செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2021
Home > சுவிசேஷ அச்சுறுத்தல் > மத மாற்றம் என்ற வியாபாரம் | ஜோஷுவா ப்ராஜெக்ட்

மத மாற்றம் என்ற வியாபாரம் | ஜோஷுவா ப்ராஜெக்ட்

Translation Credits: Geetha Muralidharan.

இந்த செய்தி சர்வதேச மிஷன் குழுவிடமிருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பாப்டிஸ்ட்டை மதமாற்றத்தின் சுவிசேஷ பிரிவாக மாற்றவேண்டும். கடவுளின் பெருமையை, அவனுடைய அதிசயங்களை மற்ற மதத்தினர் நடுவில் பரப்பவேண்டும். ஜீசஸ் எல்லா மக்களையும் சென்றடைய தேவையான ஏராளமான வளங்களை ஒன்று சேர்க்க சில பாப்டிஸ்ட்களை கடவுள் நியமிக்கிறார்.. இதுவே அந்த மிஷனின் அறிக்கையாகும்.

மற்ற மதத்தினரை காப்பாற்ற இந்த செய்தியை அவர்களிடையே பரப்பவேண்டும் என்று மிஷினரிகள் சொல்கிறார்கள். இவர்களால் மற்ற மக்கள், அவர்களின் மதங்கள், அவர்களின் பாரம்பரியம் மதிப்பற்றவையாக பார்க்கப்படுகின்றன. இவர்களுடைய சாத்தான் அந்த மக்களின் மனங்களை பீடித்து உள்ளது. அதிலிருந்து விடுபட வழி கிறிஸ்துவ கொள்கைகளை அவர்களிடையே பரப்புவதே ஆகும். இது அவர்களின் கண்ணோட்டமாகும். இது அவர்கள் குறிக்கோள்அல்ல என்று நாம் உணரவேண்டும். இது கடவுளின் குறிக்கோள். மத்தேயு 24 : 14 இல் இயேசு சொன்ன அவருடைய கனவாகும். எல்லா நாடுகளிலும் ராஜ்ஜியத்தின் நற்செய்தி பரப்பப்படும், பிறகு முடிவு வரும்.

பல நேரங்களில் இந்த மிஷனரிகள், மற்றும் மத போதகர்கள் ஏன்இதை செய்கிறார்கள் என்று புரிவதில்லை. அவர்கள் அதை தங்கள் மதத்திற்காக செய்வதாக எண்ணுகிறார்கள்,தங்கள் மத புத்தகங்கள் சொல்வதாகவும்,எனவே தங்கள் இதை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.அது மட்டுமல்ல, இறந்த எல்லா கிறிஸ்துவர்களும் தங்கள் கல்லறையில் இந்த வெளிப்படுத்தலுக்காக, தீர்ப்பு தினத்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அன்றைய தினத்தில் அவர்கள் உடலுடன் கல்லறையிலிருந்து எழுந்து சொர்கம் செல்வார்கள்.இதுவே அவர்கள் நம்பிக்கை. எனவே, அந்த நாள் எப்போது வரும்? இதுதான் கிறிஸ்துவ மதம் தோன்றிய தினத்திலிருந்து கேட்கப்படும் கேள்வியாகும். அவர்கள், அது வெகு விரைவில் நடக்கும் என்று நினைத்தார்கள். இதைப்பற்றி பலப்பல திரைப்படங்களும் அங்கே எடுக்கப்பட்டு, தீர்ப்பு தினத்திற்காக காத்திருக்கின்றன. இந்த உலகத்தின் முடிவிற்காகவும், தாங்கள் சொர்கம் செல்லும் தினத்திற்காகவும் அவர்கள் இடைவிடாது காத்திருக்கின்றனர். 2000 த்தில் முடியும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நூறாண்டு வந்ததும், எவரோ ஒருவர், தீர்ப்பு தினம் வந்து விடும், நாம் இறுதியாக விடுதலை பெற்றுவிடுவோம். கல்லறைகளில் உள்ள அழுகும் உடல்கள் விடுதலை பெற்று மேலே சென்றுவிடும் என்று சொன்னார்.

