செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021
Home > இந்திய ஞானம் > பண்டைய பாரதத்தில் ஏன் தத்துவமும் விஞ்ஞானமும் மோதல் இன்றி இருந்தன?

பண்டைய பாரதத்தில் ஏன் தத்துவமும் விஞ்ஞானமும் மோதல் இன்றி இருந்தன?

நாம், வேதங்கள், சம்ஹிதைகள், ப்ராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் என்று பல பிரிவுகளை பார்த்தோம். உதாரணமாக மந்திரங்கள், பாசுரங்கள், பிரார்த்தனை பாடல்கள், சடங்குகள், வர்ணனைகள், தத்துவங்கள் ஆகிய இவையே அந்த பண்டைய கால நூல்களில் இருந்தன. ஸ்ம்ரிதி என்பது நினைவில் கொள்வதாகும். வேதாங்கம், இலக்கணம் பற்றிய நூல்கள்,. வானியல், சடங்குகள், இதிகாசங்கள், புராணகாவ்ய சூத்திரங்கள், மகா காவியங்கள், பல தத்துவ பிரிவுகளின் சாஸ்திரங்கள்,ந ிபந்தங்கள், என இத்தகைய பலவும் இந்தியாவில் இருந்தன. எனவே யாரும் இந்த எல்லைக்குள் அறிவுசார்ந்த விளக்கங்களை, தத்துவங்களுடன் எந்தவிதமான மோதலும் இன்றி வெளிப்படுத்தலாம்.

இன்று, ஒரு பெரும்பான்மை பிரிவுடன் விஞ்ஞானம் மோதிக்கொள்ளும் நிலையை நாம்  காண்கிறோம். சரித்திரத்தை சுற்றி அமைந்திருப்பதால் ஆபிரகாமிக் பிரிவினால் விஞ்ஞானத்தை ஆதரிக்க முடியாது.எனவே, டார்வின் பரிணாம வளர்ச்சி தத்துவத்தை சொன்னபோது அடிப்படைவாதிகள் உடனே அவரை எதிர்த்து ”இல்லை, அது எப்படி முடியும்?  நாம் அங்கிருந்து வரவில்லை.  கடவுள் நம்மை தன்னுடைய பிம்பமாக படைத்தார் என்பதால் நாம் அவரைப்போலவே இருக்கின்றோம்.நாம் குரங்குகளிருந்து வந்திருக்க முடியாது. அது அவர்களுக்குள் பெரிய கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.இன்றுகூட அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் விஞ்ஞான பாடபுத்தகங்களில் பரிணாம வளர்ச்சி தத்துவம் வெறும் தத்துவமே என்னும் முத்திரையை குத்துகின்றனர். நான் வேடிக்கையாக சொல்லவில்லை. மிகவும் அறிவுவளர்ச்சி அடைந்துள்ள ஜெந்தல்களின் காலத்திலும் சரித்திர புத்தகங்களில் முத்திரைக்குத்தி மாணவர்களுக்கு  அவர்கள் படிப்பது உண்மை அல்ல என்று அறிவிக்கின்றனர். இப்படி பல உள்ளன.

ஆனால், இந்தியாவில் தத்துவங்களுக்கும் விஞ்ஞான தொழில் நுட்பத்திற்கும் எப்போதும் சண்டை இருந்ததே இல்லை. அதற்கு காரணம் உள்ளது.இந்திய தத்துவ பிரிவுகளை  பற்றிய ஒரு வரி விளக்கத்தை பார்த்தால், இதைப்பற்றி நாம் போன ஆண்டு கூட பேசினோம், நியாய ஸ்திரம்எல்லா பிரிவினராலும்ஏற்கத்தக்கதுஅல்ல, பெரும்பான்மையாக நிரூபிக்கப்பட்டாலன்றி அவை ஏற்கத்தக்கவை அல்ல என்று சொல்கிறது.

மனிதர்களுக்கு  தெரிந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை இருக்கிறது. அக்ஷபாத கௌதமா என்ற ரிஷி அதை சொல்லி இருக்கிறார்.வைசேஷிக-என்பவர் புரிதல் பற்றியும்,  அனுமானம் பற்றி ரிஷி கன்னடஎன்பவரும், எண்- முறையான கணக்கெடுப்பு மற்றும் அறிவு பூர்வமான புரிதல் பற்றி கபிலா என்பவரும், பூர்வ மீமாம்சம் பற்றி விரிவாக விசாரணை செய்து, ஆழமாக சிந்தித்து விவாதித்து இருக்கிறார் ஜைமினி ரிஷி..உத்தர மீமாம்சம், பத்து வகையான சிந்தனை பிரிவுகள், மேலும், அத்வைதத்தை பரப்பிய ஆதி சங்கரர் என இந்துமத எண்ணங்கள் பல தத்துவங்களையும்தன்னுள் சேர்த்துக்கொண்டது. இவை அனைத்தும் தத்துவ ஞானவளர்ச்சிக்கு பயன் படுத்தப்பட்ட பல விதமான முறைகளை பற்றி மிக விரிவாக சொல்கின்றன.

