சமீப காலமாக நான் இதை பார்த்து வருகிறேன். அவர்கள் அதை சிறிது தூய்மை படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அதை சிறிது சுவை படுத்தி இருப்பதால் முந்தைய முறைகளை நாம் காண முடியாது. ஆனால் ஜோஷுவா ப்ரொஜெக்ட்டில் மிகவும் அதிகமான குழுக்கள் இந்தியாவில் உள்ளன என்பதே முக்கிய விஷயம். அவர்களிடம் 10 /40 என்னும் சாளரம் உள்ளது.இதன் பொருள் என்ன? அது பத்து டிகிரி வடக்கு அட்ச ரேகை முதல் நாற்பது டிகிரி வடக்கு அட்ச ரேகை வரை உள்ள பிரதேசம் என்று பொருள் படும். இந்த பிரதேசமே மத மாற்றம் செய்யப்படாத மக்கள் அதிகம் உள்ள இடம்.அவற்றில் மிக அதிகமானவை மத பிரச்சாரம் செய்வதை அனுமதிக்காத இஸ்லாமிய நாடுகள் ஆகும்.எனவே, இந்தியா, இந்த மதம் மாற்றும் இயக்கத்தில் மிகப் பெரிய, மிகவும் சுலபமான இலக்கு ஆகும். அவர்களிடம் இந்த விவரங்கள் உள்ளன. 100 மேலும் 2480 பாட்டியா மக்கள் சிக்கிமிலும்,47000 ஷேர் பால்,162000 திபெத்திய பௌத்தர்கள், 3165200 பனியா ஜைனர்கள்3 .4 மில்லியன் அரோராக்கள் என அவர்கள் மிக துல்லியமாக கிராமங்கள் அளவில் சென்று செய்துள்ளனர் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை பேர் என்று கணக்கெடுத்து உள்ளனர். எப்படி அவர்களிடம் பேசுவது, எப்படி ஒரு ஜெயினிடம் பேசுவதற்கு மாற்றாக ஒரு சீக்கியனிடம் பேசுவது என்னும் இவை எல்லாம் மிக விவரமாக உள்ளன. அவர்கள் இவற்றை பல பத்தாண்டுகள் முன்பே திட்டமிட்டுள்ளனர்.அவர்கள் மதக்கல்வியில் ஒரு பிரிவு இதைப்பற்றியதே.
மதம் மாற்றுவதை செய்ய கல்லூரி பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி திட்டம் செய்பவர்கள் என்று எல்லாம் இருக்கின்றனர். க்ரிஸ்டலாஜி, மிஷினாலஜி என்றால் என்ன? இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பழைய முறைகள் எவை? மிஷினரிக்களை மதமாற்றத்தில் ஈடுபடுத்த கற்பிக்கும் கல்லூரிகள் உள்ளன. மொங்ப்ப இனம் முதல் பஞ்சாராக்கள் வரை அவர்கள் குறி உள்ளது பஞ்சராக்கள் மீது அவர்கள் வைக்கும் குறி என்னை வருத்தியது. மிகவும் செழிப்பான அவர்கள் பழக்கங்களை விட்டு அவர்கள் மாறிய பின்னால் இயேசு ஒருவரே என்று என்னும்போது ஏதோ மாறிவிடுகிறது. பழைய கடவுள் பக்தி இருக்க முடியாது, பழைய பாடல்களை பாட முடியாது பழைய நடனம் ஆட முடியாது, எல்லாம் அழிந்து விடுகிறது.எனவே, இது ஒரு கடவுளுக்கு பதில் மற்றொரு கடவுள் என்பது அல்ல.சுற்றுசுழலே அழிந்து விடுகிறது. இது மதமாற்றத்தின் ஒரு அங்கம் ஆகும்.கடந்த 50 ஆண்டுகளில்தான்மிக அதிகமான மத மாற்றம் நடந்துள்ளது. உதாரணத்திற்கு, காலனி ஆட்சி முடிந்த பின்பே ஆப்பிரிக்காவில் மிக அதிக மத மாற்றம் நடந்துள்ளது. இந்தியாவிலும், சுதந்திரத்திற்கு முன்பைவிட அதன் பின்பே அதிக மத மாற்றம் நடந்துள்ளது.வட கிழக்கில் பெரும்பான்மை நாக மக்கள் மதம் மாற்றப்பட்டனர். வட கிழக்கு முழுவதும் சுதந்திரத்திற்கு பின்பே மத மாற்றம் நடந்தது. இப்போது, தெற்கிலும், பஞ்சாபிலும் மிகப்பெரிய முயற்சி நடக்கிறது.