அவர்களின் நம்பிக்கையின் படி, மத கோட்பாட்டை உலகம் முழுவதும் பரவ செய்துவிட்டால் முடிவு வந்துவிடும். தீர்ப்பு நாள் வந்துவிடும், சொர்கம் சென்றுவிடலாம். இது மதத்தை பரப்ப ஒரு முக்கியமான உந்துதலாகும். தனிப்பட்ட மற்றொரு அம்சம், பயமே கிறிஸ்துவத்தை நம்பவும், பரப்பவும் தூண்டுகிறது. எனக்கு நினைவில் இருக்கிறது, ஒரு முறை நான் சியாட்டலில் ஓர் புத்த கோவிலில்பௌத்தராக மதம் மரியா ஓர் அமெரிக்க பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரிடம், மதம் மாறிய காரணம் என்ன, மாறிய பிறகு ஏற்பட்ட மாற்றம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், நரகம் பற்றிய பயத்திலிருந்து தனக்கு விடுதலை கிடைத்ததாக சொன்னார். அது என்ன நரக பயம்? இவை எல்லாம் இஸ்லாமியத்திலும் நடக்கிறதா?

தான் கிறிஸ்துவனாக இருப்பதால் சொர்கத்திற்கு போவோம் என்று நம்புகிறான். ஆனால் அதை பற்றி நிச்சயமாக தெரியாது. ஒரு வேளை அவன் நல்ல கிருத்துவன் அல்லவோ? அல்லது நம்பிக்கை உறுதியானது இல்லையோ? ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு இந்த நரகம் பற்றி சொல்லப்படுகிறது, அங்கே சென்றுவிடுவோமோ என்ற மிகப்பெரிய பயம் அவர்களிடம் உள்ளது, முக்கியமாக குழந்தைகள் இதனால் மிகவும் அச்சுறுத்த படுகிறார்கள். குழந்தைகள் அங்கே சென்று நெருப்பு, நரகம், என்று இவை பற்றி போதனை பெறுகிறார்கள். இவன் அனைத்தும் மிகவும் விரிவாக சொல்லப்படுகின்றன.

உண்மையில், சிறந்த விற்பனை பட்டியலில் இருந்த, இது பற்றிய ஒரு புத்தகம் என் நினைவில் வருகிறது. ”Taken Away ” அல்லது அது போல ஒரு பெயர் கொண்டது. அதில் ஒரு முழு பிரிவிலும் அவர்கள் நரகம் என்பது என்ன, மற்றும் அதை பற்றிய விரிவான விவரங்களை பற்றிபேசியுள்ளனர் எனவே, நரகம் பற்றிய பெரிய பயம் உள்ளது. இதுவே இந்த மிஷனின் உந்து சக்தியாக உள்ளது.அவர்களை, ஒருவேளை தாங்கள் இதை செய்தால், காப்பாற்றப்படலாம் என்றுநம்பவைக்கிறது. இறுதியில் கடவுள் அவர்கள் செயலால் மகிழ்ந்து அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பாற்றப்படலாம் . மற்றொரு எண்ணமும் உள்ளது. இப்படி அவர்கள் செய்தால், மற்ற நாடுகளும் செய்யும், உலகம் முடியும், இயேசு எல்லோரையும் சொர்கம் அழைத்து செல்வார் என்பதே அது.

இந்த கதையை நான் உங்களுக்கு சொல்ல காரணம் நீங்கள், நான், எல்லோரும் இதை எப்போதும் புரிந்து கொள்ளவில்லை என்பதே. எனக்கு பல வருடங்கள் கழித்தே, அமெரிக்காவின் பலவித சமூக மக்களுடன் பழகிய பின்பே புரிந்தது. உண்மையில் நான் ஒரு அமெரிக்க பெண்ணுடன் நட்பாக ஒரு நாள் சந்தித்த பொது அவள் என்னை அங்கு வந்ததன் நோக்கத்தை கேட்டாள். நான் அதற்கு அந்நாட்டின் பழங்குடிகளை பற்றிய மானுடவியலை அறிய வந்ததாக சொன்னேன்.அது வேடிக்கையாக சொன்னதே. ஆனால், நம்மை பற்றி அறிய அவர்கள் அங்கிருந்து மக்களை அனுப்பிய வண்ணம் இருந்ததால், அவர்களை பற்றி அறிய நான் அங்கு சென்றேன்.

