ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 24, 2021
Home > இந்திய அரசியலமைப்பு > ஒரு மதத்தின் இன்றியமையாத பழக்கவழக்கம் என்னும்கோட்பாடு என்பது என்ன? | சுரேந்திரநாத்

ஒரு மதத்தின் இன்றியமையாத பழக்கவழக்கம் என்னும்கோட்பாடு என்பது என்ன? | சுரேந்திரநாத்

Translation Credits: Geetha Muralidharan.

இன்றியமையாத மத  பழக்கம் என்ற கோட்பாட்டை பற்றி  நான் இப்போது  சொல்கிறேன். நான் ஏதாவது ஒன்றை மதத்தில் உள்ள நடைமுறை, அதனை நான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால்,அது இந்த இன்றியமையாத சோதனையில் வென்று  இருக்கவேண்டும். இந்த இன்றியமையாத சோதனை என்பது என்ன? இந்த சோதனை பல முக்கிய  நீதி வழங்கலுக்கு பின்னால் நிர்ணயிக்கப்பட்டது.முதல் வழக்கு 1954 ம்வருட  ஷிரூர்  மட வழக்காகும். இந்த கோட்பாடு தொடர்பில்லாத வேறு பல வழக்குகள் மூலம் பெரும்பான்மையான பழக்கங்கள் முடிவு செய்யப்பட்டன.

உடுப்பி கோவிலை  சுழற்சி முறையில் நிர்வாகம் செய்யும் எட்டு மடங்களில் ஒன்று ஷிரூர் மடமாகும். அதற்கு பர்யாய முறை என்று பெயர்.  அதன்படி அந்த மடத்தின் தலைவர் மூல மூர்த்திக்கு முதல் பூஜைகள் செய்வார். காலவரையறைப்படி இது நடக்கும். ஷிரூர் மடத்தின் முறை வந்தபோது அதன் தலைவர் லக்ஷ்மீந்திர  தீர்த்த சுவாமி என்பவராவார். அவர் அந்த நேரத்தில் மைனராக இருந்தார். அவர் சார்பாக மற்றவர்கள் மதத்தின் வேலைகளை செய்து வந்தனர். அவர் அந்த நிலை கடந்ததும் மடத்தின் செயல்களை தானே ஏற்றுக்கொண்டார். அப்போது மடம் பொருளாதார சிக்கலில் இருந்தது. அவர்கள் வெளியில் கடன் வாங்கி மடத்தை நடத்தினார்கள். அப்போது மடம் மதராஸ் ப்ரெசிடென்சி யில் இருந்தது.

மதராஸ் ப்ரெசிடென்சியில் ஹிந்து மத அறக்கட்டளை சட்டம் இருந்தது. இதன் கீழ் வெளியில் இருந்து ஒருவர் மடத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டார். பின்பு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் வேறு ஒருவரின் proxy ஆவார். இப்படி செய்து அரசாங்கம் மடத்தின் தலைவரை பெயருக்கு தலைவராக வைத்துவிட்டு, தாங்களே மடத்தை எடுத்துக்கொள்ள எண்ணினார்கள். இதனால் அவர்களுக்குள் போராட்டம் ஏற்பட்டது.  மதத்தலைவர், HRC அலுவலரை வெளியேற்றினார். அப்போது சுவாமி கோவிலில் செய்யும் வழிமுறைகள் மதத்தின் முக்கியமான பழக்கமா? அது மத சுதந்திரமா என்ற கேள்வி எழுந்தது.

அப்போது செய்யப்பட முடிவுகளில் முக்கியமானது, ஒரு மதத்தின் முக்கிய கோட்பாடு என்பது அந்த மதத்தின் இன்றியமையாத கோட்பாடுகளை பொறுத்தே அமையும் என்பதாகும். ஹிந்து மதத்தின் ஒரு பிரிவின் கொள்கை அவர்கள் கடவுளுக்கு குறிப்பிட்ட நேரத்தில்  உணவு படைக்கவேண்டும், மற்றும் சில குறிப்பிட்ட விழாக்களை ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் நடத்த வேண்டும்,  அல்லது தினமும் சில புனிதமான நூல்களை படிக்கவேண்டும், சில ஹோமங்களை செய்யவேண்டும் என்று இருந்தால்,  இவை அனைத்தும் அந்த மதக்கோட்பாட்டின் ஒரு பகுதியே ஆகும். இவற்றிற்கு பயன் படும் பொருட்கள், மற்றும் அவற்றை செய்யும் மத குருக்கள், வேலையாட்கள்,  போன்றவற்றால் அவை பொருளாதார, வணிகரீதியான  மதச்சார்பற்ற செயல்  ஆகாது. அவை அனைத்தும் article 26 [b ], 25 2 [a ] வின் படி மதம் சார்ந்தவை என்றே கருதப்படவேண்டும்..

இதன்மூலம் தெரிவது ஒரு பழக்கம் அடிப்படையில் முக்கியமாகவும் மதம் சார்ந்தும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அதை தடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை. சில மத சடங்குகள் மக்களுக்கு தீங்கு செய்பவை. உதாரணமாக  Made ஸ்னான என்ற சடங்கில் சாப்பிட்ட இலைகளின் மீது புரளுவார்கள். உடலில் இரும்பு கொக்கிகளை மாட்டிக்கொண்டு தொங்கும் வழக்கமும் உண்டு. இவை செய்பவர்களுக்கு துன்பம் விளைவிப்பவை. இருந்தாலும் இவை எல்லை மீறாதவரை தடுக்கப்பட முடியாது. மனித உயிர்களை தியாகம் செய்யாதவரை இவற்றில் தலையிட முடியாது.  சிறுவர்களை மண்ணில் புதைத்து சிறிது நேரம் கழித்து உயிருடன் வெளியே எடுத்ததாக நான் பேப்பரில் படித்தேன். நம்ப முடியவில்லை.

முஹர்ரம் இஸ்லாமியருக்கு ஒரு முக்கியமான பழக்கமாகும். அதில் அரசாங்கம் தலையிடுவதில்லை. ஹூக்குகளில் மாட்டி தொங்குவது முஹர்ரம் போன்றது. ஒருவன் தன்னை தானே அழித்துக்கொள்ளாதவரை, அவர் செய்வதில் அரசாங்கம் தலை இடாது. மனித உயிர்களை தியாகம் செய்வது போன்றவை கொலையாகும், எனவே அங்கே அரசாங்கம் வரும். ஷிரூர் மடம் வழக்கில் அதிகமான முன்னோடிகள் இல்லை. காமன் வெல்த் நாடுகளில் இருந்த நீதி முறைகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் நீதியின் சார்பாக இந்த வழக்கில் நீதி வழங்கப்பட்டது.


Leave a Reply

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.

Powered by
%d bloggers like this: