வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22, 2021
Home > சுவிசேஷ அச்சுறுத்தல் > மனித உரிமை என்னும் போர்வை கீழ் நடக்கும் மத மாற்றங்கள் | தெசலோனிக்கா திட்டம்.

மனித உரிமை என்னும் போர்வை கீழ் நடக்கும் மத மாற்றங்கள் | தெசலோனிக்கா திட்டம்.

இது வெறும் அடையாளப்பூர்வமானது அல்ல. உண்மையில் திணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஸ்ரீலங்கா அரசாங்கம் , கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற முயன்ற போது, அமெரிக்கா நாட்டின் secretary of state ஸ்ரீ லங்காவின் தூதரிடம், இந்த சட்டம் மத உரிமையில் தலையிடுவதாகவும், மற்றும் இதனால் இரு நாடுகளின் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் சொன்னார். எனவே, இதன் பின்னால் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அமைப்பு உள்ளது. . மிஷினரிகள் நாட்டின் உள்ளே வந்ததும்,இது தானாக நடப்பதில்லை. அவர்கள் பிரச்சாரத்தை கொண்டு செல்ல ஏராளமான பணம் டாலர் வடிவில் வருகிறது. அத்துடன் அரசியல் பலமும் வருகிறது. உண்மையில் USCIRF என்னும், United states commission for religious freedom என்னும் அமைப்பு, இந்த நாடுகளை பற்றி அறிக்கைகளை உண்டாக்குகிறது. ஆனால், உண்மை குறிக்கோள் பல் வேறு நாடுகளில் மிஷினரிகளுக்கு மதமாற்றம் செய்ய தடை இன்றி செய்வதே ஆகும்.

தெசலோனிக்கா என்ற ஒரு திட்டம் உள்ளது. எத்தனை பேருக்கு இதை பற்றி தெரியும்? சரி, ஒரு சிலரே அறிவர். கூகுளில் சென்று இந்த தலைப்பிலும், திட்டத்தை பற்றியும் தேடுங்கள். தெசலோனிக்கா பற்றி நான் INDIAFACTS இல் எழுதினேன். இந்த திட்டம் எதை பற்றியது? joshua project வெளிப்படையான முயற்சிகள் பற்றியது. அது வெளிப்படையானதால் யார் வேண்டுமானாலும் அதை பற்றி அறிந்து கொள்ளலாம். ஆனால் தெசலோனிக்கா ரகசியமான முயற்சி பற்றியது. ஒரு போர் அடிப்படையில் திட்டமிட்ட தாக்குதல் பற்றி இது சொல்கிறது. ”நாம், சமூகத்தில் உள்ள குறிப்பிட்ட பிரபலமான சிலரை மதம் மாற்றி விட்டால், நம் திட்டம் வெற்றி பெற்று விடும்” என்பதே இதன் உள்ளடக்கமாகும் . எனவே இத்திட்டம் ஹிந்துக்களின் வாழ்க்கை முறைகளை தடுக்க அந்த சமுதாயத்தில் பிரபலமானவர்களை மதம் மாற்றவும், ஹிந்து பண்டிகைகளை நடக்காமல் தடுக்கவும், மாறுபட்ட பழக்கம், மற்றும் நடவடிக்கைகளை பரப்பவும் முயல்கிறது. கிரேக்க நாட்டு தெசலோனிக்கி என்னும் நகரத்திலிருந்து இது தோன்றியது. கிரேக்க நாட்டில் கிறிஸ்துவ மதம் திணிக்கப்பட்டபோது, அங்கே பாரம்பரியமாக நடந்து வந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில், கிரேக்க கடவுள்கள், மற்றும் தேவதைகளுக்கு மரியாதைகள் செய்யப்பட்டதால், இந்த பழக்கம் கிறிஸ்துவத்திற்கு அச்சுறுத்தல் என்றுகருதப்பட்டது.எனவே இவை அனைத்தும் அங்கே தடை செய்யப்பட்டன, முற்றிலும் அழிக்கப்பட்டன, அந்த விளையாட்டுகளும் நின்று போயின.

