Home > வரலாறு > மங்கலான வரலாற்றுக்காலம்

தொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன?

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின்  ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் "அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு" என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி -

Read More

1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை

https://www.youtube.com/watch?v=obVouUw1KIs தனது லண்டன் வருகையின் பொழுது தரம்பால் அவர்கள் அறிய ஆவணப் பொருட்களான 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செய்யப்பட்டஆய்வுகளை காண நேர்ந்தார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் திகைப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.அவர்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. பீகார் மற்றும் வங்காளத்தில் மட்டுமே 1,00,000 பாடசாலைகள்

Read More

அறிவு பரிமாற்றம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு

https://www.youtube.com/watch?v=8OCO41T_lHM?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்பொழுது இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு ஏற்ப்பட்ட அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறேன். ஏராளமான ஸம்ஸ்க்ருத ஒலைச்சுவடிகள் இந்தியாவிலிருந்து சீன அறிஞர்கள் மூலமாகவோ அல்லது சீன அரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிஞர்களாலோ எடுத்துச் செல்லப்பட்டது. அதனால், நாம் முன்பு ஹுவான்-ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் பற்றி பேசினோம், அவர்கள் ஏல்லோரும் சீன அறிஞர்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். ஆனால், உண்மையில் இந்தியாவிலிருந்தும் ஏராளமான அறிஞர்கள், ஸமஸ்க்ருத பண்டிதர்கள் சீனாவிற்குச் சென்று அங்கேயே பல ஆண்டுகள்

Read More

நாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி

https://www.youtube.com/watch?v=x_DdHPQqPpY?cc_lang_pref=ta&cc_load_policy=1 நானும் இந்த இடத்திற்குச் சென்று இருக்கிறேன்,  இது எப்படி இருந்தது என்று அறிந்து கொள்வதற்கு ஓரே வழி ஹுவான் ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் எழுதிய வரலாறுகளைப் படிப்பதுதான். அதனால் ஹுவான் ஸுவாங் என்ன கூறுகிறார் என்றால் இது அவர் பார்த்ததிலேயே மிக அழகான பல்கலைக்கழகம். இதன் கட்டிடத்தைச் சுற்றி மிக உயர்ந்த கதவுகள் இருந்தன். நாம் உள்ளே நுழையும்போது அப்பகுதி முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறைந்திருந்தன, குளங்களில் தாமரை மலர்ந்திருந்தது

Read More

அயோத்தி தோண்டலில் தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை நம் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்கள் தவிர்க்கக் கையாண்ட முறை

https://www.youtube.com/watch?v=Zn0_RCv8uYw?cc_lang_pref=ta&cc_load_policy=1 2002ஆம் ஆண்டில்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குறிய இடத்தைத் தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. இது முதல் தோண்டுதல் அல்ல, இதற்கு முன் ஒருபகுதி தோண்டப்பட்டது. 1970ம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் BB லால் மூலமுதலான கோயிலின் அடித்தளங்களையும், அவற்றின் கூறுகளையும் கண்டுபிடித்திருந்தார். எனவே மீண்டும் தோண்டும்போது என்ன தென்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆயினும் இம்முறை மிகவும் முழுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி தோண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. நிச்சியமாக எதிர்பார்த்தபடி கோயிலின் அடித்தளங்கள்

Read More

இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

https://www.youtube.com/watch?time_continue=165&v=RJtIDrHTYHU?cc_lang_pref=ta&cc_load_policy=1   மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “The Periplus of the ErethraeanSea” என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர்? இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்

Read More

அச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்

  https://www.youtube.com/watch?v=X-NTUf7d0oM?cc_lang_pref=ta&cc_load_policy=1 தேவகிரிக்கோட்டைப்போர் எவ்வாறு நேர்ந்தது, தோல்வியுற்றது என்று கூறினேன். சிவாஜி பல்வேறு கோணத்தில் கோட்டைகளின் கட்டமைப்பை மாற்றினார். வெவ்வேறு நுழைவாயில்களும், வெளியே செல்வதற்கான வாயில்களும் உண்டாக்கப்பட்டன மகாராஷ்டிர மாநிலத்தில். இப்போது கோட்டைகள் விஷயத்திற்கு வருவோம். உதாரணமாக ஜூன்ஜார்மச்சியில் டோர்னாகோட்டையில், ஒருநுழைவாயில் இங்கிருந்தால், மற்றொன்று எதிர்புறம் புத்லாமச்சியில் காணலாம். பிறகு கோட்டை கட்டமைப்பிலும்சில மாறுதல் செய்யப்பட்டது. ராஜ்காட் கோட்டையில் இரட்டைச்சுவர்கள் நிறுவப்பட்டன. தேவையான தானியங்கள் சேமிக்கப்பட்டதுடன், கூடுதல் தானியவகைகள் பயிரிடவும் வழிவகை செய்து ஏராளமான

Read More

ஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்

  https://www.youtube.com/watch?v=otbQzK3VSnQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஔரங்கசீப் தனது 85ம் வயதில் ஒரு கடைசி போர்ப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து 1700ம் ஆண்டில் மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முழுவதுமாக எல்லா கோட்டைளையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை நிலைநாட்ட மேற்கொண்டான். அது ஒரு எளிதான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில் மராட்டியர்களிடமிருந்து ஒருதகவலும் இல்லை. 25 வயதான ஒரு பெண்மணி தலைமை தாங்கிய இடத்திற்கு விரைந்தான். அவனது கணக்கு முற்றிலும் தப்பிதமானது. ஒரு கோட்டையின் அருகே போருக்குச்சென்றபோது மகாராணி

Read More

மராட்டியர்களின் கொரில்லா போர் நடவடிக்கை முகலாயர்களை பல இடங்களில் வீழ்த்தியது

https://www.youtube.com/watch?v=6y3BVdLoONI?cc_lang_pref=ta&cc_load_policy=1 1690ம் ஆண்டுகளில் மராட்டியர்கள் மிகவும் பலம்வாய்ந்த படைகளை நிறுவினர். பல்வேறு இடங்களிலும் அவர்கள் இந்த கொரில்லா போர்நடவடிக்கை மூலம், திடீர் தாக்குதல் ஓடிஒளிதல் என்ற முறையைப்பின்பற்றி எதிரிகள்படைகளின் தேய்மானத்திற்கு வழிவகுத்தார்கள். முகலாயரின் பணப்பேழைகள் விரைவில் காலியாகத் தொடங்கின. சுமார் 15000 படைவீரர்களை ஒவ்வொரு வருடத்திலும் இழக்க நேர்ந்தது. அக்பர் காலம் தொடங்கி ஷாஜஹான், ஜெஹாங்கீர் வரை கஜானாக்கள் வைப்பறைகள் திறக்காமல் இருந்த நிலைமாறி செங்கோட்டையில் அவை திறக்கப்பட்டு பணம் செலவழிக்க அவசியம்

Read More

சிவாஜி ஏன் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டார்

  https://www.youtube.com/watch?v=nnY-pRlpL5U?cc_lang_pref=ta&cc_load_policy=1 சத்ரப சிவாஜி முடிசூட்டு விழாவிற்குப்பின்னர் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டு, அனேகமாக செஞ்ஜி வரை சாம்ராஜ்யத்தை விரிவாக்கி நிறுவினார். இது அவருடைய பேரரசின் மைய உள்பகுதியாகும். ஸ்வராஜ்யா கார்வாரிலிருந்து நாஸிக்கிற்கு வடக்கே அனேகமாக குஜராத் எல்லைவரை பரந்து விரிந்திருந்தும், 1676ம் ஆண்டில் சிவாஜி தென்திசை நோக்கி போர்வினைப்பயணம் மேற்கொண்டார். ஒரு காரணம் பொருள்வளம் நிறைந்து விளங்கிய அடில்ஷாஹி அரசு. அடில்ஷாஹி அரசும், குதூப்ஷாஹி அரசும் பாதி சுயாதீனமாக செயல்படும் இந்து

