிந்த குரு தேஜபஹதூர், அவுரங்கஸிப்பிற்கு பாடம் கற்பிக்க ஒரு தியாகம் அவசியம் என்று சொன்னார். தன் மகனான குரு கோபிந்தசிங்கால் மட்டுமே அதை செய்யமுடியும் என்று சொன்னார்.
”அவனுக்கு என் வயதுதான், அதை எப்படி அவன் தந்தை அவனிடம் சொன்னார்?”
என்று கண்களை அகல விரித்து ஆதித்யா கேட்டான்.” ஆமாம் மகனே, அந்த காலங்களில் சிறுவர்கள் நிறைய பொறுப்புகளை சுமந்தார்கள். உயிர்வாழ்ந்த காலம் குறைவாக இருந்தது. இந்த பகுதியை நான் என் மகளுக்கு ஒரு நாள் படித்து காட்டியது என் நினைவிற்கு வந்தது.அப்போது அவள் ”பத்து வயது குழந்தைகள் அதை சொல்ல முடியுமா? அப்படி என்றால் அந்த காலத்தில் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் யாருக்கும் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லாதது எனக்கு உள்ள சலுகையே” என்றாள். ” பிறகு என்ன நடந்தது?” குரு அவர்களை திரும்பி சென்று கவர்னர் இப்திகார் கானை, இந்த செய்தியை அவுரங்கஸிபிடம் சொல்லுமாறு சொன்னார்,
”நீ குருவை இஸ்லாமியனாக மாற்றிவிட்டால் இந்தியா முழுவதுமே மாறிவிடும். ஆனால் உன்னால் முடியாவிட்டால் நீ இந்தியாவை இஸ்லாமியநாடாக மாற்றும் கனவை கை விடவேண்டும்.”
இதைக்கேட்ட அவுரங்காஸிப் தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணினான். ஒருவனை மதம் மாற்றுவது எளிய வேலை, அதன் பின் தன் பெயர் தங்க எழுத்துக்களில் பொறிக்கப்படும் என்று எண்ணினான்.
முதலில் குருவும் அவர் சீடர்களும் இஸ்லாமிய காஜி முன் கொண்டு நிறுத்தப்பட்டனர். அவர், இஸ்லாமியத்தை ஏற்காவிட்டால் கடுமையான விளைவுகளை அவர்கள் ஏற்க வேண்டி இருக்கும் என்று பயமுறுத்தினார். இதை புன்னகையுடன் கேட்டபின் குரு மறுத்தார்.பிறகு. சங்கிலிகளால் கட்டப்பட்ட குரு, பேரரசரின் அவைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வரவு அங்கு இருந்த அரச அணிகளை எல்லாம் ஒளி இழந்ததாக தோன்ற செய்தது. அவர், கீழே தரையில் நின்ற போதும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த அரசரை விட உயரமாக தோன்றினார். தன் நீண்ட தாடியுடன் அவர் கம்பீரமாக காட்சி அளித்தார்.
கூர்மையான அவர் கண்கள் ஆத்மாவை துளைக்கும் சக்தி பெற்று இருந்தன . அவுரங்கஸிப்பினால் அவர் கண்களை எதிர் கொள்ள முடியவில்லை. பேரரசரின் அவையில் இருந்த ஒரு அதிகாரி இறுதியாக, ”தேஜ் பகதூர், நீ இஸ்லாமியத்தை ஏற்க இங்கு வந்தாய்” என்று சொன்னான்.” இல்லை” என்று குரு கர்ஜித்தார். ” என் ஒருவனை இஸ்லாமியத்திற்கு மாற்றிவிட்டால் இந்தியா முழுவதுமே மாறி விடும், மேலும் உன்னால் முடியாவிட்டால் உன் கனவை நீ கை விடவேண்டும் என்று நான் சொன்னேன்”என்றார். அவுரங்காஸிப் உன்னால் அது முடியுமா என்று பார்ப்போம்.
என்னை மாற்றும்படி நான் உனக்கு சவால் விடுகிறேன்.நீ அதில் தோற்றால், இந்துக்களை மதம் மாற்றுவதையும், அவர்கள் ஆலயங்களை அழிப்பதையும் நீ கை விடவேண்டும்”. அங்கு மயான அமைதி நிலவியது. ” நீ யாரிடம் பேசுகிறாய் என்று உனக்கு தெரியுமா?”
தன் பேசும் திறனை இறுதியாக பெற்ற ஒரு அதிகாரி அவரை நோக்கி கேட்டான்.” நீ இஸ்லாமியத்தை தழுவினால் உனக்கு பெரிய ஒரு பதவியையும், ஏராளமான அணிகலன்களையும், பேரரசர் அளிப்பார். இந்த பேரரசில் மிகப்பெரிய அந்தப்புரத்தை நீ பெறலாம்”. குரு சிரித்தார். அந்த சிரிப்பால் அங்கிருந்த தூண்கள் ஆடியதுபோல் தோன்றியது. அது ஒரு சிங்கத்தின் கர்ஜனை போல இருந்தது.
