Translation credits: Priya Darshini C N.
இன்றைக்கு ஏன் நினைவாற்றல் ஒரு முக்கியமான தலைப்பாக உள்ளது? சமுதாயத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்போதும் மற்றும் நிகழ்வுகளின் ஓட்டத்தை சிதைக்கும்போதும் நினைவாற்றல் ஒரு ஆய்விற்குரிய தலைப்பாக ஆகிறது. 9 /11 சமுதாயத்தை பிளந்தது. இதனால் திடீரென நினைவுகளின் மீது கவனம் சென்றது. நாம் யார், ஏன் என்ற கேள்விகளுக்கு முக்கியத்தும் கொடுப்பது சமுதாயப் பிளவுகளினால்தான். இப்பொழுது நம் சமுதாயத்தில் அப்படிப் பட்ட ஒரு பெரும் பிளவு இருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஏன்? அது எனக்கு தெரியாது. ஆனால் இதனால் தான் நாம் நம் நினைவுகளின் உள் மிக ஆழமாக செல்ல தொடங்கியுள்ளோம். இந்த எல்லா நாடுகளையும் நாம் ஆய்வுசெய்தோமானால் அவர்களுக்கு ஒரு கூட்டு நினைவாற்றல் உள்ளது. இது ஜெர்மனிக்கு மிக வலுவாக உள்ளது. இதை எடுத்துக்காட்டுகளின் மூலமாக தான் நான் விவரிக்க முடியும்.
ஒருமுறை ஜெர்மனியில் ஏன் உளவியல் பட்டறையில் ஒரு இளம் ஜெர்மானியப் பெண் கலந்துகொண்டார். அவர் மிகவும் அமைதியாகி இருந்தார். நான் அவருக்கு கொடுத்தாய் பயிற்சியை அவர் செய்யவில்லை. அப்பொழுது என்னுடன் பணிபுரியும் ஒரு ஜெர்மனுடன் சேர்ந்து அவரிடம் சென்றேன். ” உங்களுக்கு இந்த பயிற்சி மிக கடினமாக இருக்கக்கூடும் என்று தெரியும். நான் தூர தேசத்திலிருந்து வருகிறேன். எனக்கு உங்களுடைய கலாச்சாரம் அவ்வளவாக புரியாது. அதனால் உங்களுக்கு நான் கூறி எதாவது புரியவில்லையெனில், அதை பற்றி நாம் பேசலாமா?” என்று கேட்டேன். பின் அந்தப் பெண் மிகவும் மௌனமானார். ஏன் சக பணியாளரிடம் ” நான் எதாவது தவறாக கூறிவிட்டேனா?” என்று கேட்டேன். அவர், டாக்டர் பெட்ரி, என்னை நிறுத்தி அந்தப்பெனிடம் எதோ ஜெர்மனில் கூறி பின் என்னை அழைத்துச் சென்று விட்டார். அவர் என்னிடம் ” நீங்கள் அவரிடம் பேசும்பொழுது அவரை எதோ அறிதுயில் நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறீர்கள். உங்கள் மொழி அப்படி மிகவும் வசீகரமாக உள்ளது. உங்கள் இந்தியா மொழிகளில் வலிவு மெலிவு அதிகமாக உள்ளது தெரியுமா? நீங்கள் ஏற்ற இறக்குத்தடன் பேசுகிறீர்கள்”. அதற்கு நான் ” நீங்கள் இப்பொழுது கூறும்போது உணர்கிறேன். நீங்கள் நேரடியாக பேசுகிறீர்கள். ஒரே தொனி, ஒரே நிலையில் உங்கள் நெடுஞ்சாலைகளில் மெர்ஸடேஸில் போவது போல் ஏற்ற இரக்கம் இல்லாமல் பேசுகிறீர்கள்” என்றேன். அதற்கு அவர் ” ஆம், இங்கே நீங்கள் வசீகரமாக பேசினால் நாங்கள் உங்களிடம் பேசுவதிலிருந்து பின்வாங்கிவிடுவோம். உங்களை அதற்கு மேல் நம்ப மாட்டோம்.” எனக்கு அது மிகவும் புதிதாக இருந்தது அதனால் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர் ” ஹிட்லர் எங்களை என்ன செய்தற் என்று தெரியுமா? ஹிட்லரின் குரல் மிகவும் வசீகரமாகவும் ஏற்ற இறக்கத்துடனும் இருக்கும். அதனால் அவ்வாறு பேசுபவர்களை நாங்கள் நம்ப மாட்டோம் . அதனால் மறுமுறை அப்படி பேசாதீர்கள்.” என்றார்.
இதனால் அதற்குப்பின் நான் பல பயிற்சிப்பட்டறை ஜெர்மனியில் நடத்தி உள்ளேன். அங்கே எப்பொழுதுமே ஒரே தொனியில் தான் பேசுவேன். இதனால் வெற்றிகரமாக உள்ளேன். ஜெர்மானியர்கள் என்னிடம் வந்து ” இது மிகவும் சிறந்த பயிற்சிப்பட்டறை. நாங்கள் மிகவும் ரசித்தோம். மிக்க நன்றி” என்பார்கள்.” ஆம். சரி” என்று நான் ஒப்புக்கொள்வேன். எனவே 70 வது ஆண்டுகளுக்குப் பின்பு,ம் கூட அவர்கள் ” எங்கள் கலாச்சாரத்தில் இதை (எங்களை சாதமாகப் பயன்படுதிக்கொள்வதை) நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை நாங்கள் தீர்மானித்து விட்டோம். அதனால் இதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெளிவாக இருக்கின்றனர்.