Read More

மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜி கோர்ப்பாடே ஔரங்கசீப்பின் கூடாரத்தை திடீர் தாக்குதல்

  https://www.youtube.com/watch?v=jn7-0z71aXg?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஒருசமயம் ஔரங்கசீப்பின் போர்முகாமிலேயே மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜிகோர்ப்பாடே ஒரு துணிகரமான திடீர்தாக்குதல் நடத்தினார். ஔரங்கசீப்பின் முகாம் அப்போது பூனாவிற்கு அருகே கோரேகாம் என்ற இடத்தில் தங்கி சக்கன் கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஸாந்தாஜிகோர்ப்பாடேயும் அவரது உளவாளிகளும் சேர்ந்து அந்த முகாமின் முழு வடிவமைப்பையும் துல்யமாகக் கண்டுபிடித்தனர். தேவகிரி யாதவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டுப்பார்க்கலாம். அவர்களுக்கு 15 மைல் தொலைவில் நடப்பவை தெரியவில்லை. ஸாந்தாஜி கோர்ப்பாடே போர்முகாமின்

Read More

சத்ரபதி சிவாஜியின் அடிப்படைத்திருத்தங்கள், ஹிந்தவி ஸ்வராஜ்யாவின் குறிக்கோளை உருவாக்கியமுறை

  https://www.youtube.com/watch?v=INVBllP_pG0?cc_lang_pref=ta&cc_load_policy=1 சத்ரபதி சிவாஜி பல்வேறு நிர்வாக, படைத்துறை அடிப்படை மாற்றங்கள் புகுத்தினார். அவை மராட்டியர்களின் நலனுக்கு பிற்காலத்தில் மிகவும் உதவியது. திரு. ராமச்சந்திர பந்த் என்ற ஆசிரியரின் 'ஆக்ஞா பத்திரம்' என்ற நூலில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவரைப்பற்றி பின்னர் கவனிப்போம். அவர் சத்ரபதி சிவாஜியின் அரசாங்கத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த ஒரு'அமத்யா'. 'அஷ்டப்ரதான் என்பவர்களுள் மிகவும் இளவயதினர். பிற்காலத்தில் மராட்டியர்களுடைய மிக்க செல்வாக்கு பெற்று, அரசியலில் முக்கியத்துவம் வாய்த்து விளங்கினார்.

Read More

தெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்

https://www.youtube.com/watch?v=BZQwrPxRLVI?cc_lang_pref=ta&cc_load_policy=1 ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரிக்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்றில், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில்  சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ  காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும்

Read More

முகலாய ஆதிக்கவெறியர்களின் தெய்வ உருவச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் மதக்கொள்கை

https://www.youtube.com/watch?v=S1TLN8sKzqo?cc_lang_pref=ta&cc_load_policy=1 அவர்கள் கோயில்களைத் தகர்த்தனர் என்ற கருத்துப்பாங்கு சமீப நூற்றாண்டுகளில் பல எஸ்கிமோக்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆயினும் தற்போது சில பத்தாண்டுகளாக மட்டும் மதசார்பற்ற அறிஞர்கள் பின் அவர்கள்வழி செல்லும் எஸ்கிமோக்கள், கோயில் தகர்ப்புகள் ஒன்றும் நடைபெறவில்லை என்றும், கோயில் ஒன்றுமே அந்த இடத்தில் இல்லை  என்றும் கூறத்தொடங்கியுள்ளனர். எஸ்கிமோக்கள் இதற்குமுன்வரை, கோயில் இருந்ததற்கான ஆராய்ச்சிரீதியான பாங்கை ஒப்புக்கொள்ளவோ, ஆம் அது தகர்க்கப்பட்டது என்று ஒப்புக்கொள்ளவோ தயக்கம் காட்டவில்லை. இதை முழுமையாகப்