பிரமாணம் பற்றிய இந்திய கண்ணோட்டத்தை விளக்கும் இந்த சிலைடை காணலாம்.நாம் கருத்து, அனுமானம், ஒப்புமை, சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்தல்,எதிர்மறை ஆதாரம், அல்லது நிபுணர்களின் சப்த பிரமாணஆதாரங்களை அடிப்படையாக கொண்டுநோக்கினால் ஒவ்வொரு பிரமாணமும் எந்த அதிகாரத்திற்கு உட்பட்டு தங்கள் ஞானத்தை  கொண்டுள்ளன என்பதிலேயே வேறுபட்டன. சார்வாகமே பாரதத்தில்   ஒப்புக்கொள்ள பட்ட பாரம்பரிய  நாத்திக பிரிவாகும்.. என்னால் காண முடிந்தால் அது உண்மை, இல்லாவிட்டால் அது இல்லை, அப்படி எதுவும் இல்லாததை நான் மறுக்கிறேன். பௌத்தர்கள், அனுமானம், கருத்து தவிர வேறு எதுவுமே ஞானம்  பெற தேவை இல்லை என்று எண்ணினார்கள்.புத்தர் சில துயரங்களை அனுபவித்து அதன் மூலம் சில உண்மைகளை அறிந்ததாக சொன்னார். இங்கு வைசேஷிகம் வேறு பலவற்றை ஒப்புக்கொள்கிறது. துவைதமும், ஜைனமும் இங்குள்ள எல்லா பிரிவுகளில் இருந்தும் கருத்துக்களை எடுத்துக்கொண்டுள்ளன.

இங்கு அடிப்படை என்ன?  இன்று நாம் வாழும் உலகில் ஏதாவது ஆராய்ச்சி பட்டம் வாங்க, உதாரணமாக இயந்திர பொறியியலில் செய்யும் ஆராய்ச்சியில், நான் இந்த விஞ்ஞான இதழில் இவர் வெளியிட்ட கட்டுரையை ஆதாரமாக கொண்டு ஆராய்ச்சி கட்டுரையை எழுத போகிறேன் என்று சொல்வோம். பின்பு, ஆதாரமான கட்டுரைகளை எண் ஒன்று, இரண்டு என்று இலக்கிய கணக்கெடுப்பு தருவோம். இங்கு ஒரு பேராசிரியரின் அல்லது ஒரு நோபல் பரிசு பெற்றவரின் பிரமாணத்தை அடிப்படையாக கொண்டு நான் என்ஆராய்ச்சியை செய்து, அவரை ஒப்பிட்டு என் பணியை செய்து அதை வெளியிடுவேன் என்று சொல்கிறோம்.

பண்டைய பாரதத்தில் யாரோ தோற்றுவித்த அறிவை சார்ந்து நாம் இன்று அவைகளை அறிந்துள்ளோம். இதனை நாம் அந்த அறிவின் பிறப்பிடம், அதை சரியான முறையில் அறிந்துகொள்ளும் விதம் என விரிவான சூழலில் காணலாம். இன்று நான் மார்க்சிச கொள்கை புத்தகத்தை மறுத்தேன். இந்து தர்மத்திலிருந்து பௌத்தம், கிறிஸ்துவம், மற்றும் பலவற்றை நீக்கினேன். ஆனால், சம்பிரதாயங்களில் இருக்கும் ஒரே வித்தியாசம், நாம் எதை தத்துவ ஞானம்  என்றுஒப்புக்கொள்கிறோம் என்பதே. தார்மீக பிரிவில் இருந்த எல்லோரும் தர்மத்தில் நம்பிக்கை வைத்தனர். அவர்கள், கர்மாவிலும், மறுபிறப்பிலும் அசைக்க முடியாத  நம்பிக்கை வைத்தனர். தத்துவ ஞானம்  என்பது என்ன மற்றும் அதை எப்படி ஒப்புக்கொள்வது என்பதிலேயே வேறுபாடு இருந்தது.  அது ஒன்றே வேறுபட்டது. இந்த விளக்கம் பலவிதமான இந்து பிரிவுகளையும், ஞானத்தையும் விளக்கும் படமாக உள்ளது.

 எனவே, கொண்டிருந்த  குறிக்கோள் என்ன என்பதை அறிய வேண்டும். ஒரு ஹிந்துவை வாழ்வின் குறிக்கோள் பற்றி கேட்டால், அவன், அஞ்ஞானத்தை தொலைத்து, உண்மையில் தான் யார் என்று அறிய வேண்டும் என்று சொல்வான். இது எப்போது நடக்கும் என்றால் இந்த பிறவியிலேயும் நடக்கலாம் அல்லது தன் கர்மத்தை பொறுத்து பல பிறவிகள் பின்னும் நேரலாம் என்று சொல்வான். இது தான் ஹிந்து தத்வம். அஞ்ஞானத்தை அழித்தல், மெய்ஞ்ஞானம்  பெறுதல், அதற்கான வழிகள், படைத்தவனுக்கும், படைப்பிற்கும் பிரிவு இல்லை என்று உணர்தல், நாம் இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கம் என்று உணர்தல், நான் என்னும் அகம்பாவமும். உலக பொருட்கள் மீது உள்ள பற்றுமே நம் எல்லோரிலும் இருப்பது ஒரே நாராயணனே என்று புரிந்துகொள்ள தடையாக உள்ளது என்பதை உணர்தல்.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய கேள்வியே ஒரு ஹிந்துவை நோக்கி -ஹிந்து என்பவன் யார்  என்பது. அவன் வாழ்வின் குறிக்கோள்  என்பது அஞ்ஞானத்தை அழித்து உண்மை gnanamana சச்சிதானந்தத்தை அடைவது என்பதுவே ஒரு ஹிந்து என்பதின் அடையாளமாகும் அபிராஹ்மிக் மதத்தில் தேவனால் வகுக்கப்பட்ட சட்டங்களின் படி வாழ்வதே வாழ்வின் நோக்கம். கடவுள் ஒரு தீர்கதரிசிக்கு பத்து கட்டளைகளை தந்து அவற்றை வாழ்வில் பின்பற்ற சொன்னார்.கிறிஸ்து சிலவற்றை வரையறுத்து, சில நற்செய்திகளை தன் அப்போஸ்தலர்களுக்கு சொன்னார்.அவர்கள் அதை எழுதி வைத்தனர். ஏசு உங்கள் பாவத்திற்காக தன் சிலுவையில் இறந்தார், மேலும் மகனாகிய அவரேநீங்கள்  தந்தையிடம் சென்று அடைய ஒரே வழி என்று நீங்கள் நம்பினால், நீங்கள் காப்பாற்றப்பட்டு சட்டத்தின் வழிப்படி சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வீர்கள்.

இஸ்லாமியர்களுக்கும் இப்படியே, முகமது என்ற தீர்கதரிசிக்கு கேப்ரியல் என்ற தேவதூதன் கடவுளின் வாக்குகளை குரான் மூலம் அவர்கள் பின்பற்றினால், அல்லாஹ்வின் அருளால் அவர்கள் காக்கப்படுவார்கள் அல்லது மீளமுடியாத நரகத்தில் வீழ்வார்கள். எனவே, ஆபிரகாமிய மதத்து மக்களின் வழக்கை குறிக்கோளே தங்கள் கடவுளின் கட்டளைகளை பின்பற்றுவதுதான். தத்துவங்களும் அவை சார்ந்த அறிவும் இங்கு இடம் பெறுவதில்லை.  ஒரே லட்சியமே சொர்கத்திற்கு செல்வது அல்லது நரகத்தில் வீழ்வது மட்டுமே. இவை இரண்டு மட்டுமே உள்ளன, மேலும் அவற்றை அடைய சொல்லப்பட்ட விதிகளை பின்பற்றுவது ஒன்றே வழி.

ஹிந்துமத தத்துவத்தில், உன் படைப்பை பற்றிய அஞ்ஞானத்தை அழித்தல் என்பதே கொள்கை. அது இந்த பிறவியிலயோ அல்லது அடுத்த பல பிறவிகளிலோ உன் கர்மவினையை பொருத்தும், ஒவ்வொரு பிறவியிலும் நம் வாழ்க்கை முறையை சார்ந்தும், அப்பிறப்புகளில் எந்த சம்பிரதாயத்தை சார்ந்து இருந்து கடவுளுடன் தொடர்பை அனுபவிக்கிறாய் என்பதை பொருத்தும் அமையும்.இதுவே நான் இந்தியாவில் இருந்த தத்துவங்களை பற்றி சொல்ல நினைத்தது. மேலும் எப்படி பலவிதமான பிரிவுகளான கணிதம்,வானசாஸ்திரம், தத்துவம்,இலக்கணம், உரைநடை,சங்கீதம், மருத்துவம் என்று எதை எடுத்தாலும் அவை இந்நாட்டின் மத தத்துவதுடன் ஒன்றாக இணைந்து, அதனுள் பொதிந்து விளங்கின.எல்லாம் பிரம்மாவிலிருந்து தொடங்கியது என்று அவரை முன் வைக்கின்றன. பிரம்மா அஸ்வினி என்று எண்ண, அஸ்வினி தொடங்கினார். பரத்வாஜர் அதனை மற்றவருக்கு கொடுத்தார் என்று இப்படி போகிறது. எல்லா ஞானமும் பிரம்மாவிலிருந்து ஏற்பட்டதாக இந்துமதம் சொல்கிறது.


Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: