ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 19, 2021
Home > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > ஹிந்துமத நபிக்கைகளில் மட்டும் தலையிடும் இந்திய நீதி மன்றங்கள், அதனை அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் | சுரேந்திர நாத்

ஹிந்துமத நபிக்கைகளில் மட்டும் தலையிடும் இந்திய நீதி மன்றங்கள், அதனை அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் | சுரேந்திர நாத்

Translation Credits: Geetha Muralidharan.

இதன் பின் உள்ள சில அம்சங்களாவன, நீதி மன்றங்களில் தொடரப்படும் பொதுநல வழக்குகளால், மிக அதிகமான தலையீடுகள், நீதி துறையால் ஏற்படுகின்றன. வழக்கு தொடரும் நிறுவனங்களுக்கு மேற்படி தலையீடு மற்றும் இறுதியில் வரும் தீர்ப்பில் உள்ள ஆதாயம் இதற்கு காரணம். இந்த வழக்குகள் வெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியால் நடத்தபடுகின்றன. இதை குறித்து நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு விரிவான விளக்கம் தேவையில்லை.

இப்படிப்பட்ட பரந்த அளவிலான பொதுநல வழக்குகள், பரந்த அளவிலான தலையீடுகள், முக்கியமாக ஹிந்துக்களின் வாழ்க்கைமுறை, அவர்களின் மதம் தொடர்பான விழாக்கள் முதலியவற்றில் வர காரணம் எது என்று பார்த்தால், நம் நாட்டின் அரசியலமைப்புதான். அதிலுள்ள அமைப்பு, சில எச்சரிக்கைகளுடன் ஹிந்து மதத்தவர்களை தங்கள் மதக்கொள்கைகளை அனுசரிக்க சொல்கிறது. அவை யாவன என்று நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

ஆர்டிகிள் பத்தொன்பது பேச்சுரிமை, அமைதியாக கூடும் உரிமை, யூனியன் மற்றும் சங்கம் ஏற்படுத்தும் உரிமை, இந்திய நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பிரயாணம் செய்யும் உரிமை, எந்த தொழிலையும் செய்யும் உரிமை, முதலியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. நடைமுறையில் இருக்கும் எந்த சட்டத்தையும் பாதிக்கும் முறையில், அரசு எந்த புதிய சட்டமும் இயற்றாது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை,அயல் நாடுகளுடன் நட்புறவு, பொது இடங்களில் ஒழுங்குமுறை கடைபிடித்தல், ஆகியவற்றை காக்க, நீதிமன்ற அவமதிப்பு, குற்றத்தை செய்ய தூண்டுவதை தடுத்தல் முதலியவை குறித்து சட்டம் இயற்ற தடை இல்லை.

பேச்சுரிமை, அமைதியாக பொது இடத்தில் கூடும் உரிமை என்பது கட்டுப்பாடு, கண்ணியம், நெறியுடன் இருக்கவேண்டும் என்று ஆர்டிகிள் 19 சில விதிகளை கூறுகிறது. யார் வேண்டுமானாலும் எந்த மத கொள்கையையும் பின்பற்றலாம், மற்றும் பொதுவில் பரப்பலாம் என்று சொல்லும் ஆர்டிகிள் 25 , உடனே அதற்கு, பொது கட்டுப்பாடு, நெறிமுறைகள் என்று சில விதிகளை சொல்கிறது. இந்த சட்டத்தின் கிளையான ஆர்டிகிள் 25b பொதுமக்கள் நலனுக்காக,சமூக நலனுக்காக எந்த ஒரு ஹிந்து பொது நிறுவனத்தையும், எல்லா ஹிந்து மக்களுக்குமாக திறந்து வைக்கலாம் என்று சொல்கிறது.

இந்த அடிப்படியில், நாம் நம் மதத்தை குறிப்பிட்ட வரைமுறைக்குள் பின்பற்றலாம் என்று சொல்கிறது. அவற்றில் ஒன்று, பொது இடங்களின் ஒழுங்கு, ஆரோக்கியம் மற்றும் அறநெறியை மீறக்கூடாது, மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடக்கூடாது, ஹிந்து மத நிறுவனங்களில் மட்டுமே சமூக நலம், சீர்திருத்தம் செய்ய வழி செய்ய வேண்டும் என்று உள்ளது. இந்த சமூகநலம், மற்றும் சீர் திருத்தம் ஹிந்து மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே இருக்கும் காரணம், அரசியலமைப்பு சட்டசபை கூட்டப்பட்டபோது, மக்களுக்கு சில பாதுகாப்புகள் தேவையாக இருந்தன. அன்று பொது இடங்களான கோவில்களில், சில பிரிவு மக்களுக்கு அனுமதி மறுப்பு இருந்தது. கோவில்கள் பொது இடமாக இருந்தாலும், நான் அனுமதியை கட்டுப்படுத்தலாம் என்று இருந்தது. நான் ஒரு பணக்காரனாக இருந்தால், என் வீடு மிகப்பெரியதாக இருந்தால், அதற்குள் நான் ஒரு கோவிலை கட்டி அங்கே வர பிறருக்கு அனுமதி மறுக்கலாம். சிறிய கால்ச்சட்டை போட்டவர்கள் அங்கே வரக்கூடாது என்று சொல்லலாம் என்ற உரிமை உள்ளது. நான் மிக மோசமானவனாக இருந்தால், குறிப்பிட்ட சாதி மக்கள் வருவதை தடுக்கலாம். இதனால் நான் மட்டுமே பின்தங்கிவனாக ஆவேன், ஆனால், என் நடவடிக்கை சட்ட விரோதமாகாது. எந்த மதமானாலும், அதன் எந்த பிரிவும் தங்கள் கொள்கை படி நடக்க உரிமை உண்டு.


Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.