கி.பி.2000 ப்ரோட்டஸ்டண்ட்களுக்கு இடையே இருந்த சில வேறுபாடுகளை போக்கி உள்ளது. பிராட்டஸ்டன்ட் பிரிவுகள், ஒழுங்குபட்டு, தங்களை விட்டு வெளியே உள்ள பிற மதத்தவர்களை குறி வைக்கவேண்டும், மதமாற்றம் செய்யவேண்டியவர்களை குறி வைக்கவென்றும்,என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. 2000 முதல் ஒவ்வொரு மக்கள் குழுவிலும் ஒரு சர்ச் ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்கள் எண்ணம் ஆகியது.
இங்கே தான், நீங்கள் இந்தியாவில் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கே திடீரென்று ஒரு சர்ச் முளைத்திருப்பதை காண்கிறீர்கள்.இது திடீரென்று நடக்கவில்லை. இது 20 — 30 வருடங்கள் முன்பே திட்டமிடப்பட்ட ஒரு போராகும். திட்டம் என்னவென்றால், ஒரு சர்ச் ஐ நிலைநாட்டுவோம், அந்த சர்ச் அங்கே சுற்றி உள்ள எல்லா மக்களையும் மதம் மாற்றுவதற்கு விதையாக அமையும்..இதன் இணை தலைவர் பில்லி கிரஹாம் ஆவர். இது மிகவும் வலிமை வாய்ந்த இயக்கமாகும், மேலும் மிக நுணுக்கமாக அமெரிக்காவின் வலிமையுடன் தொடர்புடையது.
எவ்வளவு வலிமையானது என்றால் அமெரிக்க அதிபர்கள் southern பாப்டிஸ்ட்களுடன் இதை பேசி இருக்கின்றனர்.. பல அமெரிக்க அதிபர்களும் southern பாப்டிஸ்ட்களே ஆவர். பெரும்பாலும் எல்லா அதிபர்களும், டெமோகிராட்ஸ் உள்பட, இது republican விஷயம் அல்ல, உதாரணமாக பில் கிளின்டன் போன்றோர் southern பாப்டிஸ்ட்களின் மாநாடுகளில் பேசி இருக்கின்றனர். ஜார்ஜ் புஷ் பேசி இருக்கிறார்.எனவே இது மிகவும் வலிமை வாய்ந்தது. சில ஆண்டுகள் முன் வெளிவந்த டெஹெலகா அறிக்கையும், CIA மற்றும் கல்வியாளர்கள் முதலியோர் ஜோஷுவா ப்ரொஜெக்ட்டுக்காக மிக விரிவான புள்ளி விவர சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று சொல்லி உள்ளது.
எனவே, ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், இந்தியர்கள் உள்பட புள்ளி விவர சேகரிப்பிலும், மற்றும் செயல் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். எனவே, இது ஒரு போர் நடப்பது போல உள்ளது. ஒரு மிகப்பெரிய சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பல பத்தாண்டுகளாக இது நடந்து வருகிறது. ஒரு பிரிவு, சண்டைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டால் அவர்களிடம் தாக்குதலுக்கான திட்டங்கள் இருக்கும். அவர்களிடம் உள்ள போர் வீரர்கள் தினமும் தாக்குவார்கள்.. எதிர்பக்கத்தில் இருப்பவர்களுக்கு இந்த சண்டை நடப்பது தெரியவில்லை. இதுதான் நாம் இன்று இருக்கும் நிலை. இந்த சண்டை இருக்கிறது என்ற உண்மையை பேசுவது கூட சரியல்ல. நமக்கு இதைப்பற்றி தெரியும் என்று சொல்வது கூட சரியல்ல. இந்த போர் பற்றி மிக சாதாரணமாக பேசப்படுகிறது.