Translation Credits: Geetha Muralidharan.
அது 1918 ம் ஆண்டு. மிக கோரமான முதலாம் உலகப்போர் முடிவடைந்து, முத்ரோஸ் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை 30 -10 -1918 அன்று கையொப்பம் ஆனது. முத்ரோஸ் இன்று கிரேக்க நாட்டில் இருக்கும் ஒரு சிறிய நகரமானாலும், பல நூற்றாண்டுகளாக அந்த இடம், சுற்றி இருந்த நாடுகளுக்கு ஒரு ராணுவ தளமாக இருந்தது. அங்கு போடப்பட்ட இந்த போர் நிறுத்த ஒப்பந்தம், கூட்டணி படைகளுக்கும் அன்று இருந்த துருக்க ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே இருந்த பகைமையை நிறுத்த செய்யப்பட்டதாகும். இதன் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று ஓட்டோமான் பேரரசை பிரிப்பதாகும். உண்மையான இந்த பிரிவினை ஒப்பந்தம் 1920 ம் ஆண்டு செவேர்ஸ் என்ற பிரான்ஸ் நாடு நகரத்தில் இருந்த ஓர் பீங்கான் பொருட்கள் செய்யும் தொழிற்சாலையில் கையெழுத்திடப்பட்டது செவேர்ஸ் ஒப்பந்தம் எனப்பட்டது. இதன் காரணமாக, சிரியா, லெபனான்,ஏமன் போன்ற நாடுகளும், மற்றும் பல சிறிய நாடுகளும் அங்கே தோன்றின. எனவே, இந்த உடன்படிக்கை மூலம் நானூறு ஆண்டுகளாக இருந்த ஒட்டோமான் கலீபா சிதைந்து விழுந்தது.அந்த நேரத்தில் அங்கே ஆட்சி செய்த சுல்தான் ஆறாம் முஹம்மது என்று அழைக்கப்பட்டார்.
அவருக்கு அவருடைய பட்டமும், பதவியும் மட்டுமே இருந்தது. மற்ற எந்த அதிகாரமும் இல்லை. இந்த நேரத்தில் மற்றொன்று நடந்தது. அந்நாட்டு மக்கள் தங்கள் நாடு இப்படி அவமானத்திற்கு ஆளானதற்கு இந்த சுல்த்தானே காரணம் என்று எண்ணினார்கள். அவர்கள் தங்கள் கோபத்தை முஸ்தபா கெமால் பாஷா என்பவர் தலைமையில் சுல்த்தான் மீது காட்டினார்கள். சுல்த்தான், பயந்துபோய் , அப்துல் மஜீத் என்ற தன் சகோதரரை, அந்த கலீபாவின் அடுத்த சுல்தானாக, இரவோடு இரவாக அறிவித்தார். இது மக்களின் கோபத்தை தணிக்க அவர் மேற்கொண்ட ஒரு செயலாகும். ஆனால், இதற்குள் அங்கே நிலைமை மோசமாகி, எகிப்து மற்றும் அரேபிய நாடுகள் இவர் தலைமையை நிராகரித்து விட்டன. நம் கதை இங்கு தொடங்குகிறது.ஒட்டோமான் கலீபா இப்படி ஒழிக்கப்பட்ட செயல் சிறிதும் எதிர்பார்க்காத இடத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது ஆங்கிலேயரின் கீழ் இருந்த இந்தியாவில் அது நடந்தது.
மிக செல்வாக்குடன் இருந்த ஒரு பிரிவு இந்திய முஸ்லிம்களிடையே இது ஒரு பயத்தை ஏற்படுத்தியது. அவர்கள், பூமி பிளந்து தங்களை விழுங்கிவிடும் போல எண்ணினார்கள். இங்குதான் நாம் சரித்திரத்தை முழுதாக காணவேண்டும். அங்கும் இங்கும் சிறு சிறு துண்டுகளாக பார்க்க கூடாது. சரித்திரத்தை பற்றியும் நம் புரிதல் முழுதாக இருந்தால் மட்டுமே சென்ற கால நடப்புகள், நிகழ்காலத்தவை மற்றும் எதிர்காலத்தில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் நமக்கு விளங்கும். இந்த சரித்திர நிகழ்ச்சி ஒரு முக்கியமான உண்மையை நமக்கு சொல்கிறது. அது இந்திய முஸ்லிம்களுக்கு ஓட்டோமான் அரசு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதே ஆகும். அது எதனால் என்று நாம் கேட்டால், அது இந்தியாவின் மீது முதலில் சிந்து ராஜ்யத்தின் மீது படை தாக்குதல் செய்த முஹம்மத் பின் காசிம் என்பவனுடன் தொடங்கி, அதன் பின் அலை அலையாக அவுரங்கசிப் வரை இங்கு வந்த பல இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கள், இங்கு ஏற்படுத்திய அரசுகள் ஆகும். திப்புசுல்த்தானும் இதில் அடக்கமாவான். ஒருவன் விடாமல், எல்லா முஸ்லீம் படையெடுப்பாளர்களும் சுல்தானிற்கு தங்கள் விஸ்வாசத்தை சத்தியம் செய்தார்கள்.
