Translation Credits: Geetha Muralidharan.
பொது சகாப்தம் தொடங்கி 1700 வரை உள்ள தகவல்களை நோக்கினால், உண்மையில் இந்தியாவும், சைனாவும் GDP யில் தலைமை வகித்தன. தொடக்கத்தில் இந்தியா சைனாவை முந்தி இருந்தது. இந்தியா 18000 – 18500 இல் இருந்தது. சைனா சிறிது அதிகமாக, 18600 இல் இருந்தது. GDP இல் சைனா இந்தியாவை விட முன்னேறி இருந்தது. ஆனால், பொது சகாப்தம் 1700 வரை, இந்தியா சைனாவை விட அதிகமாக முன்னேறியது இது வரை பார்த்தால் உலக பொருளாதாரத்திற்கு இந்த இரண்டு நாடுகளை தவிர மற்ற மேற்கத்திய, மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு மிகவும் குறைவானது.
நாம் பல வித ஆட்சியாளர்கள் இந்த எழுநூறு ஆண்டுகள் இந்த இரு நாடுகளையும் ஆட்சி புரிந்ததை காணலாம். ஆனால், ஏதோ ஒன்று இங்கே அவர்களை வலுவானவர்களாகவும், உலகின் எல்லா நாடுகளின் தலைமையாகவும் வைத்திருந்தது.இதற்கு இரண்டு விதமான விவாதங்களை காணலாம். ஒன்று, உற்பத்தி அதிகமாக இல்லாததாலும், தொழில் புரட்சி இல்லாததாலும் மக்கள் தொகை மட்டுமே, பொருளாதார முயற்சிகளில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எனவே, அதிக மக்கள் தொகை, அதிக பொருளாதார முயற்சிகளுக்கு ஆதாரமாக இருந்தது என்பதாகும்.
இரண்டாவது விவாதம், இந்தியா, சைனாவில் ஏராளமான செல்வம், இயற்கை வளங்கள் நிறைந்து இருந்தன, எனவே அவை, அவற்றின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. அதற்கு இங்கே ஒரு அமைப்பும் இருந்தது என்பதாகும். என் ஆய்வு, அடிப்படையில் பொது சகாப்தத்தின் ஆரம்பத்திற்கு செல்கிறது. இதை நான் புரிந்துகொள்வதற்கு முன்னால், இத்தகைய பொருளாதார முயற்சிகளுக்கு இங்கே ஒரு அடிப்படையான அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணமாகும். இங்கேதான் கௌடில்யரின் கட்டமைப்பு வேலை செய்கிறது.
கௌடில்யரின் குறிக்கோள் என்ன? நாட்டில் அமைதியும், வளமும் இருக்கவேண்டும் என்பது அவருடைய முக்கிய குறிக்கோள் ஆகும். ஆனால் அதற்கு பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்று அவர் எண்ணினார்.எனவே, அவருக்கு முற்பட்ட காலம் போலன்றி பொருளாதார வளர்ச்சியே நாட்டின் அமைதி, மற்றும் செழிப்பிற்கு காரணமாக இருக்க அவர் திட்டமிட்டார். ஒருவேளை அவர் கலியுகத்தை பற்றி அறிந்து, பணமே எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்று நினைத்திருக்கலாம். அதற்கு பொருளாதார வளர்ச்சியே முக்கியம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் அதைவிட முக்கிய இடத்தில் அவர் வைத்த மூன்று அடிப்படை தூண்கள், உலகை பற்றிய அவர் புரிதலை நன்கு விளக்குகின்றன. முதலானது பலமான பாதுகாப்பு திறன், இரண்டாவதாக, மிகவும் முக்கியமாக அவர் எண்ணியது மக்களின் பல பிரிவிடையே நல்லிணக்கம், இறுதியாக நல்ல வலுவான ஆட்சி. இந்த மூன்றுமே கௌடில்யரின் மூன்று முக்கிய கொள்கைகளாகும்.