அவர்கள் சமுதாயத்தை பற்றி படிக்கும் போது அங்கே இருக்கும் பல முரண்பாடுகளை நாம் உணர வேண்டும். அதில் ஒன்று ‘சரியான கோட்பாடு’ என்பது. அவர்களின் மத நம்பிக்கை வேறுபட்டது.ஒன்று, எல்லோருக்கும் தனிப்பட்ட பாரம்பரியம் உண்டு, அது நல்லது, அதை அவரவர் கடைபிடிக்கவேண்டும் என்கிறது. இதில் என்ன பிரச்சனை?
இன்னொரு பிரிவு உண்மை ஒன்று மட்டுமே, மற்றவை எல்லாம் பொய். எல்லோரும் உண்மையை மட்டுமே நம்பவேண்டும் என்பதே! சரியா? எனவே, கோட்பாட்டின் மற்றொரு பிரிவு, முரண்பாடு ஜோஷுவா ப்ரொஜெக்ட்டில் இருக்கிறது.”நீங்கள் சென்று, எல்லா நாட்டு மக்களையும் இயேசுவின் சீடர்களாக மாற்றவேண்டும். இந்த முரண்பாடே இந்த திட்டத்தினை இயக்கும் அச்சு ஆகும்.

ஜோஷுவா ப்ராஜெக்ட் என்பது என்ன? இதற்கு முன்னால் வேறு ஒரு இயக்கம் இருந்தது. கி.பி. 2000 இயக்கம் என்பதே அது. இரண்டாயிரமாவது ஆண்டு பிறப்பில் அவர்கள் அதிகமான நம்பிக்கை வைத்திருந்தனர்.அப்போது வெளிப்படுத்தல் நிகழ்ந்து, தீர்ப்பு நாள் வரலாம் என்று நம்பி, இவ்வளவு காலமாகியும் நாம் உலகை மாற்றவில்லையே என்று எண்ணி இரண்டாயிரம் நோக்கி சென்றனர். 1990 களில் இந்த இரண்டாயிரம் இயக்கம் பற்றிய ஆவணங்களை நாம் படித்தால், அது இப்படி இருக்கிறது. ”கோகோ கோலாவை அவர்கள் எப்படி எல்லா ஊர்களிலும், எல்லா இடங்களிலும் சந்தைப்படுத்தி இருக்கிறார்களோ அதுபோல நாமும் முழுமையான சந்தை படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உலகம் முழுதும் பரப்ப வேண்டும்.” இந்த சந்தை முயற்சியில் உலகில் இதுவே மிக பெரிய ஒன்றாகும்.

அவர்களிடம் உள்ள ”ஜீசஸ்” என்ற படத்தை 800 அல்லது 900 மொழிகளில் பெயர்த்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஒரு சிறிய பழங்குடி கிராமத்திற்கு சென்று அங்கே அவர்கள் மொழியில் இந்த படத்தை வெளியிடுவார்கள். அந்த பழங்குடியினர் தங்கள் மொழியில் ஒரு படத்தை பார்த்திருக்க முடியாது. ஆனால் இவர்கள் அந்த மொழியை நன்கு படித்து அதில் மொழி பெயர்த்திருப்பார்கள். படத்தில் ஜீசஸ் பழங்குடிகளை தன்னிடம் வரும்படி அழைப்பார்.. இதனால் அவர்களிடம் ஏற்படும் மன தாக்கம் சர்வ தேச சந்தை படுத்தலில் ஈடுபடும் எந்த சர்வதேச பன்னாட்டு நிறுவனத்தின் முயற்சியையும் சிறியதாக்கிவிடுகிறது என்பதே உண்மை.


Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: