வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2021
Home > இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல் > ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பார்வைகள்

ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பார்வைகள்

Translation credits: Priya Darshini C N

ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வைகள் ஒரு இஸ்லாமியர் தனது தாய்நாட்டிற்கு [இந்தியா] விசுவாசமாக இருப்பதைப் பற்றி, அம்பேத்கர் எழுதுவதாவது: “கொள்கைகளில், கவனிக்கத்தக்கது இஸ்லாத்தின் கொள்கையாகும். இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இல்லாத ஒரு நாட்டில், இஸ்லாமியச் சட்டத்திற்கும்  அந்நாட்டின் சட்டத்திற்கும் மோதல் ஏற்பட்டால் இஸ்லாமியச் சட்டம்  வெற்றிபெற வேண்டும். இஸ்லாமியச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்கும் அந்நாட்டின் சட்டத்தை மீறுவதற்கும் ஒரு இஸ்லாமியர்  நியாயப்படுத்தப்படுவார். ” இதற்குப்  பின்வருவனவற்றை மேற்கோள் காட்டுகிறார்: “ஒரு இஸ்லாமியர், குடிமகனாக இருந்தாலும், சிப்பாயாக இருந்தாலும் , ஒரு இஸ்லாமியரின் கீழ் அல்லது இஸ்லாமியர் அல்லாத நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்தாலும், குரானால் கட்டளையிடப்படுவது கடவுளிடமும், நபி மற்றும் அதிகாரத்தில் இருக்கும் இஸ்லாமிரைடமும் அவர் கொண்டுள்ள விசுவாசத்தை ஒப்புக் கொள்ளும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.”

அம்பேத்கர் மேலும் கூறுகிறார்: “இது ஒரு நிலையான அரசாங்கத்தை விரும்பும் எவரையும் மிகவும் பயப்பட வைக்க வேண்டும். ஆனால் இது ஒரு நாடு இஸ்லாமியருக்குத்  தாய்நாடாக இருக்கும்போது, அது இல்லாதபோது பரிந்துரைக்கும் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு ஒன்றுமில்லை. இஸ்லாம் நியதிச் சட்டத்தின்படி, உலகம் தார்-உல்-இஸ்லாம் (இஸ்லாத்தின் தங்குமிடம்), மற்றும் தார்-உல்-ஹர்ப் (போரின் உறைவிடம்) என இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாடு இஸ்லாமியர்களால் ஆளப்படும் போது தார்-உல்-இஸ்லாம். ஒரு நாட்டில் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள், ஆனால் அதன் ஆட்சியாளர்கள் அல்ல என்றல் அது தார்-உல்-ஹர்ப். இஸ்லாமியர்களின் நியதிச் சட்டம் இவ்வாறு என்பதால், இந்தியா இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் பொதுவான தாய்நாடாக இருக்க முடியாது. இது இஸ்லாமியர்களின் நிலமாக இருக்கலாம் – ஆனால் அது ‘இந்துக்கள் மற்றும் முசல்மான்கள் சமமாக வாழும்’ நிலமாக இருக்க முடியாது. மேலும், இது இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படும் போதுதான் அது இஸ்லாமியர்களின் நிலமாக இருக்க முடியும். நிலம் ஒரு இஸ்லாமியர் அல்லாத சக்தியின் அதிகாரத்திற்கு உட்பட்டத்  தருணம், அது முஸ்லிம்களின் நிலமாக இராது. தார்-உல்-இஸ்லாம் என்பதற்குப் பதிலாக அது தார்-உல்-ஹர்பாக மாறுகிறது.” இந்த பார்வை கல்விக்காக மட்டுமே கொண்டுள்ளது என்று கருதக்கூடாது. ஏனெனில் அது இஸ்லாமியர்களின் நடத்தையை பாதிக்கும் திறன் கொண்ட ஒரு செயலில் இருக்கும் சக்தியாக மாறுகிறது. தர்-உல்-ஹர்பில் இருக்கும் இஸ்லாமியர்களளுக்குத்  தப்பிப்பதற்கான ஒரே வழி ஹிஜ்ரத் [குடியேற்றம்] மட்டுமேஅல்ல என்பதையும் குறிப்பிடலாம். ஜிஹாத்  என்று அழைக்கப்படும் முஸ்லீம் நியதிச் சட்டத்தின் மற்றொரு தடை உள்ளது. இதன் மூலம் “இஸ்லாம் ஆட்சியை நீட்டிக்க ஒரு முஸ்லீம் ஆட்சியாளருக்கு முழு உலகமும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை அது அமையும். உலகம், தார்-உல்-இஸ்லாம் (இஸ்லாத்தின் உறைவிடம்), தார்-உல்-ஹர்ப் (போரின் உறைவிடம்) என இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டு, அனைத்து நாடுகளும் ஒரு வகையின் கீழ் வருகின்றன. தார்-உல்-ஹர்பை தார்-உல்-இஸ்லாம் ஆக மாற்றுவது முஸ்லிம் ஆட்சியாளரின் கடமையாகும். ”மேலும், இந்தியாவில் முஸ்லிம்கள் ஹிஜ்ராத்தை நாடிய நிகழ்வுகளும் உள்ளன. ஜிஹாத்தை அறிவிக்க அவர்கள் தயங்கவில்லை என்பதைக் காட்டும் நிகழ்வுகளும் நடந்துள்ளது.


Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.