Read More

ஒடியாக்கள் வங்கப்பெருங்கடல்கிழக்குப்பகுதியில் கடற்படைவரலாற்றின் முன்னோடிகள்

https://www.youtube.com/watch?v=wITcjJm0iHg?cc_lang_pref=ta&cc_load_policy=1 கடல்பயணங்கள் ஒடியாக்கரையிலிருந்து தென்கிழக்குஆசியாவை நோக்கிச்செல்வது மிகவும் கடினமக இருப்பது சிலகாலத்திற்குப்பின் தெரியவந்தது. அதனால் சிலர் குளிர்காலப் பருவ மழையின்போது தென்திசையில் இலங்கையை நோக்கிச்செல்வது சற்று எளிதாக இருப்பதை உணர்ந்தனர். அங்கிருந்து பூமத்தியரேகை நீரோட்டத்தை அனுசரித்து சுமத்ரா,ஜாவாவை நோக்கி  பயணம் செய்வது மேலும் எளிது என்று அறிந்தனர். இந்த மாறிய கடல்பயணவழி இந்தியாவின் தென்கிழக்கு ஆசியாவுடன் இருந்த உறவுகளை முற்றிலுமாக வேறுபடுத்தியது. முன்னர் தாய்லாந்து, இஸ்தாமுஸ்கிரா மூலம வியட்நாம் சென்றுவந்தது மாறி இலங்கைக்குச்சென்று

Read More

பல்லவஅரசன் 2ம் நந்திவர்மனும் அவனது தென்கிழக்கு ஆசிய வம்சமும்

https://www.youtube.com/watch?v=oouNn4gPyeY?cc_lang_pref=eng&cc_load_policy=1 பொதுவாக இந்தியர்கள் நினைப்பது இந்தியாவின் தாக்கம்தான் எப்போதும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் என்று. ஆனால் உண்மை அதுவல்ல. தென்கிழக்குஆசியா ஒன்றும் இந்தியாவின் வருகைக்காகவும் அதன் கொள்கைகளுக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. 8ம், 9ம், 10ம் நூற்றாண்டுகளில் அவர்களும் தங்களாலான ஆய்வுப்பயணம்மேற்கொண்டிருந்தனர். வெளிநாட்டுக்குடியிருப்புகள் மடாகாஸ்கர் பகுதியில், ஆப்பிரிக்க கடற்கரை ஓரம் நிறுவிய முதல் தேசம் இந்தோனேஷியாதான். மனிதசமுதாயத்தின் ஆரம்பகட்டம் ஆப்பிரிக்காவில் துவங்கியிருந்தும் வெகுஅருகே இருந்த மடாகாஸ்கரில் குடியிருப்புகள் இந்தோனேஷியா அமைத்தது, ஆப்பிரிக்கர் தென்கிழக்கு ஆசியா

Read More

சோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிராக பாண்டிய சிங்கள உடன்படிக்கை

https://www.youtube.com/watch?v=ynP7SylqJ4o?cc_lang_pref=ta&cc_load_policy=1 காலச்சக்கிரம் உருண்டோடியவண்ணம் இருந்தது. வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் 11ம் நூற்றாண்டில் சோழவம்ச அரசின் எழுச்சியோடு துவங்கியது. பெரும்பாலும் தெரிந்த விஷயமேதான், சோழ சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியாவில் தாக்குதல் தொடங்கியது. ஏனென்று தெளிவாகப் புரியவில்லை. ஆனால் சூழ்நிலை சான்றுகளின் ஆதாரப்படி பலகாரணங்களில் ஒன்றாக இதைக்கூறலாம். சோழர்கள் சீனாவின் ஸாங்பேரரசுடன் ஏராளமான வர்த்தகம் செய்துகொண்டிருந்தனர். சீனக்கடற்கரைஓரம் இந்துகோயில்களின் எஞ்சிய பகுதிகள்பல அந்தகாலத்தைச்சேர்ந்தவை கிடைத்துள்ளன. ஸ்ரீவிஜயன் காலத்தில் சுங்கவரித்தீர்வை மிகவும் அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி வணிகத்தில்

