Home > பேச்சு துணுக்குகள் (Page 7)

தொல்பொருள்துறை ஆய்வின் சான்றுகள் ராம் ஜன்மபூமி பாபர்மசூதியைப் பற்றி தெரிவிப்பது என்ன?

  https://www.youtube.com/watch?v=kJvAm3CxtjM இவற்றில் எதுவும் இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. எனவே கடைசியில் 2003ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ASI யிடம் பாபர்மசூதி இடத்தைத்தோண்டி அதன்கீழே ஒருகோயில் உள்ளதா என பார்க்கக் கோரியது. உயர்நீதி மன்றம் ASI க்கு சில கண்டிப்பான செயல்முறை விதிகள் வகுத்தது. அந்த வளாகத்தில் ஒவ்வொரு நாளும் பாபர்மசூதி செயல்குழுவின் பிரதிநிதி ஒருவரும், ராம் ஜன்மபூமி குழு நபர் ஒருவரும் இருத்ல் அவசியம். என்னவெல்லாம் தோண்டுதலில் கிடைக்கிறதோ, அவற்றை ஒரு

Read More

ராமாயணத்தைப்பற்றி சில சிறந்த பிரமுகர்களின் அபிப்ராயங்கள்

https://www.youtube.com/watch?v=KN7x5VidkIs இந்திய நாகரிகத்தில் ராமாயணத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி தொன்றுதொட்டே மத தலைவர்களும், பொது சிந்தனையாளர்களும் பெருமைபடுத்திப் பேசியுள்ளார்கள். ராமாயணம் என்பது என்ன? அது ஒரு அறநெறிகளின் கையேடு, அது மக்களுக்கு நன்னடத்தை, நற்பண்புகள் என்பன புகட்டும் ஒரு தேசிய கோட்பாடு. ராமன் ஓர் உதாரண புருஷன், தர்மமே வடிவானவன். ராமாயணம் தரும் உபதேசம் ஒரு தெய்வீக புருஷன் மானிட உறவுகளைக் கையாளுவதைப்பற்றி. 1899ம் ஆண்டு    RC Dutt ஆர்.சி. தத், இந்தய தேசிய

Read More

பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்

https://www.youtube.com/watch?v=Z685tCBXc38&t=1s நாம் சுதந்திரம் அடைந்த சிறிது காலத்தில் இது நடந்தது. பலருக்கும் தெரியாமலிருக்கலாம். இந்துமக்கள் சமுதாயம் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட கோரிக்கை விடுத்தது. உத்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உ.பி. அரசாங்கம் அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. சமூகத்தின் மனோபாவம் கோயில் கட்டவேண்டும் என்றே உள்ளது. ஆனால் 1949ம்ஆண்டு டிசம்பர் 23ந்தேதியன்று பாலகன் ராமன் உருவச்சிலை ஒன்று பாபர்மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது.

Read More

அயோத்தியைப்பற்றி ஐரோப்பிய பயணிகளின் கருத்து

https://www.youtube.com/watch?v=kr_ZFjAgaQQ இரண்டு ஐரோப்பிய கணிப்புகள் உள்ளன. முதலாவதாக வில்லியம் பிஞ்ச் என்ற நபர் அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட 85 ஆண்டுகளுக்குள் வந்திருந்தார். அவர் கூறுவதாவது.. இந்துக்கள் இங்கு வந்து ஸரயு நதியில் நீராடிச் செல்கின்றனர். அந்தணர்கள் வந்து இங்குவரும் யாத்ரிகர்களின் பெயர் முதலிய விவரங்களைச் சேகரித்துவருகின்றனர். வில்லியம் பிஞ்ச் முஸ்லிம்கள் இருந்ததைப் பற்றியோ நமாஸ்தொழுகையைப்பற்றியோ ஒன்றும் கூறவில்லை. இந்துக்களைப்பற்றி மட்டுமே சொல்கிறார். இரண்டாவதாக, ஒரு ஜேஸுவிட் பாதிரி ஜோஸப் டிப்பின் தேலா

Read More

அலகாபாத் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அயோத்தியா வழக்கில்

  https://www.youtube.com/watch?v=jJRwZJiD-c4?cc_lang_pref=ta&cc_load_policy=1 இது ஒரு சுவாரசியமான விஷயம். ஜன்மஸ்தான் மஹந்த்களுக்கும் பாபர்மசூதி கண்காளிப்பாளருக்கும் இடையே நடந்த மோதலின்,போட்டியின் நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டத்திலும், பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது எல்லா ஆவணங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டன. இதில் முதல் ஆவணம் 1858ம்ஆண்டு நவம்பர் 28ந் தேதியிட்ட அறிக்கை. இது அவாத் தாணேதார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை FIR. அவர் கூறுகிறார்..25 சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர், பாபர்மசூதியுள்