தன்னை சுற்றி இருந்த அரசவையே உறைந்து போனது போல இருப்பதை அவுரங்காஸிப் கண்டான். ”ஏ முட்டாளே, கடவுள் பெயரால் என்னை கவரலாம் என்று நினைத்தாயா? நான் வேறு பெயரால் அவரை ஏற்றுக்கொண்டால் அதுவே சரியான வழி, நான் உள்ள வழி தவறானது என்று நான் ஏற்று கொள்வேன் என்று நினைத்தாயா? உன்னை யார் இந்த தவறான முடிவுக்கு அழைத்து சென்றது?” ”குரு எப்படி பேரரசரிடம் இப்படி பேச முடியும்?” ஆதித்யாகேட்டான். ” பிறர்களுக்காக வாழ்பவர்களும், தர்மத்தின் வடிவமாக உள்ளவர்களும் இத்தகைய குணம் கொண்டிருப்பார்கள்” என்று குரு சொன்னார். ” அவர் எல்லோர் முன்பும் அரசனை முட்டாள் என்று சொன்னார்” என்று சிரித்துகொன்டே ஆதித்யா சொன்னான். ஒரு வார்த்தையும் சொல்ல முடியாமல் அவுரங்காஸிப்
அமர்ந்திருந்தான். பெயர் தெரியாத ஒரு குருவின் முன்னால்இந்திய பேரரசர் இப்படி பரிதாபமாக அமர்ந்திருப்பதை சரித்திரம் மறக்காது என்று அவை அதிகாரிகள் எண்ணினர்.
குரு தொடர்ந்தார், ” கடவுள் ஒருவரே. நீ எந்த பெயர் கொண்டு அவரை அழைத்தாலும் அவர் ஒருவரே. நம் பாதைகள் நம்மை ஒரே இலக்கிற்குதான் அழைத்து செல்லுகின்றன. நாம் அவரை எந்த பெயர் வைத்தும் அழைக்கலாம். ஆனால், எந்த பெருமையும், அகந்தையும், வஞ்சகமும் இல்லாமல் அப்படி செய்யவேண்டும். நீ, அவுரங்காஸிப் இவை மூன்றும் நிறைந்தவன்”. ” பேரரசர் ஏன் ஊமையாக இருந்தார்?” என்று ஆதித்யா கேட்டான்.”உண்மை பேசுபவர்களை கண்டால் தற்பெருமை உள்ளவர்கள் அப்படி ஆகி விடுவார்கள்”. என்றார் குரு. ”நீ புனிதமாவர் என்பதற்கு ஒரு அற்புதத்தை காட்ட முடியுமா?” என்று அவுரங்காஸிப் கேட்டான். ”இல்லை, உன்னை நம்பவைக்க அப்படி எந்த முட்டாள் தனமான செயலையும் நான் செய்ய மாட்டேன், அவுரங்காஸிப்.” ”அப்படியானால், இதுவே நான் உன்னை கடைசி முறையாக கேட்பது, மதம் மாறுகிறாயா, இல்லையா?” ”இல்லை, நான் மாற மாட்டேன், இப்போது இல்லை, எப்போதுமே இல்லை. என் உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டினாலும் இல்லை”
பேரரசர் எப்போதும் இப்படி அவமானப்பட்டதில்லை.”நாளை எப்படி குரு அரசரின் சலுகையை மறுத்தார் என்று இந்தியா முழுவதும் அறியும். அவரின் பிரஜைகள் மட்டுமின்றி எதிர்கால சந்ததிகளும் சிரிக்கும். அவர் ” ஏ முட்டாளே நீ சங்கிலி முன்னால் நிற்கிறாய். நீ கண் இமைக்கும் முன் நான் உன்னை கொள்ள முடியும்.” ” ஆம், அவுரங்காஸிப், நீ என் உடலை கொல்ல முடியும், ஆனால் என் மக்களின் ஆன்மாவை கொல்ல முடியாது.உன்னைவிட பரிதாபமான ஒருவனை நான் பார்த்ததே இல்லை.இந்த சாம்பிராஜ்யத்தின் அரசனான நீ ஒரு பிச்சைக்காரன் போல உன் அரசவை முன் என்னிடம் பிச்சை கேட்கிறாய்”. ” இவனை இழுத்து சென்று நாற்பது தினங்கள் இவன் வருத்தம் தெரிவிக்கும்வரை சித்திரவதை செய்யுங்கள்.இல்லாவிட்டால் ஒரே ஒரு சொட்டு ரத்தம் வரும்படி இவனை சிரச்சேதம் செய்யுங்கள்”. அவுரங்காஸிப் கத்தினான்,
பிறகு, எல்லோரும் காணும்படி இவன் தலையை நகர் முழுவதும் எடுத்து செல்லுங்கள்.” குரு சிரித்தார்.” யார் இன்று தோற்றது அவுரங்காஸிப்? உன் வலிமையை கொண்டு, உன்னால் எந்த ஆயுதமும் அற்ற என் ஒருவனைக்கூட மாற்ற முடியவில்லை”.
பல நாட்களுக்கு பிறகு குரு சிரச்சேதம் செய்யப்பட்டு அவர் தலை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. இறுதியாக அவருடைய சில சீடர்கள் அவர் உடலை எடுத்துச்சென்று இறுதி சடங்குகளை செய்தனர். அவர் சிரச்சேதம் செய்யப்பட இடம் இன்று ”சீஷ் கஞ் புனித இடம்” என்று அழைக்க படுகிறது.