Read More

பண்டைய இந்திய பொருளாதாரத்தில் கோயில்களின் வர்த்தக மையங்களின் பங்கு

https://www.youtube.com/watch?v=2hHALUh5ixU?cc_lang_pref=ta&cc_load_policy=1 இப்போது எழும் கேள்வி இந்த வாணிப போக்குவரத்துக்கான அடிப்படைக்காரணம் யாது, பொருளாதாரக்கட்டமைப்பு என்ன? உங்களுக்குத் தோன்றலாம், இதற்கெல்லாம் அந்தநாளைய சாகசமிக்க வணிகர்களும் வியாபாரிகளும் காரணம் ஏனெனி்ல் அவர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து நீண்ட கடல்பயணங்களை மேற்கொண்டு தங்கள் பணத்தையும் முதலீடு செய்தனர். ஆனால் உண்மையில் அதுமட்டுமல்ல, மிகவும் மதிநுட்பமான ஒரு ஏற்பாடு இருந்தது.  பெரும்பாலான கடல்பயணங்கள் வெறும் தனிமனிதர்களின் போக்குவரத்தாக மட்டுமின்றி கூட்டுநிறுவனங்கள் மூலம் நடைபெற்றன. தற்போதைய வணிக நிறுவனங்கள்

Read More

இந்தியாவின் பொருளாதாரம் துருக்கியர்களின் ஆக்கிரமிப்புக்குப்பின் ஏன் சிதைந்து போயிற்று

https://www.youtube.com/watch?v=OXHk_9pwf8E?cc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் 11 ஆம்நூற்றாண்டில் தொடங்கி 12ம் 13ம் நூற்றாண்டில் நிச்சயமாக திடீரென்று மொத்த கட்டமைப்பும் கலைக்கப்பட்டது. இந்தியாவில் அப்போது துருக்கியர்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு எல்லாம் அழிக்கப்பட்டன. அது ஒரு அரசியல் ஆதிக்கம் மட்டுமல்ல, கோயில்கள் இடிக்கப்பட்டன, எல்லாவகை பொருளதார வரைமுறைகளும் கூட்டமைப்புகளும் நாசமாக்கப்பட்டன. நான் பலமுறை யோசித்ததுண்டு, ஏன் துருக்கிய ஆக்கிரமிப்புக்குப் பின் இந்திய வாணிபத்தில் அசாதாரண வீழ்ச்சி ஏற்பட்டது என்று. அதுவரை இந்துக்கள் மிகுந்த வணிகப் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்தனர். சரித்திரக்

Read More

தென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்

https://www.youtube.com/watch?v=K3wvhVBRrrA?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஒரு நூற்றாண்டுக்குப்பின் அதாவது 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெனரல் ஜெங்ஹி என்ற சீனஅலியின் தலைமையில், மிகப்பிரம்மாண்டமான கப்பல்கள், மிகப்பெரியவை மட்டுமல்ல, மிகநவீனமானவையயும் கூட, வரத்தொடங்கின. இந்தப்பிரம்மாண்ட பணக் குவியல் கப்பல்களின் வரிசை 14ம் நூற்றாண்டு துவக்கத்தில் தென்கிழக்கில் பயணம் தொடங்கி இந்தியாவை நோக்கி வந்து தென்னாப்பிரிக்கா சென்றன. இவைபோன்று பல வரிசைக்கப்பல்கள் ஜெனரல் ஜெங்ஹி தலைமையில் வந்தன. அவை கண்டுபிடிப்புக்கப்பல்கள் அல்ல நான் முன்கூறியபடி ஏற்கனவே வகுக்கப்பட்ட பழகிய கடல்பயண

Read More

உல்லால் ராணி அப்பக்கா போர்ச்சுகீசியர்களின் சக்திவாய்ந்த கடற்படையை வெகு தீரத்துடன் எதிர்த்தாள்

https://www.youtube.com/watch?v=g2ery1YQmoQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 இதைத்தவிர வேறுஉள்நாட்டு முயற்சிகளும் அன்னியர்களை எதிர்த்து வெற்றி கண்டனர். இதில் அனேகமாக யாவரும் மறந்துவிட்ட மாவீர அரசி அப்பக்காவும் அடங்குவள். அவளும் அவளது பெண் மற்றும் பேத்தி உட்பட சுமார் 80 ஆண்டுகாலம் போர்ச்சுகீசியர்களை மங்களூர் அருகே உல்லால் என்ற இடத்திலிருந்து எதிர்த்துப் போராடினர். அந்தக்கரை பிரதேசத்தில் அவள் தாய்வம்ச வழியில் வந்த தீரமான ராணி. அந்த வம்சத்தில் பெண்கள் தலைமைப்பொறுப்பு ஏற்பதும் மரபாகும். அவள் பெரும்பாலும் போர்ச்சுகீசியக் கப்பல்களை

Read More

சிங்களர் ஆதியில் ஓடியாக்கள்

https://www.youtube.com/watch?v=mrWhpsQfSW8?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தறபோதைய ஒரிஸ்ஸா, மேற்கு வங்கப்பகுதிகளில் ஓர் திடீர் எழுச்சியாக கடல் சார்ந்த வாணிபமும் செயல்பாடுகளும் நடக்கத்தொடங்கின. கங்கைநதியின் மேற்குக்கோடியான வடிகால், இப்போது ஹூக்ளி எனப்படும் இடத்திலிருந்து கீழே தெற்கில் சில்லிகாஏரி வரை, இந்த மாகாணத்தில்  ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெகுசமீப காலத்தில்,சிலவாரங்களுக்கு முன்பு என்றே கூறலாம், புவனேஸ்வர் நகருக்கு சற்று வெளியே,  சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய  சிற்றூர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தகிழக்கு கடற்கரை ஓரம்

Read More

இந்திய வரலாறு என்பது கண்டநிலப்பரப்பு மட்டுமல்ல கடல்சார்ந்த பகுதிகளையும் உள்ளடக்கியது

https://www.youtube.com/watch?v=vKo0Eu0XUxE?cc_lang_pref=ta&cc_load_policy=1 இன்றைய எனது பேச்சின் மையக்கருத்து கடல்சார்ந்த பகுதிகளின் இந்திய வரலாறு. இது ஒரு சுவாரசியமான விஷயம், ஏனெனில் இந்தியா உலகளவில் கடல்சார்ந்த பகுதிகளின் வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்றாகத்திகழ்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் வரலாற்றுப் புத்தகங்களில் பெரும்பாலும் கண்டநிலப்பரப்பு சம்பந்தமாகவே படித்து வந்துள்ளோம். எனவே ஒருவர் இந்தத்துறையில் வல்லுனராக இல்லையேல் இந்தியவரலாறு முக்கியமாக அந்த காலத்தில் பாடலிபுரத்திலிருந்து இன்றைய டில்லி வரை ஆண்டுவந்த ராஜபரம்பரைகளைப் பற்றியது எனநினைத்தால் தவறில்லை. நான் இங்கு பேசப்போகும்

Read More

கம்போடியா, வியட்நாம் தேசங்களின் கேமெர்,சார்மே கலாச்சாரத்தின் இந்தியத்தொடர்பு

https://www.youtube.com/watch?v=Wx_i-4xI-UY?cc_lang_pref=ta&cc_load_policy=1 கம்போடியா, வியட்நாம் தேசங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் மூலம் ஒரு கதை தெரியவருகிறது. இதற்குப் பின்னரே  அங்கோர், சார்மே கலாச்சாரங்கள் தோன்றின. இந்தக்கதை பின்வருமாறு. கௌண்டின்யன் என்கிற பிராமணன் தற்போதைய தெற்குவியட்நாம், தெற்குகம்போடியா பகுதிகளில் மேகாங் என்ற இடம் வழியாக கடற்பயணம் மேற்கொண்டான். கப்பலில் அவனுடன் பல வணிகர்கள் இருந்தனர். அப்போது கடல்கொள்ளையர்கள் தாக்கினர். அவன் மிகவும் வீரத்தன்மையுடன் எதிர்த்து அவர்களை விரட்டிவிட்டான். இந்த சண்டையில் கப்பலில் கசிவு ஏற்பட்டது. அதை

