இந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் மிகவும் தேர்ந்த கட்டமைப்பு மூலம் தனிப்பட்ட நிர்வாக வலையமைப்பை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டிலிருந்து பண உதவி பெறுகின்றன. எப்போதும் அவை தரும் விளக்கங்களும், வாதங்களும் அவற்றின் சகோதர அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன. நான் சொல்லியபடி, பிரிவினை வாதிகளின் அபிலாஷைகளை ஆதரித்தே ஜம்மு-காஷ்மீர் மக்கள் நடக்கின்றனர்., அவை காஷ்மீரிகள் எதிர்பார்ப்பை உறுதிசெய்வதில் அதிக பங்கு கொள்கின்றன. மாவோயிஸ்ட்ஸ், இடதுசாரிகள், மனிதநேய அமைப்புகளை விட்டால், இந்தியாவில் வேறு எவரும் காஷ்மீரிகளை பற்றி அக்கறை கொள்வதில்லை என்று பிரிவினை வாதிகள் வெளிப்படையாக சொல்வது அறியப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் செயலால், இந்தியஅரசாங்கம் எவ்வளவோ உதவிகள் செய்தும் அவற்றை அவர்கள் அங்கீகரிக்கவில்லை, மேலும், இந்தியாவை தங்கள் சொந்தமாக எண்ணுவது அவர்களின் நடுவே மறைந்து வருகிறது.
நாம் இந்த அமைப்பின் வலைப்பின்னலை தீவிரமாக பார்க்கவேண்டும்? என் என்றால் அது இங்கே இந்தியாவின் வேர் வரை சென்று பரவி உள்ளது. இவர்கள் நம் நாட்டின் சமுதாய அமைப்புகள், கலாச்சார அமைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்புகளை பாதிக்கும் ஒருங்கிணைத்த செயல்களை செய்கின்றனர்.
தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்தில் — முதலில் நன் ஜம்மு-காஷ்மீர் பற்றி வலியுறுத்தினேன். அவர்களின் COHR [மனித உரிமை ஒருங்கிணைப்பு கழகம்] என்ற ஒன்று மணிப்பூரில் மிகவும் தீவிரமாக செயல்படுகிறது.மணிப்பூர் மக்களுடன் மிக நெருக்கமாக வேலை செய்து அவர்களின் சுய நிர்ணயத்தை ஆதரிக்கின்றனர். சுய நிர்ணய உரிமை. தங்களுக்கு வேண்டியதை மணிப்பூர் மக்களே தேர்ந்து எடுக்க உரிமை உண்டு என்று இவர்கள், பிரிவினை வாதத்தை ஆதரிக்கின்றனர், வடகிழக்கு பகுதி முழுவதும் பிரிந்து செல்ல ஆதரிக்கின்றனர். என் எஸ் சி [NSC ] பிரிவை சேர்ந்த கப்லாங்கை கொலை செய்ததற்காக அரசாங்கத்தை எதிர்த்து வெளிப்படையாக கண்டனம் செய்கின்றனர். மக்களிடம் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்று சொல்லி அங்கே மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்களை, அணைகள் கட்டப்படுவதைஎதிர்க்குமாறு சொல்கின்றனர். மெதுவாக தங்களின் நெட்ஒர்க் மூலம், வரையறுக்கப்பட்ட , இந்தியாவிற்கு எதிரான, தங்கள் எண்ணங்களை பரப்பி வருகின்றனர். இந்த காரணத்திற்காகவே நாம் இவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
தேசிய கண்ணோட்டம் , மற்றும் உள்நாட்டு பாதுகாப்பின் மற்றொரு அம்சம் , ஆயுதங்களை வைத்திருக்கும் அவர்கள் சகோதரர்கள். அவர்கள் அர்பன் நக்சல்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இது அவர்களை குறித்த புதிய பெயராகும். ஆனால், மார்க்ஸ் நகர்ப்புற மக்களிடம் மட்டுமே தன் கொள்கையை பரப்ப வலியுறுத்தினார். எனவே, அது எப்போதுமே ஒரு நகர்ப்புற இயக்கமாகவே இருந்தது. மாவோவினால் அது மெல்ல கிராமங்களிலும் பரவியது. மாவோ விவசாயிகளை முன்னேற்றுவதையே தன் லட்சியமாக எண்ணினார். எனவே அது பெரும்பாலும் கிராமப்புறங்களை மைய்யமாக கொண்டே இருந்தது. இவை இரண்டையும் இணைத்து இந்தியாவில் இயக்கம் நடத்தும் இந்த இடதுசாரிகளின் ஒரு கரம் அர்பன் நக்சல்கள், மற்றொரு கரம் உண்மையாகவே ஆயுதங்களை ஏந்தி அரசாங்கத்தை எதிர்க்கும் அவர்களின் சகோதரர்கள். இவர்கள் இருவரும் தொடர்பு உடையவர்களே.