வியாழக்கிழமை, செப்டம்பர் 16, 2021
Home > இஸ்லாமிய ஆக்ரமிப்பு > மலபாரில் நடந்த மாப்பிளா ஹிந்துக்களின் | இனப்படுகொலையில் காந்திஜியின் பங்கு சந்தீப் பாலகிருஷ்ணா

மலபாரில் நடந்த மாப்பிளா ஹிந்துக்களின் | இனப்படுகொலையில் காந்திஜியின் பங்கு சந்தீப் பாலகிருஷ்ணா

Translation Credits: Geetha Muralidharan.

முஹம்மது அலி ஜவஹரும், அவருடைய மூத்த சகோதரர் ஷவுகத் அலி ஜவஹரும், அலி சகோதரர்கள் என்று பிரபலமாக சொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் khilafat இயக்கத்தை திட்டமிட்டு, முன் நின்று நடத்தினார்கள். முஹம்மது அலி ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் இஸ்லாமிய மத கல்வியை படித்தவர். அத்துடன் ஆக்ஸ்போர்ட் சென்று கல்வி கற்று திரும்பியவர். இந்திய பிரிவினைக்கு முக்கிய காரணமான இந்தியன் முஸ்லீம் லீகின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதற்கு முன்பு பரோடா சமஸ்தானத்தில் ஒரு அதிகாரியாக வேலை செய்து வந்தார்.இந்த இரு சகோதரர்களும், அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம். மற்றும் ஜாமியா மிலியா ஆகியவற்றின் செல்வாக்கு பரவ உதவினார்கள். இங்கு படித்தவர்கள் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பார்த்தனர். இப்படித்தான், அவர்கள் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தினார்கள். எனவே, அலி சகோதரர்கள் Khilafat கமிட்டியை அமைத்த போது இஸ்லாமிய மக்களிடையேயும், தலைவர்கள் இடையேயும் அவர்கள் செல்வாக்கு பரவி இருந்தது. ஆனாலும் அவர்கள் 1919 -1921 இடையே இரண்டு ஆண்டுகள் மறுப்பை எதிர்கொண்டார்கள். ஆனால், அவர்கள் முயற்சியில் தளரவில்லை. இந்தியா முழுவதும் எல்லோரிடமும் தங்கள் கமிட்டி பற்றி சொன்ன போதும் அவர்களுக்கு வரவேற்பு இல்லை. ஆனால் அப்போது என்ன நடந்தது?

திடீரென்று, எதிர்பார்க்காத ஒரு இடத்திலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு அவர்களுக்கு கிடைத்தது. இதுவே, Khilafat குழு , Khilafat இயக்கமாக காரணமாயிற்று. ஒரு சாதாரண குழு ஒரு இயக்கமாக மாறியது.

இனி நான் சொல்லப்போவது இணையதளத்தில் உள்ளது. அலி சகோதரர்களை பற்றி காந்தி புகழ்ந்தது ஒரு காதல் காவியம் போல உள்ளது. முஹம்மத் அலியை முதல் முறை சந்தித்த போது காந்தி சொன்னது, ” நான் முஹம்மது அலி, மௌலானா முஹம்மத் அலியை முதல் முறை சந்தித்த போது அது கண்டதும் காதல் போல இருந்தது” என்ன சிரிக்கிறீர்கள்? இது காந்தி எழுதியது. பதிவுசெய்யப்பட்டுள்ளது. காந்தி முஹம்மது அலியை உபயோகித்து ஹிந்து -இஸ்லாமிய ஒற்றுமையை வளர்க்க திட்டமிட்டார், ஆனால் சந்தித்த நாள் முதல், முஹம்மத் அலி, காந்தியை மயக்கிவைத்தார். தன் கொள்கையில் மிக தெளிவாக அவர் இருந்தார். அவர்,இந்திய நாடு முழுதும் தன் மத குருமார்களின் தொடர்பு மூலம், இஸ்லாமிய சமூகத்தை, ஒரு போருக்கு தயாரான நிலையில் வைத்திருந்தார். நாம் இப்போது பிரிக்கப்படாத இந்தியாவைப்பற்றி பேசுகிறோம். பிரிக்கப்பட்ட பாக்கிஸ்தான் இந்தியாவின் 33 சதவிகித நிலப்பரப்பாகும். இந்த விரிந்த பகுதி முழுதும் அலி சகோதரர்கள் ஒரு அசாதாரணமான மக்கள் தொடர்பை பரப்பி வந்தனர்.

லாகூரிலிருந்து, மலபார் வரையிலும், எந்த நேரமும் ஆக்கிரமிப்பிற்கு தயாராக இருக்கும்படி, அவர்கள் மிக தெளிவாக தங்கள் எண்ணத்தை சொல்லி இருந்தனர். இதை குறித்து முஹம்மத் அலியின் எழுத்துக்களை, உரைகளை நீங்கள் படித்தால், அதன் மூலம் அவருடைய தெளிவான திட்டமிடலும், அதை செயல்படுத்த அவர் வைத்திருந்த தெளிவான முறைகளும் புரியும். 1920 கோடை காலத்தில், அலி சகோதரர்கள், நாடு முழுதும், பல மாநாடுகளில், இஸ்லாமிய கூட்டங்களில் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை பேசி, இந்தியா முழுதும் Khilafat ஐ மீண்டும் அமைக்க சொன்னார்கள். அன்று இருந்த மன நிலையை உணர்த்த இரண்டு உதாரணங்கள் தருகிறேன்.

1920 இல் மகாராஷ்டிராவின் மலேகான் பகுதியில், ஒரு Khilafat துணைக்குழு அமைக்கப்பட்டு,அதில் பல தொண்டர்கள் சேர்க்கப்பட்டு அவர்களின் பணி இரண்டாக பிரிக்கப் பட்டது. 1 ஒரு பிரிவு தொடர் பிரசங்கங்களை செய்யவேண்டும். 2 . இரண்டாம் பிரிவு வீடு வீடாக சென்று, Khilafat திற்கு ஆதரவு தேட வேண்டும். இந்த இரண்டாம் பிரிவு ஹிந்துக்களிடமும் சென்றது. காந்தியே எங்களுடன் இருக்கிறார் என்ற அச்சுறுத்தல் இதனால் சொல்லாமல் சொல்லப்பட்டது. இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக செயல்பட்டன.


Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.