முதல் படையெடுப்பாளர்களுக்கு இந்த சுல்த்தான் பண உதவி செய்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் அரசை ஹிந்துஸ்தானத்தில் அமைக்க போகிறோம் என்றார்கள். ஆறு நூற்றாண்டுகள் அவர்கள் ஒட்டோமான் கலீபா வுக்கு விசுவாசமாக இருந்தார்கள். ஆண்டு தோறும் காணிக்கையாக அவர்கள், கலீபாவிற்கு தங்கம், நகைகள், குதிரைகள், பெண்கள் மற்றும் அடிமைகளை அனுப்பி வைத்தனர். அன்று மத்திய கிழக்கில் மிக வளமான அடிமை வியாபாரம் நடை பெற்றது. சில இந்திய சுல்த்தான்கள் கலீபா பெயரில் நாணயங்களும் அச்சிட்டார்கள். உலக இஸ்லாமிய சமூகத்தில் கலீபா ஒரு முக்கிய பங்கை வகித்தார். அவரை அவர்கள் தங்கள் மதத்தின் காவலராக எண்ணினார்கள். இதுதான் கலீபாவிற்கு இருந்த முக்கிய பங்காகும். எனவே, கலீபா என்ற சொல் ஓட்டோமானின் அரசர் என்பதை மட்டுமல்லாமல், அவர் முஸ்லீம் இனத்தின் காவலர் என்று பொருள்படும்படி இருந்தது. எனவே அவருடைய அதிகாரம் உலகம் முழுதும் பறந்து இருந்தது. ஆனால், அந்த கலீபா உடைந்தது, அவுரங்கசிப் இறந்தது என இப்படி நடந்தது, இந்தியாவில் அன்று இருந்த முஸ்லிம்கள்இடையே,இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற செய்த எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கியது.
இன்றும் கூட இந்திய மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம்கள் வருத்தப்படும் ஒரு நிகழ்ச்சி அவுரங்கசிப்பின் மரணமாகும் என்பது உண்மையான ஒன்றாகும். பிரிட்டிஷ்காரர்கள் தங்களுக்கு இவர்களின் விஸ்வாசத்தை உறுதி செய்ய அவர்களிடம், ”நீங்கள்தான் உண்மையான ஆட்சியாளர்கள், நாங்கள் உங்களை காப்பதற்காக இருக்கிறோம்” என்று சொல்லி வந்தனர். நாங்கள் இல்லாவிட்டால்,காட்டுமிராண்டி ஹிந்துக்கள் உங்களை நாட்டை விட்டு விரட்டி விடுவார்கள் என்று அவர்களை தங்கள் கீழ் வைத்திருந்தனர். முத்ரோஸ் உடன்படிக்கை, ஒட்டோமான் அரசை அழித்ததும் இந்திய முஸ்லிம்களிடம் மிகுந்த பதற்றம் மற்றும் கோபத்தை உண்டாக்கியது. அதனால் அவர்கள் என்ன செய்தனர்?
அவர்கள் என்ன செய்தார்கள் என்பது முஹம்மத் அலி ஜோஹர் என்பவருடன் ஆரம்பம் ஆகியது. அவர் இந்திய முஸ்லிம்கள் அடங்கிய ஒரு தூது குழுவுடன் லண்டன் சென்றார். பிரிட்டிஷ் காரர்களிடம் ஒட்டோமான் அரசை மீண்டும் உருவாக்கும்படி அதிகாரமாக கோரினார். அவர்கள் சிரித்துக்கொண்டே இவருடைய வேண்டுகோளை குப்பையில் எறிந்தனர். இந்த மறுப்பால் மிகவும் ஆத்திரம் அடைந்த முஹம்மது அலி ஜோஹார் கிலாபத் கமிட்டியை ஏற்படுத்தினார்.
அவர்கள் கோரிக்கை வெளிப்படையாக இருந்தது. அது மீண்டும் ஒட்டோமான் அரசை உண்டாக்கும் வரை பிரிட்டிஷ் அரசை எதிர்ப்பதும், அரசை புறக்கணிப்பதும் ஆகும். எனவே இதிலிருந்து தெரிவது, கிலாபத் கமிட்டியை பொறுத்தவரை அவர்களுக்கு தேசப்பற்றோ, தேசியமோ, இந்தியவைப்பற்றிய ஒன்றும் முதலில் இருந்தே இல்லை என்பதே. இஸ்லாமியத்திற்காக எதையும், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே அவர்கள் முக்கிய குறிக்கோளாக இருந்தது. எதுவும் எல்லை மீறிய செயல் அல்ல என்று அவர்கள் எண்ணினார்கள். இதுவே பின்பு கிலாபத் இயக்கமாக மாறியது.