Read More

தெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்

https://www.youtube.com/watch?v=BZQwrPxRLVI ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரிக்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்றில், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில்  சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ  காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும்

Read More

ராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்.

https://www.youtube.com/watch?v=RRYO-OJbBzQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ASI க்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் இந்த விவகாரமும் அடங்கும். எனது பேச்சை நிறைவு செய்யுமுன் இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி ஒரு அறிமுகம் செய்துவிடலாம் என நினைக்கிறேன். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியவை மிகவும் கோரமானவை. எப்படி இன்றும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டும் விஷயம். இடதுசாரரி வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து செயல்படும் முறைப்படி, அந்த பெரிய நால்வர் RS

Read More

தொல்பொருள்துறை ஆய்வின் சான்றுகள் ராம் ஜன்மபூமி பாபர்மசூதியைப் பற்றி தெரிவிப்பது என்ன?

  https://www.youtube.com/watch?v=kJvAm3CxtjM இவற்றில் எதுவும் இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. எனவே கடைசியில் 2003ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ASI யிடம் பாபர்மசூதி இடத்தைத்தோண்டி அதன்கீழே ஒருகோயில் உள்ளதா என பார்க்கக் கோரியது. உயர்நீதி மன்றம் ASI க்கு சில கண்டிப்பான செயல்முறை விதிகள் வகுத்தது. அந்த வளாகத்தில் ஒவ்வொரு நாளும் பாபர்மசூதி செயல்குழுவின் பிரதிநிதி ஒருவரும், ராம் ஜன்மபூமி குழு நபர் ஒருவரும் இருத்ல் அவசியம். என்னவெல்லாம் தோண்டுதலில் கிடைக்கிறதோ, அவற்றை ஒரு

Read More

பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்

https://www.youtube.com/watch?v=Z685tCBXc38&t=1s நாம் சுதந்திரம் அடைந்த சிறிது காலத்தில் இது நடந்தது. பலருக்கும் தெரியாமலிருக்கலாம். இந்துமக்கள் சமுதாயம் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட கோரிக்கை விடுத்தது. உத்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உ.பி. அரசாங்கம் அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. சமூகத்தின் மனோபாவம் கோயில் கட்டவேண்டும் என்றே உள்ளது. ஆனால் 1949ம்ஆண்டு டிசம்பர் 23ந்தேதியன்று பாலகன் ராமன் உருவச்சிலை ஒன்று பாபர்மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது.

Read More

ராமாயணத்தை கலைவடிவங்களாக சித்தரித்தல்

https://www.youtube.com/watch?v=mK01SiZTmN0&t=8s வெகுகாலம் முன்பே ராமாயணக்காட்சிகளை கலைவடிவங்களாகச் சித்தரித்ததை நாம் பார்த்துள்ளோம். முதன்முறையாக கி.மு.2ம்நூற்றாண்டில் ராமாயணகாட்சியைச் சித்தரித்த ஒரு 'டெராகோட்டா' ஓவியம் உள்ளது. அதில் ராவணன் சீதையைக் கடத்திச் செல்லும்போது, சீதை தனது ஆபரணங்களைக்கழற்றி, யாரேனும் ஒருவர் அதன்மூலம் தன்னைக்கண்டுபிடிக்கக்கூடும் என எண்ணி, கீழே வீசி எறியும் காட்சி, சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கி.மு.2ம்நூற்றாண்டில் வரையப்பட்ட ராமாயணக்காட்சி. பல்வேறு கலைவடிவங்கள் பலநூற்றாண்டுகள் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றன என்பது நமக்குத்தெரியும். ஆனால் இந்த ராமாயணக்காட்சி இவ்வாறு இத்தனை காலம்