ஏனென்றால், ஒலிம்பிக் விளையாட்டுகள் அந்த மக்களை இணைத்தன, மக்களிடையே மத நம்பிக்கையை வளர்த்தன. ஒரு விளையாட்டு விழா கூட சர்ச் களுக்கு பிரச்சினை ஆகிவிட்டது. எனவே, ஹிந்து பண்டிகைகள், நம்பிக்கைகளை இவர்கள் தாக்குவது, இந்த தெசலோனிக்கா திட்டத்திலிருந்து வந்ததே. இந்த தாக்குதல்களுக்கு தேவையான பொருளுதவி குறிப்பிட்ட சர்ச்கள் மூலம் வருகிறது. நாஷ்வில்லியில் உள்ள பாப்டிஸ்ட் சர்ச், இந்தியாவில் கும்ப மேளாக்கள் நடக்கும் நகரங்களை தன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டு உள்ளூர் மக்களை மத மாற்றம் செய்து, அடுத்த முறை அங்கே விழாவிற்கு வருபவர்களுக்கு பல துன்பங்களை தருகிறது. மற்றொரு மிஷன் காசி நகர படகோட்டிகளை தன் கீழ் கொண்டுவருகிறது. அந்த படகோட்டிகள் வேறு பல துறைகளில் பயிற்சி பெறுகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் பரம்பரை தொழிலை விட்டு விடுகின்றனர். இப்படி இவர்கள், நம் சடங்குகள், மற்றும் வாழ்க்கை முறைகளை நன்கு அறிந்து கொண்டு அவற்றில் குறுக்கிட்டு, வேருடன் அறுத்து எறிந்து அவை மீண்டும் நடக்காமல் செய்கின்றனர். வேறு பட்ட தந்திரங்களை வேறு வேறு இடங்களில் பயன் செய்ய சொல்கின்றனர். இதனால் தான் நாம் சுற்று சூழல் ஆர்வலர்களின் குரல்களை சில இடங்களில் கேட்கிறோம்.

இந்த சுற்று சூழல் குழுக்களுக்கு பண உதவி வரும் பின் புலத்தை ஆராய்ந்தால் அது மேற்சொன்ன குழுமங்களில் இருந்து வருவது தெரியும் இந்த சுற்று சூழல் ஆர்வலர்கள் கணேஷ் சதுர்த்தியை எதிர்ப்பார்கள், ஸ்ரீ ஸ்ரீ டெல்லியில் நடத்தும் ஒரு நிகழ்ச்சியை எதிர்ப்பார்கள். இவற்றை நோக்கினால் ஏதோ நடப்பது போல தெரியும். இந்த போராட்டங்களில் பொது மக்களும் கலந்து கொள்வர். நாம் இதை எதிர்த்து தாக்கும் வழியை வகுக்க வேண்டும். சில இடங்களில் மிருக வதையை எதிர்க்கும் மிருக உரிமை குழுக்கள் ஜல்லிக்கட்டை எதிர்த்து போராட தூண்டப்படுவார்கள். எனவே, ஜல்லிக்கட்டு, மிருகங்களின் உரிமை பற்றிய ஒரு பிரச்சினை யாக மாறும். வேறு இடங்களில் பெண்ணுரிமை பற்றி பேசும் குழுக்கள் தூண்டப்படும்.

இவை அனைத்தும் மிகவும் முறையாக வகுக்கப்பட்டுள்ளன. ஏனெனில், இங்கே பொது நல வழக்கு பற்றிய சட்டம், ஒருவருக்கு அந்த பிரச்னையில் எந்த வித தொடர்பும் இல்லாத போதும் FCRA , NGO க்கள் ஒரு பொதுநல வழக்கை அந்த பிரச்சினை தொடர்பாக தொடரலாம் என்று உள்ளது.தமிழ் நாட்டில் ஏதோ நடக்கிறது என்று சொல்லலாம் என்று உள்ளது. உச்ச நீதி மன்றமும் இவர்களுக்கு உதவி செய்யும். நான், இதை பற்றி இருபது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். நாம் இப்படி காண்பவை எல்லாம் உண்மையில் நடப்பவை அல்ல. நம் முயற்சிகள் கடந்த இருபது ஆண்டுகளாக நடக்கின்றன. ஒன்றை பார்த்து நாம் ”ஓ இது நடக்கிறதே” என்று வருத்தப்படுகிறோம். நாம் இவற்றிற்கு எதிராக குரல் எழுப்புகிறோம். உள்ளூர் பிரச்சினை என்று எண்ணுகிறோம். சில ஹிந்துக்கள் நமக்கு எதிராக குரலும் கொடுப்பார்கள். ஒருவர், ஜல்லிக்கட்டு விலங்குகளை துன்புறுத்தும் நிகழ்ச்சி, அதை நடத்தக்கூடாது என்பார். இப்படி இதைப்பற்றி விவாதங்கள் நடைபெறும், ஆனால் அவை எல்லாம் இந்த ஜல்லிக்கட்டு பற்றியவை அல்ல. இதில் உள்ள முக்கியமான ஒன்று, இந்த பிரபலமான நிகழ்ச்சியை தடை செய்து அழிக்கவேண்டும் என்பதே. சபரிமலை பிரச்னையும் இப்படியானதே. அந்த ஆலயத்திற்கு செல்லும் விதிகளை நீக்கிவிட்டால், மக்களுக்கு அங்கே செல்லும் ஆர்வமும், பக்தியும் குறைந்து விடும்.அதனால், குறைவான மக்கள் அங்கே செல்வார்கள். இப்போது அங்கே வரும் காணிக்கையின் அளவு குறைந்து உள்ளது.

எனவே, மையமான கருத்து இவற்றை எல்லாம் அழிப்பதே. ஆனால், வெளியே சொல்லப்படும் பொய்யான கருத்து பெண்ணுரிமை, அல்லது வேறு ஒன்று. அழிப்பதே அவர்கள் குறிக்கோள்.


Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: