Home > இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல்

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

https://youtu.be/6a5moK26JAw?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும். இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்

Read More

வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

  https://www.youtube.com/watch?v=X84seX-D-CE?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம்

Read More

1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை

https://www.youtube.com/watch?v=obVouUw1KIs தனது லண்டன் வருகையின் பொழுது தரம்பால் அவர்கள் அறிய ஆவணப் பொருட்களான 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செய்யப்பட்டஆய்வுகளை காண நேர்ந்தார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் திகைப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.அவர்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. பீகார் மற்றும் வங்காளத்தில் மட்டுமே 1,00,000 பாடசாலைகள்

Read More

கீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது

https://www.youtube.com/watch?v=I9B7Vfq16W4?cc_lang_pref=ta&cc_load_policy=1   சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில் அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல் அரிது, என்ற நிலை. எனவே மதுரைக்கு வந்து சேரும் வியாபாரப் பொருள்கள் வரும் பெருவழிச்சாலைகள் எங்குள்ளன, மதுரையிலிருந்து ஒருநாள் பயணத்தில் சென்றடையக்கூடிய தொலைவில்

Read More