வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021
Home > வேதங்களும் புராணங்களும் > இராமாயணம் > ஏன் இந்திய மஹாகாவியங்கள் ஆசிய கண்டத்தை ஒருங்கிணைப்பவை யாக உள்ளன?

ஏன் இந்திய மஹாகாவியங்கள் ஆசிய கண்டத்தை ஒருங்கிணைப்பவை யாக உள்ளன?

Translation Credit: Geetha Muralidharan.

இந்த மகா காவியங்கள் மிக முக்கியமானவை மற்றும் மிக ஆழமாக மதிக்கப்படுகின்றன. என்னிடம் பத்து நாடுகளில் எடுக்கப்பட்ட ராமாயணம் பற்றிய படம் உள்ளது. மேலும், நானும், சுஜாதாவும் மற்ற நாடுகளில் எப்படி ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் ராமாயணத்தை போற்றுகிறார்கள் என்று கண்டோம். வேறு பல ஆசிய நாடுகளில், இங்கு போற்றுவதை விட அதிகமாக ராமாயணத்தை போற்றுவதை
நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அது அவர்களின் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகும். இரண்டு மனிதர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ”நீ மறுபடியும் விபீஷணன் போல நடக்கிறாய்” என்று ஒருவர் சொல்வதை கேட்கலாம். எனவே அது அவர்கள் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது.

தாய்லாந்து போன்ற ஒரு பௌத்த நாட்டிலும் இன்றும் அரசர் ராமா என்று அழைக்கப்படுகிறார். அவர், விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படுகிறார். அந்நாட்டின் பிரதம மந்திரி, பரம்பரையாக தன்னை ராமரின் சேவகனாகவும் , அவருடைய மிகப்பெரிய பக்தனான ஹனுமானாகவும் கருதுகிறார். இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் மிகப்பெரிய அளவில், மிக அழகாக, முழு ஈடுபாட்டுடன் தினமும் ராமாயணம் கதை நடத்தப்படுகிறது.

கம்போடியாவில் மிக உயர்ந்த முறையில், மிக அழகான முறையில், மிக ஆழ்ந்த த்யானம் போல்ராமாயணத்தை நடத்துகிறார்கள். நடிக்கும் கலைஞர்கள் அதற்கு முன் நடக்கும் பூஜையில் தங்களை இழந்து விடுகிறார்கள். இந்த நாடுகளில் பாரதத்தின்பழமையான முறையில் இந்த நாடகத்தை நடத்த மாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நாம் மேடைகளில் நடிக்கும் முறை பல சமயங்களில் முற்றிலும் தவறானது. ஏனென்றால், அந்தவித நடனம் தெய்வீகமானது. மணிப்புரி போன்ற சில இடங்களில் அந்த முறை இன்றும் உயிரோடு இருக்கிறது என்பது அதிர்ஷ்டவசமே.

மணிபுரியில் நான் இதை படமாக்கி இருக்கிறேன். ராஸலீலையை மேடையில் நடிக்கும்போது நடிகர்களும், பார்வையாளர்களும் ஒன்றாகி விடுவார்கள்.பக்தியில் ஒன்றாகி விடுவார்கள். கைத்தட்டலோ, வேறு ஒன்றோ அதன் பிறகு அங்கே இருக்காது.அது அங்கே நாடகம் அல்ல.எனவே, மகா காவியங்கள் முக்கியமானவை. இந்த மகா காவியங்கள் ஆசிய கண்டம் முழுமையிலும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.


Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: