செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2021
Home > வேதங்களும் புராணங்களும் > இராமாயணம் > ஹிந்து கடவுள்களும், சமஸ்க்ரித மொழியும் ஜப்பான் தேசத்தின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.

ஹிந்து கடவுள்களும், சமஸ்க்ரித மொழியும் ஜப்பான் தேசத்தின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.

Translation Credits: Geetha Muralidharan.

நான் ஜப்பானில், இந்த இரண்டு மிக அழகான வேணுகோபாலனின் தெய்வ சிலைகளை கண்டேன். இன்று ஜப்பானில், இந்தியாவைப்போல் ஹிந்து கடவுள்களை வழிபடுவது பரவலாக உள்ளது. சரஸ்வதிக்கு மட்டுமே ஜப்பானில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன,மற்றும் அதில் ஒன்றில் 250 அடி உயர சரஸ்வதியின் சிலை உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் சரஸ்வதிக்கு அதிக வழிபாட்டு தலங்கள் இல்லை. மற்றும், லட்சுமி, சிவன், மற்றும் பல தெய்வங்களும் ஏராளமாக உள்ளன.

யமனுக்கும் கூட கோவில்கள் உள்ளன. கோமா [goma ] என்று ஜப்பான் மொழியில் கூறப்படும் ஹோமங்கள் ஒவ்வொரு நாளும், தினமும் ஒரு முறைக்கு மேலும் அங்கு கோவில்களில் நடத்தப்படுகின்றன என்பது உங்களுக்கு வியப்பை தரலாம். 1200 கோவில்களில் இவை நடக்கின்றன.
சமஸ்க்ரித மொழியில் சொல்லப்பட்டு நடக்கின்றன. எவ்வாறு ஜப்பானிய குருக்கள் சமஸ்க்ரிதத்தை உச்சரிக்கிறார்கள்? ஏனெனில், அவர்களுக்கு அந்த மொழி படிக்க தெரியாது. இது நமக்கு சொல்வது, Kana என்ற ஜப்பானிய மொழியின் எழுத்துக்கள் சமஸ்க்ரித மொழியின் உச்சரிப்பிலிருந்து உருவாக்கப்பட்டவை என்பதே. எனவே, நாம் ஜப்பானின் ஒரு ஆரம்ப பள்ளிக்கு சென்றால், அங்கே பிள்ளைகள், அ, ஆ, இ,ஈ, ஓ,ஓ, என்று இந்தியாவில்,சொல்வதை போலவே சொல்லக்காணலாம்.

ஜப்பானிய குருக்கள் முன்பு இருக்கும் பிரார்த்தனை புத்தகங்களில் சமஸ்க்ரித மந்திரங்களும், அவற்றுக்கு கீழே, Kana வில் உச்சரிப்பும் இருக்கும். எனவே, அவர்கள், Kana வில் படித்து சமஸ்க்ரிதத்தை சொல்கிறார்கள். அந்த சமஸ்க்ரிதம் எந்த காலத்தை சேர்ந்தது? ”Sidham ” என்ற 5 -6 நூற்றாண்டை சேர்ந்தது. எனவே, இந்தியாவில், மறந்து போன, இப்போது இங்கே எங்கும் கற்பிக்க படாத ”Sidam ”ஜப்பானில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.இன்றும், ஜப்பானில், Koyasan என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்த மொழி [ sidham ] கற்பிக்கப்படுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். நீங்கள் YouTube சென்று, ஜப்பானில் வணங்கப்படும் இந்திய கடவுள்கள் என்று தேடினால், நான் இதை பற்றி பதிவு செய்திருக்கும் படத்தை கண்டு களிக்கலாம். ஆசியா முழுவதும் உள்ள இந்திய கலாசாரத்தின் தாக்கம் மகத்தானது.


Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.