Translation Credits: Geetha Muralidharan.
தெசலோனிக்கா கட்டளை, ஒரு ரோமானிய அரசரால் போடப்பட்டது, அடிப்படையில் கிரேக்க ஆலயங்களில் செய்யப்பட்ட
பிரார்த்தனைகள் மற்றும் அம்மக்கள் தங்கள் தெய்வங்களுக்கு மிருகங்களை காணிக்கையாக அளித்த பழக்கத்தை முற்றிலும் தடை செய்தது. பொது சகாப்தம் 400 க்கு பிறகு ஒலிம்பிக் விழாக்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன என்று மக்கள் சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று ஒருவரும் சொல்வதில்லை. அன்று கிரேக்க மக்களிடையே இருந்த பழக்கத்தின்படி, ஒலிம்பிக் விளையாட்டுகள், அவர்களின் கடவுள் வழிபாட்டுடன் தொடர்பு கொண்டு இருந்தன. அவை, ஜீயஸ், ஜுபிடர் அல்லது ஹீராவுடன் தொடர்பு கொண்டிருந்தன. எனவே, இப்படி அவர்கள் தங்கள் தெய்வங்களுடன் தொடர்பு கொள்ள பலவித விளையாட்டுகள், குதிரை பந்தயம் போன்ற பலவித செயல் பாடுகளில் தங்களை ஈடுபடுத்தியதால் சர்ச்களிலிருந்து விலகி இருந்தனர். எனவே அந்த அரசர், அப்படி மக்கள் செய்வது மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்று சொல்லி அவற்றை தடை செய்தார்.
நான் இப்போது 1600 லிருந்து 2006 இல் மதுரையில் செயல்படும் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்திற்கு வருகிறேன். இங்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. முனியசாமி தேவர் என்பவர் தொடுத்தார். ஒரு கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் விழாவில் நடக்கும் மேளாவில் ரேக்ளா பந்தயம் நடப்பது வழக்கம். ரேக்ளா பந்தயம் என்பது ஒரு காளை மாட்டை ஒரு மர வண்டியில் பூட்டி அதனை ஓட்டி செல்வதாகும். அந்த ஊர் மக்கள் இப்படி பந்தயம் வைப்பதால் தங்கள் அய்யனார் தெய்வம் மகிழ்ச்சி அடைவார் என்று நம்பினார்கள்.அங்கு இருந்த பல ஜாதி பிரிவினரிடையே, மற்றும் வேறு பல மக்கள் பிரிவினரிடையே பல சண்டைகள் இருந்ததால் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, முனியசாமி தேவர், ரேக்ளா பந்தயத்தை மீண்டும் நடத்த அனுமதி கேட்டு கோர்ட்டை அணுகினார்.
ஜட்ஜ் பானுமதி, இப்போது உச்ச நீதி மன்றத்தில் இருப்பவர், அப்போது மெட்ராஸ் உயர் நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர், ரேக்ளா பந்தயத்தில் காளை மாடுகள் துன்புறுத்தப் படுவதாகவும் அதனால் அந்த போட்டியை அனுமதிக்க முடியாது என்றும் மறுத்தவர், இதனுடன், தானாகவே, சேவல் சண்டை மற்றும் ஜல்லிக்கட்டையும் அந்த தடையில் சேர்த்தார். இந்த இரண்டும் முதலில் விவாதத்திற்குள் வராத போதும் அவர் இந்த விளையாட்டுகள் மிருகங்களை துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு அவற்றிற்கு அனுமதி மறுத்தார். இந்த விஷயத்தை தம் கையில் எடுத்த மற்ற அமைப்புகள், இதை உச்ச நீதி மன்றம் வரை எடுத்து சென்றன.
இதற்கு முன்பு இந்த விழாவை பற்றி எவருக்கும் தெரியாது. இந்த ஜல்லிக்கட்டு விழா இந்திய நாட்டின் தென் பகுதியில் தமிழ் நாடு, கேரளா எல்லையில் இருக்கும் அலங்காநல்லூர் என்ற சிறிய கிராமத்தில் சில ஆயிரம் மக்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.யாரும் இதை பற்றி கவலை பட்டதில்லை. வருடத்தில் ஒரு நாள், சில மணி நேரம் இது நடந்தது. சில இளைஞர்கள் மிகவும் முயன்று அரை நிமிட நேரம் மட்டும் அவற்றின் மீது ஏற முயன்றனர். அவை மிகவும் சக்தி வாய்ந்தவை ஆனதால் அதற்கு மேல் அவற்றின் மீது இருக்க எவராலும் முடியாது. இது நாட்டின்எங்கோ ஒரு மூலையில் நடந்தது. இதைப்பற்றி இந்த நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் எதற்கு இவ்வளவு கவலை பட்டன? இதன் அடிப்படையில் இருப்பது ஆப்ரஹாமிக் மதத்தின் கொள்கையான மற்ற இந்து மதத்தை சார்ந்தவர்களின் பழக்க வழக்கங்களை எதிர்ப்பதே ஆகும். அவர்கள் அவற்றை தங்கள் மத கொள்கைகளுக்கு எதிராக நினைத்தார்கள் என்பதே ஆகும்.