Read More

எவ்வாறு ஆங்கிலேய வருவாய்த்துறை அறிக்கைகள் அயோத்திவழக்கில் ஆதரவு தருகின்றன

https://www.youtube.com/watch?v=3O7425kFKFg&t=15s ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய்த்துறை அறக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு இடத்திலிருந்தும் எவ்வளவு வருவாய் வசூல் என்றும் யார் கொடுக்கவேண்டும் என்றும் இவ்வாற் திட்டவட்டமாக அறிக்கைகள் தொகுக்கப்பட்டு வந்தன. பாபர்மசூதியைப் பொருத்தவரை 1861ம் ஆண்டு முதன்முறையாக தீர்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலைமையைப்பொருத்து திருத்தப்படும். ஆனால் 1861ம் ஆண்டிலிருந்து ராமர்கோட் கிராம வருவாய் அறிக்கையில் பாபர்மசூதியைப்பற்றிய குறிப்பீடே இல்லை. அந்த நிலம் அரசாங்க நிலம்

Read More

விஷ்ணுஹரி கல்வெட்டும் உண்மையை ஒடுக்க இடதுசாரி வரலாற்றுவல்லுனர்களின் முயற்சிகளும்

  https://www.youtube.com/watch?v=E8Zy44ARn6c 1992ம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அப்போது மசூதியின் சுவர்களிலிருந்து ஒரு பகுதி 5 அடிக்கு 2 அடி கீழே விழுந்தது. அதிலிருந்த கல்வெட்டு 'விஷ்ணுஹரி கல்வெட்டு' என அழைக்கப்படுகிறது. அது கோயிலின் வரலாற்றைத் தெரிவிக்கிறது. அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வியல் கல்வெட்டியல் இலாகாவை, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து எழுத்தை அர்த்தப்படுத்துமாறு பணித்தது. எனவே இந்திய  தொல்பொருள் ஆய்வியல் தலைமை கல்வெட்டியல் நிபுணர் திரு.k.v. ரமேஷ் அந்த கல்வெடடில் உள்ளபடியே

Read More

ராமர்கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயங்கள்

https://www.youtube.com/watch?v=QP3UJLN3_JA&t=9s அயோத்தியில் ராமர் கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயம் என்ன உள்ளது ? 18ம் 19ம் நூற்றாண்டுகளில் பல்வேறு சரித்திரங்கள் அரபுமொழியிலும், பெர்ஷியமொழியிலும், உருதுமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில்கூட பாபர்மசூதி காலி இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறவில்லை. பெர்ஷியன்,உருது,அராபிய சரித்திரங்கள் 18ம் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டயாவும் சொல்வது என்னவென்றால், பாபர் ராமர்கோயிலை அழிக்க உத்தரவிட்டதாகவும், அதன்பின்,அந்த இடத்தில் மசூதி ஒன்றைக்கட்ட உத்தரவிட்டதாகவும் தெளிவாகக் காணப்படுகிறது.இதற்குமாறாக ஒரு புத்தகத்திலுமில்லை.நான் குறிப்பிடுவது பல அறிஞர்கள் ஆய்ந்த அராபிய,பெர்ஷிய,உருது மொழி

Read More

அயோத்தியில் முதலாவது ஆயுதமோதல்

  https://www.youtube.com/watch?v=AlD4-P0-UTE அயோத்தி சர்ச்சைக்கு வருவோம். அயோத்தியைப்பொருத்தவரை 1822ம்ஆண்டு முதல் இந்த சர்ச்சையைப்பற்றி மாவட்ட நீதிமன்றங்களில் காணப்படுகின்றன. முதலாவது ஆதாரம் கிடைப்பது ஹபீஸுல்லா என்ற நீதிமன்ற அதிகாரி சமர்ப்பித்த ஓர் குறிப்பு. அவர் பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த குறிப்பி்ல், ராமர்கோயிலைத் தகர்த்துவிட்டு சீதாவின் சமையலறைக்குஅருகே பாப்ரி மசூதி கட்டப்பட்டதாகத்  தெரிவிக்கிறார். அந்த குறிப்பு ராமர்  கோயில் சீதாவின் சமையலறை  இரண்டையும் குறிப்பிடுகிறது. பைஜாபாத் மாவட்டநீதிமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பபட்டதாகத்  தெரிகிறது. 1855ம் ஆண்டு ஒரு

Read More

அயோத்தியில் நிஹாங் சீக்கியர்கள் (அகாலியர்)

https://www.youtube.com/watch?v=S1VmU2JaZyE 1858ஆம்ஆண்டுநவம்பர்28ஆம் நாள் என்ற தேதியிட்ட அறிவிப்பு இதோ அவாத் (அயோத்தி) தாணேதார் (போலீஸ் அதிகாரி) வெளியிட்ட ஒன்று. இந்த முதல் தகவல் அறிக்கை(FIR)ல் அவர்   கூறுகிறார்.. 25சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர்கள் (அகாலிகள்) பாப்ரிமசூதியில் நுழைந்து பூஜை, ஹோமம் முதலியவற்றை அங்கே செய்யத்தொடங்கியுள்ளனர். இரண்டு நாட்கள்பின் அதாவது 30ம்தேதிநவம்பர் 1858ம் ஆண்டு பாப்ரிமசூதியின் மேலாளர் ஒரு புகார்மனு தாக்கல் செய்கிறார். அதே புகார் மனுவில் அவர் சொல்கிறார்... 25சீக்கியர்கள் பாப்ரிமசூதிக்குள் நுழைந்து

Read More