Read More

அயோத்தியைப்பற்றி ஐரோப்பிய பயணிகளின் கருத்து

https://www.youtube.com/watch?v=kr_ZFjAgaQQ இரண்டு ஐரோப்பிய கணிப்புகள் உள்ளன. முதலாவதாக வில்லியம் பிஞ்ச் என்ற நபர் அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்ட 85 ஆண்டுகளுக்குள் வந்திருந்தார். அவர் கூறுவதாவது.. இந்துக்கள் இங்கு வந்து ஸரயு நதியில் நீராடிச் செல்கின்றனர். அந்தணர்கள் வந்து இங்குவரும் யாத்ரிகர்களின் பெயர் முதலிய விவரங்களைச் சேகரித்துவருகின்றனர். வில்லியம் பிஞ்ச் முஸ்லிம்கள் இருந்ததைப் பற்றியோ நமாஸ்தொழுகையைப்பற்றியோ ஒன்றும் கூறவில்லை. இந்துக்களைப்பற்றி மட்டுமே சொல்கிறார். இரண்டாவதாக, ஒரு ஜேஸுவிட் பாதிரி ஜோஸப் டிப்பின் தேலா

Read More

அலகாபாத் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அயோத்தியா வழக்கில்

  https://www.youtube.com/watch?v=jJRwZJiD-c4?cc_lang_pref=ta&cc_load_policy=1 இது ஒரு சுவாரசியமான விஷயம். ஜன்மஸ்தான் மஹந்த்களுக்கும் பாபர்மசூதி கண்காளிப்பாளருக்கும் இடையே நடந்த மோதலின்,போட்டியின் நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டத்திலும், பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது எல்லா ஆவணங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டன. இதில் முதல் ஆவணம் 1858ம்ஆண்டு நவம்பர் 28ந் தேதியிட்ட அறிக்கை. இது அவாத் தாணேதார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை FIR. அவர் கூறுகிறார்..25 சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர், பாபர்மசூதியுள்

Read More

விஷ்ணுஹரி கல்வெட்டும் உண்மையை ஒடுக்க இடதுசாரி வரலாற்றுவல்லுனர்களின் முயற்சிகளும்

  https://www.youtube.com/watch?v=E8Zy44ARn6c 1992ம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அப்போது மசூதியின் சுவர்களிலிருந்து ஒரு பகுதி 5 அடிக்கு 2 அடி கீழே விழுந்தது. அதிலிருந்த கல்வெட்டு 'விஷ்ணுஹரி கல்வெட்டு' என அழைக்கப்படுகிறது. அது கோயிலின் வரலாற்றைத் தெரிவிக்கிறது. அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வியல் கல்வெட்டியல் இலாகாவை, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து எழுத்தை அர்த்தப்படுத்துமாறு பணித்தது. எனவே இந்திய  தொல்பொருள் ஆய்வியல் தலைமை கல்வெட்டியல் நிபுணர் திரு.k.v. ரமேஷ் அந்த கல்வெடடில் உள்ளபடியே

Read More

ராமர்கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயங்கள்

https://www.youtube.com/watch?v=QP3UJLN3_JA&t=9s அயோத்தியில் ராமர் கோயிலை அழித்ததற்கான இலக்கியத்தடயம் என்ன உள்ளது ? 18ம் 19ம் நூற்றாண்டுகளில் பல்வேறு சரித்திரங்கள் அரபுமொழியிலும், பெர்ஷியமொழியிலும், உருதுமொழியிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில்கூட பாபர்மசூதி காலி இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறவில்லை. பெர்ஷியன்,உருது,அராபிய சரித்திரங்கள் 18ம் 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்டயாவும் சொல்வது என்னவென்றால், பாபர் ராமர்கோயிலை அழிக்க உத்தரவிட்டதாகவும், அதன்பின்,அந்த இடத்தில் மசூதி ஒன்றைக்கட்ட உத்தரவிட்டதாகவும் தெளிவாகக் காணப்படுகிறது.இதற்குமாறாக ஒரு புத்தகத்திலுமில்லை.நான் குறிப்பிடுவது பல அறிஞர்கள் ஆய்ந்த அராபிய,பெர்ஷிய,உருது மொழி

Read More