செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2021
Home > பேச்சு துணுக்குகள் > கேரளத்தில் மாப்பிளை இஸ்லாமியரின் தோற்றம்.

கேரளத்தில் மாப்பிளை இஸ்லாமியரின் தோற்றம்.

என்பவர்கள் யார்? இந்த சொல் மாப்பிள்ளை என்ற மலையாள சொல்லின் ஆங்கில திரிபு ஆகும். அதன் சரியான பொருள் மாப்பிள்ளை [ son in law ] என்பதாகும். இவர்களின் தோற்றத்தை பொது சகாப்தம் 8 – 9 இல் அரேபியருடன் கேரள மலபார் கடற்கரை மூலம் கேரள மக்கள் செய்துவந்த வாணிபத்தால் ஏற்பட்டது என்று கொள்ளலாம். இந்த காரணத்தால், சில ஹிந்துக்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டிருக்கலாம், மேலும் இங்கேயே தங்கிவிட்ட அரேபியர்கள் ஹிந்துக்களை திருமணம் செய்திருக்க வேண்டும். இப்படித்தான் அவர்கள் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டனர்.

18 – 19 ம் நூற்றாண்டில், போர்த்துகீசியர்கள் அங்கே வந்து அரேபியர்களின் வியாபார சந்தையை பிடித்துக்கொண்டனர். இதனால், இவர்கள் கேரளத்தின் வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்தனர். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மலபார் பகுதியில் தான் இருந்தனர். அவர்களின் வியாபாரம் சிதைந்து அவர்களின் பொருளாதாரமும் குன்றி விட்டதால்,வேறு வேலைகள் தேட தொடங்கினார்கள். சிலர் ஹிந்து ஜமீன்தார்களிடம் வேலை செய்தனர். சிலர் பணத்திற்கு கூலிப்படைகளாக மாறி விட்டனர். வயல்களில் வேலை செய்தனர்.

திப்பு சுல்தான் மலபாருக்கு படை எடுத்து வந்தபோது, அந்த பகுதியை முழுதுமாக தீக்கிரையாக்கினான். சிலமாப்பிளை இஸ்லாமியர்களை சிறைப்படுத்தி தன்னுடன் இழுத்து சென்று நூறு சதவிகிதம் ஹிந்துக்கள் இருந்த கூர்க் பகுதியில் குடி வைத்தான். அங்கு இருந்த ஹிந்து மக்கள் தொகையில் மாற்றம் செய்ய அவர்களை கட்டாயமாக அங்கே குடிவைத்தான். இன்றும் நாம் அங்கே கொடவா மாப்பிள்ளைகள் என்ற தனி பிரிவை காணலாம். அவர்கள் கூர்க் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
கன்னடத்தில் மாப்பிள்ளை என்ற சொல்லே இல்லை. இருந்தாலும் இவர்கள் இப்படி அழைக்கப்படுகின்றனர். இது திப்பு சுல்தான் காலத்தில் நடந்தது.


Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.